மொத்தப் பக்கக்காட்சிகள்

கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் 40.7% மற்றும் 28% அதிகரிப்பு
நுகர்வோர் கடன் வளர்ச்சியில்  கூடுதல் கவனம்

·         கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களின் உயர்வால் ஒட்டுமொத்த கடன் நிலுவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன

·         வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்துகளுக்கு எதிரான கடன்களுக்கான தேவை வீழ்ச்சியடைகிறது, அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்களுக்கான கடன் தேவை அதிகரிக்கிறது
·         கிராமப்புறங்கள் மற்றும்  சிறு நகர்ப்புறங்களில்  கடன் வழங்கும் பெரிய நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.

நுகர்வோர் கடன் தொடர்ச்சியான வளர்ச்சியை பெற்று வருகிறது. இதற்கு கடன் அட்டைகள் மற்றும் தனிநபர் கடன்கள் (credit cards and personal loans) உள்ளிட்ட நுகர்வு கடன்கள் அதிகரிப்பாகும். இந்த விவரங்கள்,  புதிதாக வெளியிடப்பட்ட 2019 ஆம் காலண்டர் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான, டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL CY Q3 2019)  தொழில் நுண்ணறிவு அறிக்கையில் (Industry Insights Report) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், பரந்தகடன் சந்தையில் வளர்ச்சி தொடர்ந்து  குறைந்துள்ளது. ஒட்டுமொத்த தவணை தவறும் விகிதங்கள் (delinquency rates) ஓரளவு அதிகரிப்பைக் காட்டின, பல்வேறு திட்டங்களின் செயல்திறனில் பெரிய மாறுபாடுகள் இருந்தன.

மூன்றாம் காலாண்டு முடிவுகள், ஆண்டின் முதல் பாதியில் காணப்பட்ட போக்குகளின் தொடர்ச்சியான மேம்பாட்டைக் காட்டுகின்றன, கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பெரும் பொருளாதார (macro-economic) நிலைமைகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். 2019 ஆம் காலண்டர் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3 2019),  அனைத்து முக்கிய நுகர்வோர் கடன்  திட்டங்களிலும் ஒட்டுமொத்த நிலுவைகள் (balances),13.1%அதிகரித்தன. இந்த அதிகரிப்பு, 2018 ஆம் காலண்டர் ஆண்டின் மூன்றாம் காலாண்டில்  23.2% ஆக இருந்தது. இப்போதும் அதிகமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஆறாவது காலாண்டாக கடன் நிலுவைகள் அதிகரிப்பு குறைந்துள்ளது.

இந்த வளர்ச்சி அனைத்து முக்கிய நுகர்வு கடன் வகைகளிலும் ஒரே மாதிரியாக இல்லை.
2019 ஆம் காலண்டர் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களின் நுகர்வு கடன்கள் முறையே 40.7% மற்றும் 28.0% வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன.  அதேநேரத்தில், வாகனக் கடன்கள், சொத்துக்களுக்கு எதிரான கடன்கள் (loans against property -LAP) மற்றும் வீட்டுக் கடன்கள் முறையே 10.3%, 11.6% மற்றும் 10.0% என மிதமான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன.

இதேபோல், ஒட்டுமொத்த புதிய கடன்கள் வழங்குவது 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 32.1% வளர்ச்சியடைந்தன. ஆனால், இந்தச் சராசரி  பல்வேறு திட்ட வகைகளில் மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது., ஏனெனில் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பெரும்பகுதி ஒரு குறிப்பிட்ட கடன் வகையால் இயக்கப்படுகிறது. நுகர்வு கடன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிநபர் கடன் புதிய கணக்குகள், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மிக அதிகமாக அதாவது வளர்ச்சியை 133.9% ஆக பதிவு செய்துள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில் புதிய தனிநபர் கடன்களில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி - Non-banking financial companies -NBFCs), அவற்றின் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன. அவை, சிறிய மதிப்புள்ள தனிநபர் கடன்களை அளிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. என்.பி.எஃப்.சி வழங்கும் தனிநபர் கடன்களின் சராசரி அளவு (.டி.எஸ் - verage ticket size - ATS) 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில்   37 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தது. இது, 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில்   94 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

பிற கடன் திட்டங்களின் புதிய வளர்ச்சியைப் பார்க்கும்போது, கிரெடிட் கார்டு கடன்  2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆரோக்கியமாக 20.9% வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதே நேரத்தில் எல்.ஏ.பி கடன் வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.2% ஆக ஓரளவு வளர்ச்சிக் கண்டுள்ளது. இதற்கிடையில், புதிய வீட்டுக் கடன்கள் (-12.9%) மற்றும் வாகனக் கடன்கள் (-1.0%) வளர்ச்சி சரிவைக் கண்டன. புதிய கடன்களின் தவணை   ஒட்டுமொத்த நிலுவைகளின் வளர்ச்சி, 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பெரிய அளவில் இல்லை. 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 15.1% அதிகரிப்பாக இருந்தது.
இருந்த போதிலும் இந்த வளர்ச்சி அனைத்து கடன் திட்டங்களிலும் ஒரே சீராக இல்லை.

