மொத்தப் பக்கக்காட்சிகள்

வாஸ்து வழிகாட்டல்:எந்த மாதம் வீடு கட்டலாம், எந்த மாதம் கட்டக் கூடாது?


வாஸ்து வழிகாட்டல்:எந்த மாதம் வீடு கட்டலாம், எந்த மாதம் கட்டக் கூடாது?

-    வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

தேவர்களின் தச்சனான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரம்.

பிற்காலத்தில் பல்வேறு ரிஷிகளும் பண்டிதர்களும் அதை நூல்களாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.
சிற்ப ரத்தின சமுச்சயம்எனும் நூல் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது.
வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம்
குடும்ப வாழ்வில் உழலும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாச தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாசிகளுக்கு ஆசிரமம் என்பது மிக முக்கியம்.
நாட்டையும் மக்களையும் நல்லவிதத்தில் கட்டிக் காக்கும் ஓர் அரசனுக்கு அரண்மனை முக்கியம்.
இந்த உலகத்தில் வாழும் சகல ஜீவராசிகளும் வழிபட்டுத் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்ள ஆலயம் என்பது முக்கியம்.
இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அங்கு சுகமும் நிம்மதியும் என்றென்றும் நிலவும்என்கிறது அந்த நூல்.
நம் மூதாதையர்கள், இந்த சாஸ்திரத்தைப் பின்பற்றியே வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள். நாமும் இந்த சாஸ்திரத்தின்படி நாம் குடியிருக் கும் இடத்தை, தொழில் நிலையங்களை அமைத் துக்கொண்டால் சகல வளங்களும் பெருகும். அதற்கேற்ப, வாஸ்து தொடர்பான சில வழிகாட்டல் களை அறிவோமா!
பிருகு, அத்ரி, வசிஷ்டன், விஸ்வகர்மன், மயன், நாரதன், விசாலாட்சன், புரந்தரன் ஆகியோர் தேவ சிற்பிகள். சிற்ப சாஸ்திரத்திலும் கட்டடங் களை நிர்மாணிப்பதிலும் விற்பன்னர்களான இவர்களை, நாம் வீடு கட்டும்போது வணங்கு வது பெரும் சிறப்பாகும்.

