மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ லைஃப் : உத்தரவாத வருமானத் திட்டத்தில் சேரலாமா?


எஸ்.பி.ஐ லைஃப்   உத்தரவாத வருமானத் திட்டத்தில் சேரலாமா?  இத்துடன் அது தொடர்பான விளம்பர நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளேன்.

- இசக்கி முத்து, கடையம்

பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்


பதில் + நிதி சாணக்கியன்

வீரம் விழைந்த மண்ணை சேர்ந்த உங்களுக்கு பாராட்டுகள். உங்கள் ஊரை சேர்ந்த, கொள்ளையர் மற்றும் கொலைக்காரர்களை வீரமாக, துணிச்சலாக விரட்டி அடித்த சண்முகவேலு - செந்தாமரை தம்பதிகளுக்கு எங்களின் பாராட்டுகளை தெரிவிக்கவும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.

இது வெறும் 6% உத்தரவாத திட்டம் என்பதால் பெரிய லாபம் இல்லை. ஆண்டுக்கு நீங்கள் ரூ.50,000 வீதம், 7 ஆண்டுகள் கட்டினால், மொத்தம் கட்டும் தொகை ரூ. 7 லட்சம்.இது 15 ஆண்டுகளில் இரு மடங்கு கூட ஆகவில்லை ரூ. 6,51,000 ஆக தான் அதிகரிக்கிறது. மேலும், ஆண்டுக்கு ரூ. 50,000 செலுத்தும் பிரீமியத்துக்கு கிடைக்கும் ஆயுள் காப்பீடு ரூ. 5 லட்சம் தான். 30 வயதுள்ள ஒருவர் ரூ. 5 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுத்தால் ஆண்டு பிரீமியம் சுமார் 500 ரூபாய்தான்.

டேர்ம் பிளான் ரூ. 50 லட்சத்துக்கு ஆண்டு பிரீமியம் 7 ஆண்டுகளுக்கு  ரூ.5,000 கட்டி வருவதாக வைத்துக் கொள்வோம். மொத்தமுள்ள 15 ஆண்டுகளில் 8 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 வீதம் தனியே ஆர்.டி.ஐ. போட்டு வருவதாக வைத்துகொள்வோம். அதாவது, தோராயமாக டேர்ம் பிளானுக்கு ஆண்டுக்கு 10,000 செலவாதாக வைத்துக்கொண்டு,  மீதி உள்ள  மீதி 40,000 ரூபாயை வருமான வரிச் சேமிப்பு அளிக்கும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் (இ.எல்.எஸ்.எஸ்)   7 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவிட்டு, அதனை அப்படியே 15 ஆண்டுகளுக்கு விட்டு விடுவதாக வைத்துக்கொள்வோம்.

இப்போது என்ன நடக்கும் உங்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கு பதில் மிக அதிகமாக ரூ.50 லட்சத்துக்கு லைஃப் கவர் கிடைக்கும்.  ஆண்டுக்கு ரூ.40,000 என்பதை மாதம் ரூ.3333 என 7 ஆண்டு முதலீடு செய்து ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் 7 ஆண்டு முடிவில்

ரூ. 4,29,294 ஆக பெருகி இருக்கும். இந்தத் தொகையை அப்படியே இன்னும் 8 ஆண்டுகளுக்கு விட்டு வைத்து அதற்கும் 12% வருமானம் கிடைத்தால் ரூ. 10,62,184  ஆக பெருகி இருக்கும்.


ரூ. 5 லட்சம் கவரெஜ், ரூ. 6.5 லட்சம் முதிர்வு தொகை எங்கே

ரூ. 50 லட்சம் கவரெஜ், ரூ. 10 லட்சம் முதிர்வு தொகை எங்கே?
சிந்திப்பீர் செயல்படுவீர்




இந்த விளம்பரத்தில் ஒரு விஷயத்தை கவனியுங்கள். இதனை யார் வெளியிட்டுக்கிறார்கள். அவர்கள் பெயர் என்ன? தொடர்பு தொலைபேசி எண் எதுவும் இல்லை. அந்த வகையில் பிற்காலத்தில் சொன்னபடி செய்யாமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. உஷார்..! மக்களே உஷார்..


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...