புதிய நுகர்வோர் கடன்களின் நிலுவைகள் (தனிப்பட்ட கடன்கள் மற்றும் நுகர்வோர்  கடன்கள்) 24.1%  ஆக  அதிகரித்திருக்கின்றன. அதேநேரத்தில், சொத்து நிதி  திட்டங்களின் (ஆட்டோ கடன்கள், இரு சக்கர வாகனக் கடன்கள், எல்.ஏ.பி, வீட்டுக் கடன்கள்) 8.4% குறைந்துள்ளன.

புதிய கடன்களில் மொத்த நிலுவைகளில் நுகர்வோர் கடன் திட்டங்களின் பங்களிப்பு 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 31.2% ஆக அதிகரித்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 25.1%  ஆக இருந்தது.

எங்கள் கண்டுபிடிப்புகள், நுகர்வோர் கடன்களை நோக்கிய மாற்றம் மிகவும் நீடித்து வருவதாகவும், இந்தத் திட்டங்களுக்கு அதிக தேவை இருப்பதாகவும் தெரிவிக்கின்றன
தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான நுகர்வோர் விசாரணை அளவுகள் இந்தக் காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. அதேநேரத்தில், சொத்துகளுக்கு எதிரான கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான விசாரணைகள் பரவலாக மாறாமல் இருக்கின்றன அல்லது சற்று குறைந்திருக்கின்றன என்று டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் துணைத் தலைவர் அபய் கெல்கர் ( Abhay Kelkar, vice president of research and consulting for TransUnion CIBIL) தெரிவித்தார்.

கடன் தேவையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு,  நுகர்வோர் உணர்வு மற்றும் பரந்த பெரும் பொருளாதார அழுத்தங்கள் காரணங்களாக  இருக்கலாம். பெரிய  சொத்துகளை புதிதாக கடனில் வாங்குவது குறைவதற்கு தேவை குறைந்திருப்பது  காரணமாகும். அதே நேரத்தில் நுகர்வோர்கள், நுகர்வோர் கடன் திட்டங்களுக்குத் திரும்பக்கூடும். இந்தக் கடன்கள் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு நிதி உதவி அளிக்க உதவுகிறது.
 நுகர்வோர் கடன் தேவையின் இந்த மாற்றத்தை கடன் வழங்கும் நிறுவனங்கள் புரிந்துகொள்ள தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.”
 2019 மூன்றாம் காலாண்டில் இந்திய நுகர்வோர் கடன் சந்தை ஒரு பார்வை - நுகர்வோர் கடன் வழங்குதல் வளர்ச்சி

கடன் திட்டம்
விசாரணை அளவு  YoY % Change
புதிய கடன்கள் அளவு YoY % Change
மொத்த நிலுவை YoY% Change
அதிக தவணை தவறும் விகிதம்1 YoY Basis Point Change
பழைய கடன் தவணை தவறுதல்2 YoY Basis Point Change
கடன் அட்டை
42.6%
20.9%
40.7%
+10
-78
தனிநபர் கடன்
65.6%
134.0%
28.0%
-5
-55
வாகனக் கடன்
16.5%
-1.0%
10.3%
-22
+151
வீட்டுக் கடன்
-2.1%
-12.9%
10.0%
+13
-312
சொத்துகளுக்கு எதிரான கடன்
0.1%
1.2%
11.6%
+52
-205
1.     Serious delinquency rates are measured as the percentage of balances 90 or more days past due (DPD)
2.     Vintage delinquency looked at all accounts originated in Q1 2018 and Q1 2019 and compared 30+ DPD delinquency rates of those new accounts 6 months later. Positive numbers indicate higher delinquencies for the more recent vintage, while negative numbers indicate lower delinquencies for the recent vintage.

கிராமப்புற நகர்ப்புறங்களில் கடன் வழங்கல்

நுகர்வோர் கடன்களின் வளர்ச்சி இனி மெட்ரோ மட்டும் இடங்களில் குவிந்து கிடக்காது.
கடன் வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க உத்திகளின் ஒரு பகுதியாக குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கடன் வழங்குவதை அதிகரித்துள்ளனர்.
சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நுகர்வோர்கள் முறையான கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து (formal lending institutions) கடன் பெற அதிக விருப்பம் காட்டி வருகிறார்கள்.

