மொத்தப் பக்கக்காட்சிகள்

ரெனிவ் பவர் லிமிடெட், புதிதாக பங்கு வெளியிட அனுமதி வேண்டி செபிக்கு விண்ணப்பம்

ரெனிவ் பவர் லிமிடெட், புதிதாக பங்கு வெளியிட அனுமதி வேண்டி செபிக்கு விண்ணப்பம் 

ரெனிவ் பவர் லிமிடெட் (Renew Power Limited), புதிதாக பங்கு வெளியிட அனுமதி வேண்டி (DRHP) செபி (SEBI) அமைப்புக்கு விண்ணப்பம் செய்துள்ளது.
ரூ. 10 முக மதிப்பு கொண்ட (Face Value) 26,000 மில்லியன் பங்குகள் புதிதாக விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் ஆஃபர் பார் சேல் (Offer for Sale) என்கிற முறையில் 94,377,109 பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஜிஇஎஃப் எஸ்ஏசிஇஎஃப் இந்தியா (GEF SACEF India) நிறுவனத்தின் 2,479,297 பங்குகள், கிரீன் ராக் பி 2014 நிறுவனத்தின் (Green Rock B 2014 Limited) 12,117,812 பங்குகள், ஜிஎஸ் வைவெர்ன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின்  (GS Wyvern Holdings Limited) 79,780,000 பங்குகள்  விற்பனை செய்யப்பட உள்ளன.

தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு 5 சதவிகிதத்துக்கு குறையாமல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். பணியாளர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு பங்கு விலையில் 10 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும்.

இந்தப் பங்குகள், பங்குச் சந்தைகளில் (Stock Exchanges) பட்டியலிடப்படும்.
சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ளும் முன்னணி நிறுவனங்களாக (Global Coordinators and Book Running Lead Managers - GCBRLMs) கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல் கம்பெனி லிமிடெட், டிஎஸ்பி மெரில் லிஞ்ச் லிமிடெட், கோல்ட்மேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஜேஎம் ஃபைனான்ஸியல் லிமிடெட் மற்றும் ஜே.பி. மார்கன் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.
பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ளும் முன்னணி நிறுவனங்களாக ( Book Running Lead Managers - BRLMs) ஹெச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ஐடிஎஃப்சி  பேங்க் லிமிடெட், யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் யெஸ் (YES)செக்யூரிட்டீஸ் (இந்தியா) லிமிடெட் ஆகியவை உள்ளன.

செபி அமைப்பின் விதிமுறைகளின்படி (SEBI ICDR Regulations), ஏல முறையில் (Book Building Process) பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. மொத்தம் விற்பனைக்கு உள்ள பங்குகளில்,75 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyer - QIB) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விருப்பத்தின் அடிப்படையில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors) 60% வரை பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில், மூன்றில் ஒரு பகுதி பங்குகள் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில், கியூஐபி முதலீட்டாளர்கள் பிரிவில் 5 சதவிகிதம் மட்டும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர்த்து) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
மேலும், 15 சதவிகிதத்துக்கு குறையாத பங்குகள் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கு (Non-Institutional Bidders) வழங்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு (Retail Individual Bidders) 10%க்கு குறையாமல் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

தகுதி வாய்ந்த இந்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தனியே பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைத்து தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர்த்து) அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர்கள், வங்கி கணக்கிலிருந்து (SCSB) பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும்.

ரெனிவ் பவர் லிமிடெட் பற்றி

ரெனிவ் பவர் லிமிடெட் (Renew Power Limited), மொத்த எரிசக்தி உற்பத்தி திறன் அடிப்படையில் (energy generation capacity) இந்தியாவின் மிகப் பெரிய  புதுப்பிக்க தக்க எரிசக்தி ஐபிபி  (renewable energy IPP) நிறுவனமாக உள்ளது. (ஆதாரம் - க்ரைசில் அறிக்கை.) பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பம் தாக்கல் செய்த (Draft Red Herring Prospectus -DRHP) அன்று இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறன் சுமார் 5.85 GW ஆகும். இதில், செய்ல்பாட்டு உற்பத்தி திறன் (operational capacity) 3.92 GW ஆக உள்ளது. 1.66 GW உற்பத்தி திறன் உருவாக்கப்பட்டு வருகிறது. 2018  ஏப்ரல் நிலவரப்படி, 0.27 GW காற்றாலை மின் உற்பத்தி திறன் உள்ளது.

