மொத்தப் பக்கக்காட்சிகள்

ஜெட் ஏர்வேஸ், 2018 செப்டம்பரில் 28 புதிய விமானங்கள், முதன் முறையாக 9 வழித் தடங்களில் விமானச் சேவை அறிமுகம்..!ஜெட் ஏர்வேஸ், உள்நாட்டு இணைப்பை மேம்படுத்த 2018 செப்டம்பரில் 28 புதிய விமானங்கள் அறிமுகம்
~ இத்துறையில் முதன் முறையாக 9 வழித் தடங்களில் விமானச் சேவை  அறிமுகம் ~

இந்தியாவின் முன்னணி முழு நேர சர்வதேச விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் (Jet Airways), உள்நாட்டு விமானச் சேவையில் வளர்ச்சி காண கூடுதல் கவனம்  செலுத்தி வருகிறது. இதையொட்டி வரும் மாதத்தில் புதிதாக 28 விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஜெட் ஏர்வேஸ்-ன் புதிய சேவைகள் – இத்துறையில் முதன் முறை (industry firsts) மற்றும் இடையில்  நில்லா (non-stop) மற்றும் ஒரு இடத்தில் மட்டும் நின்று (one-stop) செல்வதாக இருக்கிறது.

வளர்ந்து வரும் நகரங்களில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணத்தில் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தப் புதிய வழித் தடங்களின் அறிமுகம் உதவியாக இருக்கும். இந்தப் புதிய சேவைகள், இதர நகரங்கள், மெட்ரோ நகரங்களை சேர்ந்தவர்களை ஜெட் ஏர்வேஸ்–ன்  உலகளாவிய நெட் ஒர்க்-களை அதன் முக்கிய மையங்களான மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு மூலம் இணைக்கும்.

ஜெட் ஏர்வேஸ் தொடர்ந்து, இந்தத் துறையில் முதன் முறையாக பல விமானச் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம், மத்தியப் பிரதேசத்தின் மிகப் பெரிய நகரமான இந்தூர் (Indore)-லிருந்து ஜோத்பூர் மற்றும் வதோராவுக்கு (Jodhpur & Vadodara) தினசரி விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதர குறிப்பிடத்தக்க முதன் முறைகள் என்றால், ஜெட் ஏர்வேஸ் சண்டிகர் மற்றும் லக்னோ, அஹமதாபாத் மற்றும் ஜோத்பூர், வதோதரா மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையே விமானச் சேவையை அளிக்க இருக்கிறது.

இந்த வழித் தடங்களில் விமானங்களை இயக்கும் ஒரே விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ்தான்.. இதன் மூலம் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவுக்கு இடையிலான விமானச் சேவை இணைப்பு மேம்படுத்தப்படும். இதே போல், மேற்கு இந்தியா இடையேயும் விமானச் சேவை இணைப்பு மேம்படும்.

இந்த விமானச் சேவை நிறுவனம், ஏற்கெனவே இயங்கி வரும் விமானச் சேவை வழித் தடங்களில் கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை - குவஹாத்தி மற்றும் டெல்லி – பாக்டோக்ரா (Bagdogra) இடையே இடையில் நில்லா விமானச் சேவையை விரிவுப்படுத்தி இருக்கிறது. மற்றும் மும்பை - பாக்டோக்ரா மற்றும் புதுடெல்லி - குவஹாத்தி  வழித் தடங்களில் கூடுதலாக ஓர் இடத்தில் மட்டும் நின்று செல்லும் விமானச் சேவையை அளிக்கிறது.

இதர விரிவாக்கமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பெங்களூருவிலிருந்து லக்னோ, இந்தூரிலிருந்து கொல்கத்தா, கொல்கத்தாவிலிருந்து சண்டிகர்,  கோயம்புத்தூரிருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு இடையில் நில்லா விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த நகரங்களை சேர்ந்தவர்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்த விமானச் சேவை நிறுவனத்தின் கவனம் இந்தூர் நகரம் மீது இருப்பது ஒரு சாட்சி ஆகும். இந்த நகரம் மையத்தில் இருப்பது மற்றும் உள்கட்டைப்பு வசதிகள் மேம்பட்டிருப்பது மூலம் இந்திய அளவில் வேகமாக வளரும் இந்தியாவின் முக்கிய  நெட் ஒர்க் ஆக இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ், இந்தூர் நகரிலிருந்து இந்தியா முழுவதும் 14 நகரங்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

உண்மையை சொல்லப் போனால், இந்தூரிலிருந்து இடையில் நில்லா விமானச் சேவைகளை முக்கிய நகரங்கள் குறிப்பாக அகமதாபாத், ஜெய்ப்பூர், வதோதரா, ஜோத்பூர், அலகாபாத், சண்டிகர், லக்னோ, நாக்பூர் மற்றும் புனே போன்ற சிறிய மெட்ரோ நகரங்களுக்கு அளிக்கும் ஒரே விமானச் சேவை நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இந்தூரில் இருந்து இடையில் நில்லா விமானச் சேவைகளையும் அளிக்க இருக்கிறது. மேலும், அதன் முக்கிய மையங்களான மும்பை, டெல்லி மற்றும் பெங்களுரூக்கு இடையில் நில்லா விமானச் சேவைகளை வழங்கும். இந்த நகரங்கள் மூலம் தொடர்ச்சியான சர்வதேச விமானச் சேவையை அளிக்கிறது. இதன் சமீபத்திய கொல்கத்தாவுக்கான சேவை, முக்கிய வர்த்தக நகரத்தை கிழக்கு இந்தியாவின் நிதி மையத்துடன் (financial hub) இணைக்கிறது.