2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகர்ப்புற இடங்களில் மொத்த கடன் பாக்கி 17.4% அதிகரித்துள்ளது. இது, மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் 11.4% அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகர்ப்புற இடங்களில் நிலுவைகளில் அதிக வளர்ச்சி அனைத்து  கடன் திட்டங்களிலும் காணப்படுகிறது.  கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகர்ப்புறங்களில் கடன் வாங்குவது  வளர்ச்சி அடைய,  வலுவான நுகர்வோர் தேவை மற்றும்  கடன் வழங்கும் நிறுவனங்களின் அளிப்பு ஆகியவை  இரண்டு காரணங்களாக உள்ளன.

கிராமப்புறங்கள் மற்றும்  சிறு நகர்ப்புறங்களில் கடன் விசாரணை அளவு 45.7%  அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் புதிய கடன்களின் விசாரணை 41.0%  அதிகரித்துள்ளது.
மெட்ரே மற்றும்  நகர்ப்புறங்களில் கடன் விசாரணை அளவு 32.4%  அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் புதிய கடன்களின் விசாரணை 27.3%  அதிகரித்துள்ளது.
  
கடன் தவணை தவறுதல்

ஒட்டு மொத்த நிலுவை நிலை கடுமையான தவணை தவறும் குற்றங்கள், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 0.10% (10 அடிப்படை புள்ளிகள் -பிபிஎஸ்)  ஒப்பீட்டளவில் சிறிய அதிகரிப்பைக் காட்டியிருக்கிறது. மற்ற நடவடிக்கைகளைப் போலவே, தவணை தவறும் குற்ற விகிதங்களின் அதிகரிப்பு ஒரே மாதிரியாக இல்லை, அது மிகவும் வேறுபாட்டுடன் காணப்படுகிறது. இது சொத்துகளுக்கு எதிரான கடன்கள் (0.52% அதிகரிப்பு), வீட்டுக் கடன்கள் (0.13% உயர்வு) மற்றும் கிரெடிட் கார்ட்கள் (0.10% அதிகரிப்பு). ஒட்டு மொத்த தவணைகள் தவறுவது வாகனக் கடன்கள் ( 0.22% குறைவு)  மற்றும்  தனிநபர் கடன்களில்  (0.05% குறைவு).

இருப்பினும், அதிக புதிய கடன் வளர்ச்சியானது அதிக அளவிலான தவணை தவறும் குற்றங்களை மறைக்கக்கூடும். இந்தக் குற்றங்களை நிவர்த்தி செய்யடிரான்ஸ்யூனியன் பல நிலையான கடன் கணக்குகளை ஆய்வு செய்ததுஇந்த நிலையான மொத்த பகுப்பாய்வு (static pool analysis)- வின்டேஜ் பகுப்பாய்வு (vintage analysis) என்றும் அழைக்கப்படுகிறது 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்பட்ட அனைத்து புதிய கணக்குகளுக்கும், இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகான ஆறு மாத நிலையோடு தவணை தவறும் குற்றங்கள்ல் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

நேர்மறை எண்கள் (Positive numbers) மிக சமீபத்திய விண்டேஜுக்கு அதிக குற்றங்களைக் குறிக்கின்றன, எதிர்மறை எண்கள் (negative numbers) சமீபத்திய விண்டேஜுக்கு குறைந்த குற்றங்களைக் குறிக்கின்றன. மிகச் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட  கடன் கணக்குகள் ( 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உருவான கணக்குகள்) பற்றிய இந்தப் பகுப்பாய்வு வீட்டுக் கடன் மற்றும் எல்ஏபி வகைகளுக்கு அதிக ஊக்கமளிக்கும் அறிகுறிகளைக் காட்டுகிறது. முறையே 3.12% மற்றும் 2.05% மேம்பாடுகளுடன், சிறந்த கடன் தேர்வைக் குறிக்கிறது. கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்கள் முறையே 0.78% மற்றும் 0.55% முன்னேற்றத்தைக் காட்டின.
இருப்பினும், வாகன கடன்களுக்கான அதே விண்டேஜ் பகுப்பாய்வில் குற்றங்களில் 1.51% அதிகரிப்பைக் காட்டியது.

தனிநபர் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களுக்காக, கீழேயுள்ள பிலோ - பிரைம் * இடர்ப்பாட்டு பிரிவில் புதிய கடன்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஏறக்குறைய 30.5%  புதிய வாகன கடன்கள் மற்றும் 34.7% புதிய தனிநபர் கடன்கள் பெற்றவர்கள் பிலோ பிரைம் ஆக கருதப்படுகிறார்கள். இது, 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டை விட முறையே 3.5% மற்றும் 8.3% அதிகரிப்புகளைக் குறிக்கிறது. அதன்படி, வாகன கடன் விண்டேஜ் குற்றங்களில்  அதிக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த குற்ற விகிதங்கள் 0.51% அதிகரித்துள்ளன, அவை தொடர்ந்து  அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், பொதுத்துறை (பி.எஸ்.யூ) மற்றும் தனியார் துறை  வங்கிகளுக்கான குற்ற விகிதங்கள் முறையே 0.26% மற்றும் 0.09% குறைந்துள்ளன.