வெளிச்சம்
வெளிச்சம் உள்ளே வந்தால்தான் வீடு, வீடாக இருக்கும். வீடு இருக்கும் இடம், வீட்டின் முகப்பு, வீட்டின் வடிவம், கதவு இருக்குமிடம், கேட் இருக்குமிடம், ஜன்னல் இருக்குமிடம், ஜன்னலின் டிஸைன் ஆகியவைதான் காற்று, வெளிச்சம் போன்ற பஞ்ச பூதங்களோடுகூடிய தொடர்பைத் தீர்மானிக்கின்றன.
ஆகவே, இவற்றை அமைப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
வீடு வடக்குப் பார்த்து இருக்கலாம். வடக்கு என்பது புதனின் செல்வாக்கு உள்ள திசை என்பது சீன தேசத்து வாஸ்துவின் கோட்பாடு. புதனின் செல்வாக்கால் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் கல்வியும் பெண்களின் நலனும் சிறப்பாக இருக்கும் என்று சீன வாஸ்து குறிப்பிடுகிறது.
வீடு கட்ட முதன் முதலில் பயன்படுத்தப் படும் கல்லை (எந்தக் கல்லாகவும் இருக்கலாம்) மேஸ்திரி அல்லது வீடு கட்ட உதவும் பொறியாளரிடமிருந்து வாங்கி, பத்திரமாகப் பாதுகாத்து வைக்கவேண்டும்.
 அந்தக் கல்லை வாங்கி வைக்க நல்ல நேரம் பார்க்கவேண்டும். வாங்கி வைத்த கல்லை வீட்டில் பாதுகாக்கும் நேரத்தில், ஒரு பிதுர் ஸ்தானத்துக்கு உரிய மரியாதையை அதற்குத் தர வேண்டும். இதைப் பற்றி சில்ப சாஸ்திர சித்தாந்தம் என்ற நூல் விரிவாகக் கூறுகிறது.
திசைகள்
கிழக்குப் பக்கம் பார்த்த வீடுகள் கட்டும் வேலைகளை ஆடி, தை மாதங்களில் செய்யவேண்டும்.
மேற்குப் பக்கம் பார்த்த வீடுகள் கட்டும் வேலைகளை ஆவணி, மாசி மாதங்களிலும்;
வடக்குப் பக்கம் பார்த்த வீடுகளை வைகாசி, கார்த்திகை மாதங்களிலும்;
தெற்குப் பக்கம் பார்த்த வீடுகளை ஐப்பசி, சித்திரை மாதங்களிலும் தொடங்கவேண்டும்.
ந்தவொரு காலி மனையை வாங்குவதற்கும் வாஸ்து பார்க்கத் தேவையில்லை.
ஒவ்வொரு மனையிலும் வாஸ்து பகவான் குடியிருக்கிறார். அங்கு ஒரு கட்டடம் கட்டும்போதுதான் வாஸ்து தேவைப்படுகிறது.
பூமியாகிய ஸ்திரீக்குப் பூஜை செய்ய, வாஸ்துவாகிய புருஷனை அழைக்க வேண்டும். இதற்குக் கிரகங்களாகிய குழந்தைகளும் ஆதாரமாக இருக்கவேண்டும். இப்படி உத்தமமான முறையில் தொடங்கிச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நன்மையை மட்டுமே விளைவிக்கும்.
தொழிற்சாலைகள்
தொழிற்சாலைகள் கட்டும்போது குபேர திசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வழக்கம் இருக்கிறது.
மைய வடக்குப் பகுதிதான் குபேர திசை. அங்கேதான் குபேரன் உட்கார்ந்திருக்கிறார்.
ஆகவே, தொழிலில் முன்னேற குபேர திசையில் முக்கிய அலுவலகம், பணம் நடமாடும் இடம் ஆகியவற்றை அமைக்கவேண்டும்.
வடக்கு, குபேர திசையானதால், அங்கே முன் வாசலையும் அமைக்கலாம்.
ஜோதிஷ பிரம்ம ரகசியம்
`ஜோதிஷ பிரம்ம ரகசியம்என்ற நூலில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வீடு கட்டுவதால் உண்டாகும் பலன்களையும் குணக்கேடுகளையும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
சித்திரை மாதத்தில் வீடு கட்டினால், சுகமாக இருக்கும்.
 வைகாசியில், தனவிருத்தி உண்டாகும்.
ஆனியில் வீடு கட்டக் கூடாது.
ஆடியில் சுபத்தைக் கொடுக்கும்.
ஆவணியில் வீடு கட்டினால், வேலைக்காரர்களே இருக்கமாட்டார்கள்.
புரட்டாசியில் கட்டினால் வியாதி வரும்.
ஐப்பசியில் கட்டுவது விசேஷம்.
கார்த்திகையில் கட்டினால் பணம்-பொருள் சேரும்.
மார்கழியில் கட்டக் கூடாது.
தை மாதம் கட்டினால் எண்ணிய காரியம் நிறைவேறும்.
மாசியில் கட்டினால் ரத்தினங்கள் சேரும்.
 பங்குனியில் வீடு கட்டக்கூடாது.
வாஸ்து நாள்கள்
ருடத்துக்கு ஸ்திரமான எட்டு வாஸ்து நாள்கள்.
 அவை எப்போதும் மாறாதவை.
10 ஆம் தேதி சித்திரை: காலை 8 -9:30
21 ஆம் தேதி வைகாசி: 9:12 – 10:42
ஆனி  வாஸ்து நாள்கள் கிடையாது.
11 ஆம் தேதி ஆடி: 6:48 – 8:18
6 ஆம் தேதி ஆவணி: 2:24 – 3:54 (மதியம்) இதில் வீடாக இல்லாத கோயில், தொழிற்சாலை போன்றவற்றைக் கட்டலாம்.
புரட்டாசி: வாஸ்து நாள் கிடையாது.
11 ஆம் தேதி ஐப்பசி: 6:48 – 8:18
8 ஆம் தேதி கார்த்திகை: 10:00-11:30
மார்கழி: வாஸ்து நாள் கிடையாது.
12 ஆம் தேதி தை: 9:12-10:42
23 ஆம் தேதி மாசி: 9:12-10:42
பங்குனி: வாஸ்து நாள்கள் இல்லை.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...