மொத்தப் பக்கக்காட்சிகள்

சீன சந்தையில் ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு - ஃபியோ

சீன சந்தையில் ஸ்டார்ட்அப், சிறு  நிறுவனங்களுக்கு மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு  - ஃபியோ

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations -FIEO), தொடக்க நிலை நிறுவனங்கள்  (startups) மற்றும் சிறு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீன சந்தையில் மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது என்பதை கணித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்தோடு, 2018 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் நடக்கும், 25 வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சியில் (25th China Import & Export Fair) ஃபியோ  அமைப்பு பங்கேற்கிறது.

இக்கண்காட்சி, குன்மிங் டயான்ச்சி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் (Kunming Dianchi International Convention and Exhibition Centre) நடக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 53%  அதிகரித்துள்ளது. அந்த ஆண்டில் மொத்தம் 124 கோடி அமெரிக்க டாலர்  (US $ 1.24 Billion) மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இயற்கை ரசாயனங்கள் (Organic Chemicals), ஜவுளிகள் - ஆடைகள், பட்டுத் துணிகள், உணவு பொருட்கள், கிரானைட்கள், தாதுக்கள், மருத்துவ கருவிகள் மற்றும் மருந்துகள், ஆயுர் வேத மருந்துகள், நகைகள்,  அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மென் பொருட்கள், சுற்றுலா, கருவிகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்டவைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

சீனா, அதன் ஏற்றுமதி விதிமுறைகளை தளர்த்த தொடங்கி இருக்கிறது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் ஊக்கமூட்டுவதாக உள்ளது. மேலும், குறைந்த செலவில் அதிக ஏற்றுமதியை சீனாவுக்கு மேற்கொள்ள பல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (யூஎஸ்) மற்றும் வளர்ந்த நாடுகள் விதித்துள்ள புதிய வர்த்தக கட்டுப்பாடுகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகளாக மாறி உள்ளன.  சீனா - தெற்கு ஆசிய கண்காட்சி பெரிய ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த ஏற்றுமதி கண்காட்சி B2B மற்றும் B2C ஆக ஏற்றுமதியாளர்களுக்கு நேரடியாக சீன நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். ஃபியோ, இக்கண்காட்சியில் இந்திய அரசு சார்பாக கண் காட்சி அரங்குகளை அமைக்கிறது. இதில் சிறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு சலுகை கட்டணத்தில் அரங்குகள் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள அனைத்து ஏற்றுமதியாளர்களும்

FIEO,
Southern Region Head Office,
Chennai.
Tel: +44-28497755, 28497766,
Email: fieosr@fieo.org,
Mob: +918136979803,
+919789910003

தொடர்பு கொள்ளவும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...