மொத்தப் பக்கக்காட்சிகள்

பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் பெண்களுக்கு பிரகதி கடன்கள்



முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நுண் கடன் துணை நிறுவனமான பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம், பெண்களுக்கு பிரகதி கடன்கள் அறிமுகம்..!

இதுவரை கடன் உதவி கிடைக்காத பெண்களுக்கு பிரகதி கடன்கள்  உதவியாக இருக்கிறது

பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம் (Belstar Investment and Finance Limited) என்பது முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் (Muthoot Finance Limited) வங்கிச் சாரா நிதிச் சேவை நுண்கடன் நிறுவனமாக (NBFC MFI) உள்ளது. முத்தூட் ஃபைனான்ஸ்-ன் துணை நிறுவனமான பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம், கடன் உதவி கிடைக்காத கிராமப்புற பெண்களுக்கு பிரகதி (Pragati) கடன் என்கிற நுண் கடனை (microcredit)
அறிமுகப்படுத்தி உள்ளது. பிரகதி (Progress) என்றால் முன்னேற்றம் என்று அர்த்தம்.
இந்தக் கடன் அறிமுக விழா பிரமாண்டமாக நடந்தது. ஐ.பி.எல் நட்சத்திரங்கள் (IPL stars) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹர்பஜன் சிங், முரளி விஜய், ஷார்துல் தாக்கூர் மற்றும் இம்ரான் தஹிர் (Harbhajan Singh, Murali Vijay, Shardul Thakur and Imran Tahir) ஆகியோர் தலைமையில் விழா நடந்தது.


 கிரிக்கெட் நட்சத்திரங்கள், சுய உதவி குழுவை (Self Help Group - SHG) சேர்ந்த இரு பெண்களுக்கு, 14 மாநிலங்களை சேர்ந்த பெல்ஸ்டார் பணியாளர்கள் முன்னிலையில் பிரகதி கடன்களை வழங்கி தொடங்கி வைத்தனர். கடனுக்கான காசோலைகள் சூரியா மற்றும் தனலஷ்மி என்கிற காஞ்சிபுரத்தை சேர்ந்த சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வழங்கபப்ட்டது. இந்தப் பெண்கள் நீண்ட காலமாக பெல்ஸ்டார் நிறுவனத்தின் பல்வேறு கடன்களை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இரு பெண்களும் ஆரம்பத்தில் கல்விக் கடன்கள் பெற்றனர். பிறகு சிறு தொழில் கடன்கள் வாங்கி இருக்கிறார்கள். தற்போது இந்தப் பெண்கள் முறையே அரிசி கடை மற்றும் ஜவுளி வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்த இரு பெண்களும் கிராமப்புற பெண்களிடையே சமூகம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். கல்பனா சங்கர் (Dr. Kalpana Sankar, Managing Director, Belstar Investment and Finance Limited) கூறும் போது, “பிரகதி கடன்கள் வழங்குவதின் நோக்கம், பெண்களை சமூக ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய செய்வதாகும். இந்தக் கடன் பெண்களுக்கு சுலபமாகவும் விரைவாகவும் கிடைப்பது இதன் சிறப்பு அம்சமாகும். பெண்கள் அவர்களின் சிறிய நிறுவனங்களை மேம்படுத்த இந்தப் பிரகதி கடன்கள் மூலம் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறோம்.


கடன் உதவி கிடைக்காத பெண்களுக்கு இந்தப் பிரகதி கடன்கள் மூலம் உதவி செய்து வருகிறோம். பெல்ஸ்டார் நிறுவனம், அடிப்படையில் வங்கிச் சேவைகள் கிடைக்காத தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், அதன் பிரத்யேக கடன்களை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் வழங்கி வருகிறது. 2019 மார்ச் நிலவரப்படி, இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுக்க 14 மாநிலங்களில் 400 கிளைகள் உள்ளன. 2019 மார்ச்  மாதம் வரை ஒட்டு மொத்தமாக ரூ. 4,800 கோடி கடன் வழங்கி இருக்கிறது.


இந்தியா முழுவதும் கிராமப்புற பெண்கள் விருப்பும் கடன் வழங்கும் நிறுவனமாக உருவாக பெல்ஸ்டார் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் பிரைவேட் நிறுவனம் (Belstar Investment and Finance Private Limited -BIFPL) பற்றி:


பி.ஐ.எஃப்.பிஎல் (BIFPL), 1988 ஜனவரியில் பெங்களூருவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம், ஆர்.பி.ஐ-ல் 2001 மார்ச் மாதத்தில் வங்கிச் சாரா நிதி நிறுவனமாக (Non- Banking Finance Company) பதிவு செய்யப்பட்டது.  2013 டிசம்பர் 11 முதல் இந்த நிறுவனம், ஆர்.பி.ஐ- அமைப்பால்  “NBFC-MFI” என மறுவகைப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது
பி.ஐ.எஃப்.பிஎல், நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் (equity share capital) 70.01  சதவிகிதம்  முத்தூட் ஃபைனான்ஸ் வசம் உள்ளது.

பி.ஐ.எஃப்.பிஎல், 2008 செப்டம்பரில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா (Hand in Hand India)  நிறுவனத்தை கையக்கப்படுத்தியது. இந்த நிறுவனம், அதன் முதல் கடனை கர்நாடாக மாநிலம், ஹேவியர் மாவட்டத்தில் 2009 மார்ச் மாதத்தில் 3 சுய உதவி குழுக்களை சேர்ந்த 22 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 0.02  கோடி கடன் வழங்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உருவாக்கிய குழுக்களுக்கு சுய உதவி குழுக்கள் மாடலில் (SHG model) கடன் உதவி அளித்து வருகிறது. 2015 ஜனவரி முதல் கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLG - Joint Liability Groups) மாடலி கடன் உதவி அளித்து வருகிறது.  பி.ஐ.எஃப்.பிஎல், இதனை மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் தொடங்கியது.

For Further information, please contact:

Dimple Momaya,
Adfactors Public Relations Pvt Ltd
Contact: +9198207 62036


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...