மொத்தப் பக்கக்காட்சிகள்

டி.பி.எஸ் பேங்க் இந்தியா அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்கள் விநியோகம்..!


டி.பி.எஸ் பேங்க் இந்தியா, அதன் முதல் கிளையை கோயம்புத்தூரில் தொடங்குகிறது

***
இந்தியாவில் முழுமையான துணை வங்கி உருவானதை தொடர்ந்து விரிவாக்கத்தில் இருக்கிறது.

***
25 நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளை நிறுவ இலக்கு  


கோயம்புத்தூர், 6  மார்ச் 2019 -  டி.பி.எஸ்  பேங்க் இந்தியா லிடெடட் (DBS Bank India Limited - DBIL)  கோயம்புத்தூரில் அதன் முதல் கிளையை இன்று தொடங்கியது. இந்த கிளைக்  திருச்சி சாலையில் (Trichy Road)அமைந்துள்ளது. இந்தக் கிளையின் மூலம் பல்வேறு நிதித் திட்டசேவைகள் ஒருங்கிணைந்து கலவையாக  வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் இந்தச் சேவைகள் வங்கிகள் மூலம் வழங்குவது தேவையாக இருக்கிறது. பெரிய,  நடுத்தரம் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும்  சிறு வாடிக்கையாளர்களுக்கு இந்தச்  சேவை, வழங்கப்படுகிறது. 

இந்த வங்கிக்கு தற்போது சென்னை, சேலம் மற்றும் கடலூரில்  கிளைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் விரிவாக்க நடவடிக்கையாக இந்தக் கோயமுத்தூர் கிளை திறக்கப்படுகிறது. இதையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் நான்கு கிளைகள் உள்ளன.

இந்த வங்கி, இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக   டி.பி.எஸ்  குழுமம்  - சிங்கப்பூர் (DBS Group - Singapore) –இன்  கிளையாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அதாவது 2019 மார்ச் 1ஆம் தேதி முதல்  முழுமையான துணை வங்கியாக டி.பி.எஸ் பேங்க் இந்தியா லிடெடட் (DBS Bank India Limited - DBIL) ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

 இது நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மற்றும் மற்றும்  சிறிய மையங்களை 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

டி.பி.ஐ.எல்,  மும்பை, குருகிராம், (Gurugram) நொய்டா, அஹமதாபாத், ஹைதராபாத், வதோரா,  இந்தூர், லூதியானா மற்றும் கோயம்புத்தூரில் மொத்தம் 9 புதிய கிளைகளை திறக்க உள்ளது.  மேலும், இந்த வங்கி, வங்கிச் சேவையே இல்லாத கிராமபுறங்களில் ஐந்து கிளைகளை திறக்க உள்ளது

டி.பி.ஐ.எல், இந்தியாவில் 12 நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, நாசிக், சூரத், கொல்காபூர், சேலம் கடலூர் மற்றும் மொரதாபாத் (Moradabad) ஆகிய  நகரங்களில் இந்த வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டி.பி.ஐ.எல் வங்கி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs)  மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு “phygital” என்கிற முறையில் சேவை செய்வதன் மூலம் வளர்ச்சியை  மேம்படுத்த உள்ளது.  மேலும் செயல்பாட்டையும் விரிவாக்கம் செய்கிறது 

இதுகுறித்து டி.பி.எஸ் பேங்க் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி சுரோஜித் ஷோம் (DBS Bank India CEO Surojit Shome)  கூறும்போது. ‘’ டி.பி.எஸ் பேங்க் இந்தியாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். சரியான முறையில் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வருவதோடு, கிளைகளின் எண்ணிகையையும் அதிகரித்து வருகிறோம்.கடந்தசிலஆண்டுகளாகதொழில்நுட்பஉதவியைபயன்படுத்திவங்கிசேவையைசிறப்பாகஅளித்துவருகிறோம். இந்தப்புதுமையானசேவையைதனிப்பட்டவாடிக்கையாளர்கள்மற்றும்வணிகவாடிக்கையாளர்களுக்காகஅளித்துவருகிறோம். டி.பி.ஐ.எல்அறிமுகம்மூலம்எங்களின்வாடிக்கையாளர்களுக்குபல்வேறுநிதிச்சேவைகளைதொடர்ந்துமேம்பட்ட தொழில்நுட்பம்மூலமும்வாடிக்கையாளர்களுக்குமுன்னுரிமைஅளிப்பதுமூலமும்செயல்பட்டுவருகிறோம்

