மொத்தப் பக்கக்காட்சிகள்

தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு மூலம் யெஸ் பேங்க் ரூ. 1,930 கோடி திரட்டியதுதகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு மூலம் யெஸ் பேங்க் ரூ. 1,930 கோடி திரட்டியது 

 சென்னை ஆகஸ்ட் 16 , 2019 யெஸ் பேங்க் , தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு மூலம் ஆகஸ்ட் 15 அன்று ரூ. 1,930 கோடி திரட்டியது.

 இந்தத்  தகுதிவாய்ந்த  நிறுவனங்களுக்கான பங்கு விற்பனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த வங்கி ரூ. 2  முக மதிப்பு கொண்ட 23.1 கோடி பங்குகளை தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றின் விலை ரூ. 83.55 க்கு ஒதுக்கீடு செய்து கொடுத்தது. செபியின் பங்கு வெளியீடு விதிமுறைகள் 2018 கீழ் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தத்  தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடு மூலம் இந்த வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம்  16.2%* ஆக அதிகரித்துள்ளது டயர்  I விகிதம் 11.3%* ஆகவும் பிரதான ஈக்விட்டி டயர் 1 விகிதம் 8.6%* ஆகவும் உள்ளதுஇவை சட்டப்படி  இருக்க வேண்டியதற்கு  அதிகமாகவே உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது

* தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடுகளுக்கு முந்தைய நிலை ஜூன் 30,  2019(இதில் 2019 - 20  முதல் காலாண்டு  லாபமும் அடங்கும்

இந்தப் பங்கு விற்பனைக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தகுதிவாய்ந்த முதலீட்டு நிறுவனங்கள் இடையே வலிமையான ஆதரவு காணப்பட்டது. அமெரிக்கா ஐரோப்பா போன்ற வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு 34% பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஆசிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு 40%  மீதி உள்நாட்டு காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களுக்கு பங்குகள் கொடுக்கப்பட்டிருப்பது யெஸ் பேங்க் பங்கு மூலதனத்தை மேலும் பரவலாக்க அமைந்திருக்கிறது

இந்தப்  பங்கு வெளியீட்டுக்கு சி. எல்.எஸ். இந்தியா பிரைவேட் லிமிடெட் மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட், பிரைம் செக்யூரிட்டீஸ் லிமிடெட்  மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னணி பங்கு வெளியீடு மேலாளர்களாக செயல்பட்டார்கள்

இதற்கு சட்ட ஆலோசகர்களாக  . இசட்.பி அண்ட் பார்ட்னர்ஸ் , லிங்லேடர்ஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் , மற்றும் எல் அண்ட் எல் பார்ட்னர்ஸ் (முந்தைய பெயர் லுத்ரா & லுத்ரா லா ஆபிசஸ்).  சட்டப்பூர்வமான தணிக்கை நிறுவனங்களாக பி. எஸ்.ஆர் அண்ட் கோ எல்.எல்.பி செயல்பட்டது

வெற்றிகரமான இந்தப் பங்குகள் ஒதுக்கீடு குறித்து யெஸ் பேங்க்  நிர்வாக இயக்குனர்  மற்றும்  முதன்மை  செயல் அதிகாரி  ரவ்நீத் ஹில்  கூறும்போது, " இந்த நிதி திரட்ட எங்களுக்கு உதவிய சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதிகப்பட்சம் 10% பங்குகளை விற்பனை செய்ய எங்களின் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்

தற்போதைய  சவாலான  சுற்றுச்சூழல்  நிலையில்  இந்த  தகுதிவாய்ந்த  நிறுவன  முதலீட்டாளருக்கு காண  பங்கு ஒதுக்கீடு  வெற்றிகரமாக  நடந்திருக்கிறது. இந்த வெற்றி யெஸ் பேங்க் மீது சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.”


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...