மொத்தப் பக்கக்காட்சிகள்

ஃபண்ட் முதலீடு... மும்பையை முந்திய சென்னை..

MF Chennai ஃபண்ட் முதலீடு... மும்பையை முந்திய சென்னை..

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இந்தியாவின் நாட்டின் நிதி நகரமான மும்பையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு ஜூன் நிலவரப்படி, சென்னை நகரை சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் (ஈக்விட்டி ஃபண்ட்கள்) ரூ.30,200 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. இது 2018 ஜனவரியில் ரூ.80,190 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2016-ல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபின்பு, கண்காணிப்பற்ற முதலீடுகளில் தமிழக மக்கள் முதலீடு செய்வது கணிசமாகக் குறைந்திருக்கிறது. முன்பு, அதிக வட்டி என ஆசை காட்டி எந்த நேரத்திலும் முதலுக்கே பங்கம் வந்துவிடக்கூடிய முதலீடுகளில் தமிழக மக்கள் அதிக அளவில் பணத்தைப் போட்டு நஷ்டம் அடைந்தனர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக இதுமாதிரியான திட்டங்களிலிருந்து மக்கள் பெரிய அளவில் பணத்தை இழந்தனர்.

இது தவிர, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் கடந்த காலத்தில் செய்த முதலீடு லாபம் தராமல், நஷ்டத்தைத் தரவே, இவற்றில் முதலீடு செய்யாமல், வேறு வகையான முதலீடுகளைத் தேடினர். மேலும், வங்கிகளில் எஃப்.டி.க்கான வட்டி குறைந்துவருகிறது.

 இந்த நிலையில் பணவீக்கத்தைவிட நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களைத் தேடினர். மியூச்சுவல் ஃபண்ட்தான் இதற்கு ஏற்றதாக இருக்கிறது.
பிசினஸ் பொன்மொழிகள் (நாணயம் விகடனின் வெவ்வேறு பக்கங்களில் ஒவ்வொன்றாக பிரின்ட் செய்யலாம்.)

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...