டி பி எஸ், கடந்த  2018 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,  இந்த வங்கி எதிர்கால வங்கி சேவைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த வங்கி  டிஜிபேங்க் (digibank)- ஐ அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு இந்தியா முழுக்க 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  டிஜிபேங்க் வாடிக்கையாளர்களாக மாறி இருக்கிறார்கள் 
 
சேமிப்பு கணக்கு  உடன்,  டிஜிபேங்க் ஜாமின் இல்லாத கடன்களை வழங்கி வருகிறது. மேலும் காகிதமற்ற முறையில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு முதல்முறையாக அளித்து வருகிறது. இதேபோல் டி.பி.எஸ் இந்தியா, பல்வேறு ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் பாலிசிகளையும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்து அளித்து வருகிறது. இந்த வங்கி முதல்முறையாக இ- பேங்கிங் தீர்வுகளை  (e-banking solution) இந்தியாவின் முன்னணி கணக்கியல் முறையான  இ.ஆர்.பி  மென்பொருள் (ERP software) மூலம் அளித்து வருகிறது 

இந்த வங்கி, சிங்கப்பூருக்கு வெளியே  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயல்பாட்டு மையத்தை ஹைதராபாத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அமைத்துள்ளது.  இது  டி பி எஸ் ஆசியா  ஹப் 2 (DBS Asia Hub 2) எனஅழைக்கப்படுகிறது

டி.பி.எஸ். பற்றி..!

டி.பி.எஸ். (DBS), ஆசியாவின் முன்னணி நிதிச் சேவை அளிக்கும் குழுமம் ஆகும். இது 18 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள், சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.  சீனா, தென் கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் சிறப்பாக நிதிச் சேவையை அளித்து வருகிறது. உலகின் மிக உயர்ந்த தரக்குறியீடுகளான "AA-" and "Aa1"  இதற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் பன்னாட்டு சேவையை அங்கீகரிக்கும் விதமாக தி பேங்கர் (The Banker) அமைப்பால் Global Bank of the Yearமற்றும் குளோபல் ஃபைனான்ஸ் அமைப்பால் (Global Finance ) Best Bank in the World என்றும் சிறப்பிக்கப்படுள்ளது.

இந்த வங்கியின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பாராட்டி யூரோமணி அமைப்பால் (Euromoney) World’s Best Digital Bankஎன கௌரவிக்கப்பட்டுள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் அமைப்பால் 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக Safest Bank in Asiaஎன்கிற விருது வழங்கப்பட்டு வருகிறது.

டி.பி.எஸ். வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதிச் சேவைகளை அளித்து வருகிறது. பெரிய நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சிறு வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சேவை அளித்து வருகிறது. ஆசியாவில் பிறந்த ஒரு வங்கியாக, டி.பி.எஸ், பிராந்தியத்தின் மிகச் சக்திவாய்ந்த சந்தைகளில் வணிகங்களை செய்துவருகிறது. மேலும், இது சமூக மேம்பாட்டுக்கான சேவைகளையும் அளித்து வருகிறது. சிங்கப்பூர் மற்றும் ஆசியாவில் நிறுவன சமூக பொறுப்புக்காக (corporate social responsibility) SGD 50 மில்லியன் தொகை மூலம் அமைப்பை (foundation) உருவாக்கி இருக்கிறது.

இந்த வங்கிக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 26,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும், கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும் www.dbs.com.


For more information, contact:
Ravindra Kanchan               
Group Strategic Marketing & Communications
DBS Bank
Mobile: (91) 98331 76249
Naheed Contractor                                  
Group Strategic Marketing & Communications
DBS Bank
Email: naheed@dbs.com
Mobile: (91) 93245 41187




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...