இந்த நிறுவனத்தின் புதிய சேவைகள் இந்தூர் - வதோதரா மற்றும் இந்தூர் - ஜோத்பூர்  இடைய பயணத்தை மேம்படுத்துவதோடு, அந்தப் பகுதியின் வணிகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். குறிப்பாக, வதோதரா மற்றும் ஜோத்பூர் அதன் அருகிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (Small and Medium Enterprises) வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

புதிய மற்றும் ஏற்கெனவே இருக்கும் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ்-ல் பயணம் செய்பவர்களுக்கு தினசரிதிரும்ப சேவைகளைப் (day-return services) பயன்படுத்த உதவும். அன்றே திரும்பும் இந்த விமானச் சேவைகள், இந்தூரிலிருந்து மும்பை, டெல்லி, அஹமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தாவிலிருந்து கூடுதலாக ஜோத்பூர், அலகாபாத், வதோதராவுக்கு விமானச் சேவை அளிக்கப்படுகிறது. இதேபோல், இந்தூர் வழியாகவும் (vice versa) சேவை அளிக்கப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகப் பிரிவு துணைத் தலைவர், திரு. ராஜ் சிவகுமார் (Mr. Raj Sivakumar, Sr. Vice-President, Worldwide Sales & Distribution, Jet Airways), கூறும் போது, " இந்தியா முழுவதும், வளர்ந்து வரும் நகரங்களில் விமான பயணம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்தூர், ஜோத்பூர், குவஹாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் வதோதரா போன்ற நகரங்களை குறிப்பிடலாம். இந்த நகரங்களை விமானச் சேவை மூலம் இணைக்கும் தேவை அதிகரித்து வருவதால், அதற்கான தீர்வை அளிக்க வேண்டி உள்ளது. வரும்  மாதங்களில் எதிர்பார்க்கப்படும்  தேவை அதிகரிப்பை சந்திக்க எங்கள் விமானச் சேவை திட்டம் கவனத்துடன் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய விமானங்கள், கூடுதலான சேவைகளுடன் கூடுதல் தேர்வு, கூடுதல் வசதி, கூடுதல் இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் சுகமாக பயணம் மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களோடு, பெரிய நிறுவனங்களை (corporate travellers) சேர்ந்தவர்களும் அன்றே திரும்பும் விமானச் சேவைகளை பயன்படுத்தி மகிழ முடியும்.

எங்கள் புதிய விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் –ஐ அனைவரும் விரும்பும் விமானச் சேவை நிறுவனமாக மாற்றும் என உறுதியாக கூறுகிறேன். மற்றும் இந்த நகரங்கள் இடையே இணைப்பு, வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்கும்."

ஜெட் ஏர்வேஸ்-ன் விரிவான விமானச் சேவை பட்டியல் கீழே உள்ளது
பிரிவு
விமான எண் 
பயன தினங்கள் 
புறப்படும் நேரம்
வந்து சேரும் நேரம்
 துறையில் முதன் முறைஇடை நில்லா சேவைகள்
அகமதாபாத் - ஜோத்பூர்
9W 706
ஞாயிறு தவிர
0945
1120
ஜோத்பூர் - அகமதாபாத்
9W 705
ஞாயிறு தவிர
1710
1840
வதோதரா - இந்தூர்
9W 138
ஞாயிறு/ செவ்வாய்/ வியாழன்/ வெள்ளி
1250
1355
இந்தூர் - வதோதரா
9W 137
ஞாயிறு/ செவ்வாய்/ வியாழன்/ வெள்ளி
1450
1605
ஜெய்ப்பூர் - வதோதரா
9W 133
ஞாயிறு/ செவ்வாய்/ வியாழன்/ வெள்ளி
1035
1225
வதோதரா - ஜெய்ப்பூர்
9W 134
ஞாயிறு/ செவ்வாய்/ வியாழன்/ வெள்ளி
1640
1840
ஜோத்பூர் - இந்தூர்
9W 710
தினமும்
1215
1355
இந்தூர் - ஜோத்பூர்
9W 709
தினமும்
1500
1645
சண்டிகர் - லக்னோ
9W 3523
தினமும்
1445
1640

ஜெட் ஏர்வேஸ் பற்றி:

ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) இந்தியாவின் முன்னணி சர்வதேச விமானச் சேவை (international airline) நிறுவனமாக உள்ளது.தற்போது, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளை சேர்ந்த 66 நகரங்களுக்கு விமானச் சேவையை அளித்து வருகிறது. ஜெட்ஏர்வேஸ் நிறுவனம், வலுவானஉள்நாட்டு இந்தியா நெட்வொர்க் மூலம்மெட்ரோ நகரங்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகரங்களை விமானச் சேவை மூலம் இணைத்துள்ளது.

இந்தியாவை தாண்டி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், முக்கிய சர்வதேச நாடுகளான  தென்கிழக்கு ஆசிய நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு விமானச் சேவைகளை  அளித்து வருகிறது. இந்த ஜெட் ஏர்வேஸ்  குழுமம், தற்போது 121 விமானங்களை சேவையில் ஈடுபடுத்தி வருகிறது. போயிங் 777-300 .ஆர். விமானங்கள்,  ஏர்பஸ் 330-200/300, சமீபத்திய  போயிங் 737 மேக்ஸ் 8,  அடுத்த தலைமுறை போயிங் 737எஸ் மற்றும் ஏ.டி.ஆர். 72 -500/600எஸ் உள்ளிட்ட  விமானங்களை சேவையில் கொண்டுள்ளது.

Jet Airways Media Contacts
Gaurav Sahni
DGM - Corporate Communications
Tel: +91 11 46095012

Srirupa Sen
Manager – Corporate Communications
Tel: +91 22 61211152Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...