மொத்தப் பக்கக்காட்சிகள்

ஸ்டார் ஹெல்த் இளம் இந்திய தலைமுறையினருக்காக ப்ரத்யேகமான யங் ஸ்டார் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!

ஸ்டார் ஹெல்த் இளம் இந்திய தலைமுறையினருக்காக ப்ரத்யேகமான யங் ஸ்டார் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!
*      
இந்தியாவின் உடல்நலனில் அக்கறைக் கொண்ட மில்லினியல்கள் எனப்படும் 1996-க்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையினரின்  வாழ்நாள் முழுவதுக்குமான முதல் சுகாதார காப்பீட்டுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  -

சென்னை, மார்ச் 11, 2020: 

இந்தியாவின் முன்னணி உடல் ஆரோக்கியம் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் & அல்லய்ட் இன்ஸ்சூரன்ஸ் [Star Health and Allied Insurance], - 18-40 வயதுடைய இளையதலைமுறையினரின் குறிப்பிட்டத்தக்க உடல் ஆரோக்கிய தேவைகளுக்காக யங் ஸ்டார் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி [Young Star Insurance policy] -யை அறிமுகப்படுத்தியுள்ளது

யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசி வாடிக்கையாளர்களுக்கு ஊக்குவிக்கும் அம்சங்களுடனான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத் திட்டங்கள், மிகக் குறைந்த காத்திருப்பு காலம், காப்பீடு செய்யப்பட்ட தொகையை தானாக மீட்டமைத்தல் [incentive-led wellness programmes, lowest waiting periods, automatic restoration of sum insured] போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

                யங் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி,  வாடிக்கையாளர்களுக்கு (36 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள்) தங்கள் பாலிஸியை தொடர்ந்து புதுப்பித்து கொண்டே வந்தால், அதற்கேற்ற பிரீமியத்தில் 10% வாழ்நாள் தள்ளுபடியை வழங்குகிறது. உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் எந்தவொரு சாலை போக்குவரத்து விபத்துகளுக்கும் 25% (அல்லது ரூ. 1 லட்சம் வரை) கூடுதல் அடிப்படை காப்பீட்டுத் தொகையை இந்த காப்பீட்டுத் திட்டம் வழங்குகிறது. யங் ஸ்டார் பாலிஸி தனிநபர்கள் அடிப்படையிலும்,  ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டங்களிலும் கிடைக்கிறது

மேலும் காப்பீட்டு தொகையின் அளவு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையில் தேர்ந்தெடுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.


                ’யங் ஸ்டார் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி [Young Star Insurance policy]’-யை பற்றி ஸ்டார் ஹெல்த் & அல்லய்ட் இன்ஸ்சூரன்ஸ் கோ லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த் ராய் [Mr. Anand Roy, Managing Director, Star Health and Allied Insurance Co. Ltd.]  கூறுகையில், ‘’எங்கள் நுகர்வோர்களுடனான நெருக்கமான  செயல்பாடுகளின் மூலம், நாற்பது வயதுக்குட்பட்ட மில்லினியல்கள் தலைமுறையினர் தங்கள் உடல்நல தொடர்பான செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதற்காக சுகாதார காப்பீட்டை வாங்கத் தயங்குகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். மேலும் தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டங்களில் தங்களுடைய  முக்கிய தேவைகளை, எதிர்பார்புகளைப் பூர்த்தி செய்யும் அம்சங்கள் எதுவுமில்லை என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்

அதனால்தான் நாங்கள் அவர்களுக்காகவே ப்ரத்யேகமாக யங் ஸ்டார் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி [Young Star Insurance policy]-யை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த புதிய காப்பீடு, வாழ்நாள் முழுவதும் பிரீமியத்தை தொடர்ந்து புதுப்பித்தால் சிறப்புத் தள்ளுபடிகள், ப்ரீமியத்தை தவணை முறையில் கட்டும் வாய்ப்புகள் [instalment premium options], உடல் நலத்தை நன்றாக பாதுகாத்து வந்தால் அதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நல்வாழ்வு திட்டங்கள், குறைந்த காத்திருப்பு காலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த காப்பீட்டுத் திட்டம் வழங்குகிறது

மேலும் மன நலம், வெளி நோயாளி சிகிச்சை, கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சைப் பெறுதல் போன்றவற்றுக்கான காப்பீட்டையும் இத்திட்டம் அளிக்கிறது என்றார்.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லய்ட் இன்சூரன்ஸ் நிறுவனம் பற்றி….:
                ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லய்ட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் 2006-ம் ஆண்டு தனது சேவைகளைத் தொடங்கியது. இந்த நிறுவனம்தான் இந்தியாவில் சுகாதாரம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்காக ப்ரத்யேதமாகத் தொடங்கப்பட்ட முதல் காப்பீட்டு நிறுவனமாகும். பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை இந்த நிறுவனம் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளதுசுகாதாரம், தனி நபர் விபத்துக் காப்பீடு, வெளிநாட்டுப் பயணக் காப்பீடு [Health, Personal Accident & Overseas Travel Insurance] உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காப்பீட்டு சேவையை இந்நிறுவனம் வழங்குகிறது

சிறபபான சேவைகளை வழங்குவதற்காகவும் புதுமையான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் இந்த நிறுவனம் தனது விரிவான வளங்களை பயன்படுத்துகிறது. தனிநபர்கள், குடும்பத்தினர் மற்றும் நேரடியாக பெரு நிறுவனங்கள் என பலருக்கும் புதுமையான சுகாதார, ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டங்களை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வழங்கி வருகிறது

முகவர்கள், தரகர்கள், இணைய தளம் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் காப்பீட்டு பாலிசிகள் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைகின்றன. ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வங்கிகளுடன் இணைந்து காப்பீட்டு சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது

ஏற்கெனவே பல்வேறு வங்கிகளுடன் நீண்ட கால உறவுகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. 2019-ம் நிதி ஆண்டில் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் மொத்தம் ரூ. 5412 கோடியை பிரீமியத் தொகையாக ஈட்டியுள்ளது. மேலும் 31-03-2019 நிலவரப்படி நம்பிக்கை பாதையாக மொத்த மதிப்பாக ரூ. 1480 கோடி ரூபாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தற்போது, நாடு முழுவதும் உள்ள தமது 500-க்கும் மேற்பட்ட கிளைகளில் மொத்தம் சுமார் 11,000-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு வலுவாக செயல்படுகிறது.
--------------------------------------------------------------------
மேலும் விவரங்களுக்கு http://www.starhealth.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.



Star Health and Allied Insurance
Mobile No: 9789044995
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...