ரெனிவ் பவர் லிமிடெட், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் திட்டங்களை உருவாக்கி, கட்டமைத்து சொந்தமாக இயங்கி வருகிறது. உற்பத்தி செய்யப்படும் எரி சக்தியானது வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், இயற்கை மற்றும் செயற்கை (organic and inorganic) முறையில் அதன் செயல்பாட்டு உற்பத்தி திறனை கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இயற்கை என்பது சுயமாக மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதாகவும், செயற்கை என்பது பிற நிறுவனங்களை கையக்கப்படுத்துவதன் மூலம் மின் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதாகவும் உள்ளது.

மத்திய அரசு, புதுப்பிக்கதக்க எரி சக்தி துறையை (renewable energy industry) மேம்படுத்தும் வகையில் கொள்கைகளை கொண்டுள்ளது. அதை இந்த நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொன்டு, இந்திய புதுப்பிக்கதக்க எரி சக்தி துறையில் முன்னணி சந்தைப்  பங்களிப்பு நிறுவனமாக உள்ளது. இதன் ஐந்தொகை (balance sheet) மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் மூலதனம் போட்டிருக்கிறார்கள்.

 ரெனிவ்  பவர் லிமிடெட், தகுதி வாய்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநராக சுமந்த் சின்ஹா (Chairman and Managing Director, Sumant Sinha) உள்ளார். இவருக்கு செயல்பாடு மற்றும் வணிக உத்திகளில் சிறப்பான அனுபவம் இருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ரெனிவ்  பவர் லிமிடெட் ஆரம்பிக்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் முதன் திட்டம், குஜராத் மாநிலத்தில் உள்ள ஜஸ்டன் (Jasdan) நகரில் 25.20 MW  உற்பத்தி திறனுடன் அமைந்தது. இதன் செயல்பாட்டு உற்பத்தி திறன் 2015 மார்ச் 31 ஆம் தேதி 545.76 MW ஆக இருந்தது. இது, 2016 மார்ச் 31 ஆம் தேதி 986.90 MW ஆக அதிகரித்தது. மேலும், இந்தியாவில் 1 GW க்கும் அதிகமாக புதுப்பிக்கதக்க எரி சக்தி கொண்ட செயல்பாட்டு நிறுவனமாக ரெனிவ்  பவர் லிமிடெட் கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் சாதனை படைத்தது. இதன் செயல்பாட்டு உற்பத்தி திறன் 2016 மார்ச் 31 ஆம் தேதி சுமார் இரு மடங்காக 1.99 GW ஆக அதிகரித்தது. 2016 மார்ச் 31 ஆம் தேதி சுமார் இரு மடங்காக  3.92 GW ஆக உயர்ந்தது.ஆஸ்ட்ரோ எனர்ஜி ( Ostro Energy) நிறுவனத்தை 2018 மார்ச் 28 ஆம் தேதி கையக்கப்படுத்தியது.

