மொத்தப் பக்கக்காட்சிகள்

இண்டெக்ஸ் ஃபண்டுகளின் நன்மை, தீமைகள்..! சொக்கலிங்கம் பழனியப்பன், பிரகலா வெல்த்மேனேஜ்மென்ட்

Index Funds Positive and Negative இண்டெக்ஸ் ஃபண்டுகளின் நன்மை, தீமைகள்..!



சொக்கலிங்கம் பழனியப்பன், பிரகலா வெல்த்மேனேஜ்மென்ட்

ஒரு ஃபண்ட் மேனேஜரின் திறமையையோ அல்லது ஒரு ஃபண்ட் நிறுவனத்தின் திறமையையோ வைத்து இவை செயல்படுவதில்லை. ஆகவே, இண்டெக்ஸ் ஃபண்டுகளில் ஹ்யூமன் எரர் (human error) என்று சொல்லக்கூடிய மனிதர்கள் செய்யக்கூடிய தவறுகள் மிக மிகக் குறைவு.

மேலும், இண்டெக்ஸ் ஃபண்டுகள் தொழில் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆகவே, அடிப்படை பொருளாதாரம் நன்றாக இருக்கும் வரைக்கும், இந்த ஃபண்டுகளின் செயல்பாடும் நன்றாக இருக்கும். இந்த வித ஃபண்டுகளின் ஃபண்ட் நிர்வாகக் கட்டணங்கள் குறைவு.

இந்த இண்டெக்ஸ் ஃபண்டுகளிலும் பிற ஆக்டிவ் ஃபண்டுகளைப் போலவே, எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
மேலும், இண்டெக்ஸ் ஃபண்டுகள்  குறிப்பிட்ட குறியீட்டை பின்பற்றுவதால், முதலீட்டுப் பரவாக்கம் (Diversification) நன்றாக இருக்கிறது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆக்டிவ் ஃபண்டுகளை, இன்டெக்ஸ் ஃபண்டுகள் அதிக வருமானம் தந்திருகின்றன. அது போன்ற நாடுகளில் இண்டெக்ஸ் ஃபண்டுகள் குறைந்த செலவில் சிறப்பான வருமானத்தை கொடுத்து வருகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பங்குச் சந்தை பல்வேறு காரணங்களால் அவ்வளவு திறமையாக செயல்படவில்லை. ஆகவே, ஆக்டிவ் ஃபண்ட் மேனேஜர்கள் தொடர்ந்து இண்டெக்ஸ் ஃபண்டுகளைவிட அதிக வருமானத்தைக் கொடுத்து வருகின்றன.
சொக்கலிங்கம் பழனியப்பன்,
பிரகலா வெல்த்மேனேஜ்மென்ட்
 இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் ஆக்டிவ் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவான வருமானத்தை பெற்று வருகிறார்கள்.
ஆக்டிவ் ஃபண்ட் மேனேஜர், சந்தை வெகுவாக ஏறி இருக்கும்போது சற்று பாதுகாப்பான (அதிகம் இறக்கம் காணாத) பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அதேபோல், ரொக்க கையிருப்பை  அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், இண்டெக்ஸ் ஃபண்டுகளால் சந்தை கீழே விழும்போது, விரும்பினாலும் வீழ்ச்சியின் விகிதத்தைக் குறைக்க முடியாது.

தற்போதைய நிலையில் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஆக்டிவ் ஃபண்ட்களிலேயே அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.  காரணம் இண்டெக்ஸைவிட அதிக வருமானத்தை ஆக்டிவ் ஃபண்டுகள் தந்து கொண்டிருப்பதுதான்.
பங்குச் சந்தையைவிட அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், நீண்ட காலத்தில் வங்கி டெபாசிட் விட  சற்று அதிக வருமானத்தை வருமான வரிக்கு பிந்தைய நிலையில் பெற  விரும்புபவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறை முதலீடு செய்பவர்கள், மூத்த குடிமக்கள்,  ஃபண்ட் நிர்வாகத்தில் குறைவான செலவு விகிதத்தை விரும்புகிறவர்கள் போன்ற அனைவரும் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...