மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.ஐ.எஃப்.எல். ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு 10.5% வரை வருமானம்


ஐ.ஐ.எஃப்.எல். ஃபைனான்ஸ், கடன் பத்திர வெளியீடு மூலம் 1,000 கோடி திரட்டுகிறது. 10.5% வரை வருமானம் வழங்குகிறது.  

ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் (IIFL Finance), இந்தியாவின் மிகப் பெரிய வங்கிசாரா நிதி நிறுவனங்களில் (largest Non-Banking Financial Company) ஒன்று. இது  ஆகஸ்ட் 06, 2019 அன்று  பொது மக்களுக்கு கடன் பத்திரங்களை (bonds) வெளியிடுகிறது. இதன் மூலம்  ரூ. 1,000  கோடி திரட்டப்படுகிறது. இந்தக் கடன் பத்திர வெளியீட்டின் நோக்கம், வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவையாக உள்ளன. இந்தக் கடன் பத்திரங்களுக்கு 10.5% வருமானம் (yield) கிடைக்கும் மற்றும் அதிக அளவு பாதுகாப்பை கொண்டவை. 

இங்கிலாந்தைச் சேர்ந்த சி.டி.சி குழுமத்தின் (CDC Group)  ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திர (secured and unsecured redeemable non-convertible debentures - NCDs) மூலம் ரூ. 100 கோடி திரட்டுகிறது. முதலீட்டாளர்கள் அதிகமாக விண்ணப்பிக்கும்பட்சத்தில் கீரின்-ஷூ ஆப்ஷன் முறையில் மேலும் ரூ. 900 கோடிக்கு (மொத்தம் ரூ.1,000 கோடி) பாண்டுகளை வெளியிடுகிறது.

..எஃப்.எல் பாண்டுகள், 69 மாத காலத்திற்கு முதிர்வுக்கு ஆண்டுக்கு  10.50%  அதிக  வருமானம் அளிக்கிறது. இது பாதுகாப்பான பத்திரங்களுக்கு 15 மாத  குறுகிய காலத்திற்கு ஆண்டுக்கு 10.00%  வருமானம் கொடுக்கிறது. மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர வருமானத்துன் ஜீரோ கூப்பன் பாண்டுகளையும் கொண்டுள்ளது. பாதுகாப்பான பிரிவின் 39 மாத முதிர்வு கொண்ட பாண்டுகளையும் கொண்டிருக்கிறது.


குறைந்தபட்ச மாற்று வரி (MAT) மட்டுமே செலுத்தும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அறக்கட்டளைகள் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம், குறிப்பாக 15 மாத முதிர்வு கொண்ட பத்திரங்கள் அதிக வருமான விகிதத்துடன் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. குறுகிய கால பணப்புழக்க இறுக்கத்தால், 15 மாத பத்திரங்கள் நன்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய நிறுவனங்களுக்கு 10% வருமானம், வரி ஈடுகட்டப்பட்ட அடிப்படையில் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். இதே போன்ற வேறு எந்த முதலீட்டு திட்டமும் அத்தகைய வருமானத்தை அளிக்காது.

 தரக் குறியீட்டு நிறுவனமான க்ரைசில் (CRISIL) இந்தப் பத்திரங்களை ஏஏ / நிலையானது (AA/ Stable) என மதிப்பிட்டுள்ளது, இது நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது, மிகக் குறைந்த கடன் அபாயம் மற்றும்  அதிக அளவு பாதுகாப்பைக் கொண்டதாகக் கருதப்படுவதைக் குறிக்கிறது.

ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ்  முதன்மை செயல் அதிகாரி சுமித் பாலி (Sumit Bali, CEO, IIFL Finance) கூறும் போது, “இந்தியா முழுவதும் உள்ள 1,947 கிளைகளின் வலுவான பரவல்பு மற்றும் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவை (போர்ட்ஃபோலியோ) மூலம், இதுவரை முதலீட்டுச் சேவை பெறாதவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன் தேவையை நாங்கள் பூர்த்தி செய்ய முடிகிறது. திரட்டப்படும் நிதி இதுபோன்ற பல பகுதிகளில் எங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்த  உதவும்.”

ஐ.ஐ.எஃப்.எல் குழுமத்தின் ஓர் அங்கமாக உள்ளது, ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ். இது இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ்-ன் கடன் சொத்துகள் சுமார் ரூ.35,000 கோடிகள். இதில் 8% சிறு கடன்கள் அதுவும் குறைவான தொகை கடன்களாகும்.


ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ்-ன் மொத்த வாராக் கடன் 1.9% மற்றும் நிகர வாராக் கடன் 0.6% ஆக உள்ளது. இதன் மொத்த மூலதன தன்னிகர விகிதம் (Capital Adequacy Ratio -CAR), 2019 மார்ச் இறுதியில் 19.2%  ஆக உள்ளது. இதில் டயர் I மூலதனம் 16.0%. ஆனால், சட்டப்பட்டி இருக்க வேண்டியவை முறையே 15%  மற்றும் 10% ஆக உள்ளது. 2018-19 ஆம் நிதி ஆண்டில், ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ்-ன் நிகர லாபம் 55% அதிகரித்து ரூ. 717.4 கோடியாக உள்ளது. பங்கு மூலதனம் மூலமான வருமானம் 18.3% ஆக உள்ளது.  இது பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் பொதுவாக கமர்சியல் பேப்பர் (சிபி) என்ற குறுகிய கால கடன்  ஆதாரங்களை சார்ந்திருப்பது மிகவும் குறைவு, மேலும் 2018 ஆம் ஆண்டைய ஐ.எல்&எஃப்.எஸ் நெருக்கடியிலிருந்து  வெற்றிகரமாக இந்த நிறுவனம் வெளியே வந்துள்ளது.

நிதி ஆதாரமாக கமர்ஷியல் பேப்பரின் பங்களிப்பு செப்டம்பர் 2018 இறுதியில் 24% ஆக இருந்தது. இது, 2019 மார்ச் மாத இறுதியில் 12% ஆக குறைத்துள்ளது.


 எடெல்விஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் மற்றும் டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இந்தக் கடன் பத்திர வெளியீட்டுக்கு முன்னணி மேலாளர்கள் ஆவர். முதலீட்டாளர்கள் எளிதில் பணமாக்கும் விதமாக, இந்த என்.சி.டிக்கள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.

..எஃப்.எல் கடன் பத்திரங்கள் ரூ.1,000 முக மதிப்பில் வழங்கப்படும்  குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை அனைத்து பிரிவுகளிலும் ரூ .10,000 ஆகும். பொது வெளியீடு ஆகஸ்ட் 06, 2019 அன்று ஆரம்பித்து, ஆகஸ்ட் 30, 2019 அன்று நிறைவடைகிறது. இந்த ஒதுக்கீடு முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்கிற அடிப்படையில் செய்யப்படும்.

ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் பற்றி (About IIFL Finance)

இந்தியா இன்ஃபோலைன் ஃபைனான்ஸ் லிமிடெட்(India Infoline Finance Limited - “IIFL” or the “Company”என்பது டெபாசிட் பெறாத வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனம் என (NBFC-ND-SI) ஆர்.பி.ஐ-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட வாடிக்கையாளரின் கடன் தேவைகளை அதன் ஏராளமான தயாரிப்புகளுடன் பூர்த்தி செய்து வருகிறது. ஐ.ஐ.எஃப்.எல் நிறுவனம், வீட்டுக் கடன்கள், தங்கக்  கடன்கள், வணிகக் கடன்கள், சொத்து அடமானக் கடன்கள், நடுத்தர மற்றும் சிறு நிறுவன கடன்கள், நுண் கடன், ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் கட்டுமானக் கடன்,  மற்றும் மூலதன சந்தை கடன் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

இந்த நிறுவனம் ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் லிமிடெட் (முந்தைய பெயர் ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட்)-ன் துணை நிறுவனமாகும். இது இந்தியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களின் ஒன்றாகும். இது முதன்மையாக கடன்கள் மற்றும் அடமானங்கள், செல்வம் மற்றும் சொத்து மேலாண்மை, சில்லறை மற்றும் நிறுவன தரகு மற்றும் முதலீட்டு வங்கி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின், துணை நிறுவனங்களாக, ஐ.ஐ.எஃப்.எல் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (முந்தைய பெயர் இந்தியா இன்ஃபோலைன் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்), சமஸ்தா மைக்ரோஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் கிளாரா  டெவலப்பர்ஸ்  பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

Media Relations 
IIFL Holdings Limited
Sourav Mishra
Mobile: +91 992028-5887


Adfactors PR
Mihir  Dani
Ph +91 7738012080

Joelle Fernandes
Ph +91 9833411501
Email: joelle.fernandes@adfactorspr.com

Sanjay Lawrence
Ph +91 8983321061
Email: sanjay.lawrence@adfactorspr.com


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...