இந்த நிறுவனத்தின் காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் திட்டங்கள் இந்தியா முழுவதும் எட்டு மாநிலங்களில்  பரவி இருக்கிறது.  2018 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, எந்த ஒரு மாநிலத்திலும், மொத்த பயன்பாட்டில் 26.81 சதவிகிதத்க்கு மேல் இல்லை. காற்றாலை மற்றும்  சூரிய ஆற்றல் திட்டங்களை கலந்தே இந்த நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. மேலும், பொதுப் பயன்பாடு, தனியார் நிறுவனங்கள் பயன்பாடு என கலந்தே மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. எந்த ஒரு நிறுவனத்துக்கும் அளிக்கப்படும் மின்சாரத்தின் அளவு, 2018 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மொத்த உற்பத்தி திறனில் 17.74% க்கு மேல் இல்லை. இந்தநிறுவனம், திட்ட அமலாக்கம், செயல்பாட்டு திறன் (EPC and O&M திறன்கள்)  போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. இந்தத் திறன், நிறுவனத்தின் உள்ளே மற்றும் வெளியே உள்ள நிபுணர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், பல்வேறு ஒரிஜினல் கருவிகள் உற்பத்தி (OEM)  நிறுவனங்களுடன் கூட்டுக் கொண்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க உதவும். மேலும், பல ஒரிஜினல் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் விரும்பும் நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்ந்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மூலதனம் போட்டிருக்கிறார்கள். இதில், பங்கு மூலதனம், திட்ட நிதி உதவி, நிறுவனக் கடன் (equity, project finance and corporate debt) போன்றவை அடங்கும். மேலும், மூலதனம் அறிப்பவர்கள், பல்வேறு முதலீட்டாளர்களும் இதில் பணத்தை போட்டுள்ளார்கள். பங்கு முதலீட்டாளர்களை எடுத்துக் கொண்டால், தனிப்பட்ட பங்கு முதலீடு, இறையாண்மை செல்வம் மற்றும் ஓய்வூதிய நிதிகள் (private equity, sovereign wealth and pension funds) அடங்கும்.

 மேலும், புதுப்பிக்கதக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில்  இந்த நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் (institutional equity investors)  மொத்தம் ரூ. 66,965.67 மில்லியன் முதலீடு செய்திருக்கிறார்கள். 2018 மார்ச் மாதத்தில் கூட அதிக முதலீடு வந்துள்ளது.

 ரெனிவ்  பவர் லிமிடெட்-ன் மூலதன அமைப்பு கடன்கள் மற்றும் திட்ட நிதி உதவிகள்  (debt and project financing) என கலவையாக இருக்கிறது.  பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கடன் உதவி அளித்து, பங்கு மூலதனம் மீதான வருமானம அதிகரிக்க உதவி இருக்கின்றன.

மசாலா பாண்ட்  (masala bond)  வெளியீடு மூலம் ரூபாய் மதிப்பிலான USD 475 million திரட்டிய முதல் இந்திய புதுப்பிக்கதக்க எரிசக்தி நிறுவனமாக ரெனிவ்  பவர் லிமிடெட் உள்ளது. (ஆதாரம் க்ரைசில் அறிக்கை). சரியான நேரத்தில் திரட்டப்பட்ட நிதி இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இந்திய புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமாக இந்த நிறுவனம் உருவெடுக்க அதன் இதர நிறுவனங்களின் கையக்கப்படுத்தல் மற்றும் தொடர்ந்த பங்கு மூலதன முதலீடு, கடன் அளிப்பு போன்றவைகள் உள்ளன. அண்மையில் ஆஸ்ட்ரோ எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலை மற்றும் சூரிய சக்தி பிரிவுகளை வெற்றிகரமாக கையக்கப்படுத்தி உள்ளது. இந்த ஆஸ்ட்ரோ எனர்ஜி நிறுவனம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி பிரிவில் பெரிய நிறுவனம் மற்றும் பரவலாக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது. இன்றைய தேதியில் இந்திய புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் மிகப் பெரிய கையக்கப்படுத்தலாக இது உள்ளது. ஆதாரம்: க்ரைசில் அறிக்கை. கடந்த 2017 நவம்பர் மாதத்தில் இந்த நிறுவனம், கேசிடி (KCT) நிறுவனத்தின் காற்றாலை திட்டங்களை வாங்கி உள்ளது. இதே போல் பல சிறிய புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டங்களை கையக்கப்படுத்தி உள்ளது.

பங்கு வெளியிட விண்ணப்பம் செய்துள்ள தேதியில் இதன் மொத்த உற்பத்தி திறன்  5.85 GW ஆக உள்ளது. இதில், 1,108.10 MW ஆஸ்ட்ரோ எனர்ஜி நிறுவனத்திடமிருந்து கையக்கப்படுத்தியது. 103.10 MW  கேசிடி நிறுவனத்திடமிருந்து கையக்கப்படுத்தியது. 42.00 MW  இதர நிறுவனத்திடமிருந்து கையக்கப்படுத்தியதாகும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...