நுகர்வோர் கடன் கிடைப்பது தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான ஊக்கியாக இருக்கும், மேலும் இந்த இலக்கை அடைய கடன் சந்தையில் இன்னும் தேவை உள்ளது என்பது தெளிவாகிறது. ஒட்டுமொத்த கடன் தேர்வு சமீபத்திய காலாண்டுகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்கும் அதே வேளையில், வாகன கடன் கையகப்படுத்துதல்களில் அதிகரித்த இடர்ப்பாடு உள்ளது. கடன் வழங்குநர்கள் தங்கள்  உத்திகளை தளர்த்துவதால்,  இடர்ப்பாடுகளின் (risk) தாக்கத்தை அவர்கள் தொடர்ந்து மதிப்பிடுவது முக்கியம் மற்றும் அவர்களின்  கடன் கலவையை தீவிரமாக கண்காணிப்பது கட்டாயம்”, என்று நிறைவு செய்தால் கெல்கர்.

* டிரான்ஸ்யூனியன் சிபில் கிரெடிட் விஷன் (சி.வி) மதிப்பெண் அடுக்குகள்
சப்பிரைம் = 300-650, பிரைம் அருகில் = 651-700, பிரைம் = 701-750, பிரைம் பிளஸ் = 751-800, மற்றும் சூப்பர் பிரைம்= 801-900. அதிக மதிப்பெண்கள் குறைந்த இடர்ப்பாட்டைக் குறிக்கின்றன.
குழுவாக சேர்க்கப்பட்டு, பிலோ பிரைம் பிரிவுகளுக்குக் கீழே சி.வி. மதிப்பெண் ≤730 மற்றும் பிரைம்  அல்லது அதற்கு மேல் சி.வி. மதிப்பெண் ≥731 க்கு மேல் உள்ளன.

டிரான்ஸ்யூனியன்
 சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள
https://www.transunioncibil.com/insights-events பார்வையிடவும்.

டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை பற்றி..!

டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் தொழில் நுண்ணறிவு அறிக்கை (TransUnion CIBIL’s Industry Insights Report) என்பது மிகவும் ஆழமானது. முழுமையான மக்கள்தொகை தீர்வாக ஒவ்வொரு காலாண்டும் டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் கடன் பெற்ற நுகர்வோர் விவரங்களின் அடிப்படையில் புள்ளி விவர தகவலாக அளிக்கப்படுகிறது. 
ஒவ்வொரு கோப்பிலும்  நூற்றுக்கணக்கான கடன் விவரங்களை கொண்டிருப்பததோடு, நுகர்வோர் கடன் பயன்பாட்டு மற்றும் செயல்பாடு பற்றி விளக்கி சொல்லி இருக்கும். இந்த நுண்ணறிவு தொழில் அறிக்கையை நிதி உதவி அளிக்கும் பல்துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், கடன் சந்தை பற்றியும் வணிக சுழற்சி பற்றியும் நுகர்வோர் மனநிலை பற்றியும் காலத்துக்கு காலம் இந்தியா முழுக்க அறிந்து கொள்ள முடியும்.

வணிகம் சார்ந்த விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை பெற, தொழில் நுண்ணறிவு அறிக்கைக்கு சந்தா கட்டவும்https://www.transunioncibil.com/insights-events
  பார்வையிடவும்.

டிரான்ஸ்யூனியன் சிபில் பற்றி

இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாகவும் (Credit Information Companyஉலக அளவிலான கடன் தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளதாகவும் டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) உள்ளது. இதில், அனைத்து முன்னணி வங்கிகள்நிதி நிறுவனங்கள்வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள்  இணைந்துள்ளனர்.  தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் 1,000 மில்லியனுக்கும்  மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து வருகிறது.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்- வணிகம் விரைவாக நடக்கவும்,  கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக உள்ளது.
                       
உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்பாட்டை (risk) நிர்வகிக்க உதவுவதன் மூலம்செலவுகளைக் குறைக்கவும்லாபத்தை அதிகரிக்கவும் பொருத்தமான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது.  நுகர்வோர் மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன்  வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது.

தகவல்களின் சக்தி (power of information)டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை மூலம்  வலுவான பொருளாதாரத்தைஉருவாக்க உதவுகிறது. இந்தத் தகவலை நல்லது (Information for Good) என்று இந்த அமைப்பினர் அழைக்கிறார்கள்.  

கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும்www.transunioncibil.comShare:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...