மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - செல்வம் சேர்ப்பதற்கான ஒரு நல்ல முதலீட்டுக் கலவை

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - செல்வம் சேர்ப்பதற்கான ஒரு நல்ல  முதலீட்டுக் கலவை

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (UTI Opportunities Fund), 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது, எப்போது வேண்டுமானாலும் முதலீடு  செய்யும் மற்றும் பணத்தை எடுக்கும் வசதி கொண்ட (open-ended)  பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட். 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, 4,40,000 யூனிட்களுடன் 4,110 கோடி ரூபாய் இந்த ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபிக்கப்பட்ட வரலாற்று சாதனையை படைத்துள்ளது. மார்ச் 31, 2018 நிலவரப்படி, ஆரம்பம் முதல் இந்த ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக (CAGR) 14.68% வருமானம் கொடுத்துள்ளது. இதே கால கட்டத்தில் அந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க் (benchmark )ஆண்டுக்கு சராசரியாக 14.23% வருமானம் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் ரூ. 10,000  முதலீடு செய்திருந்தால், அது 2018 மார்ச் மாதக் கடைசியில் ரூ. 56,982  ஆக அதிகரித்திருக்கும். இதே காலத்தில் அதன் பெஞ்ச்மார்க் (S&P BSE 200 TRI) கொடுத்த வருமானம் ரூ. 52,777 ஆக உள்ளது.

திட்டங்களை வகைப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு (Categorization & Rationalization of schemes) செய்வதன் விளைவாக, யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், வேல்யூ ஃபண்ட் (Value Fund) ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த ஃபண்ட்டில் திரப்பட்ட நிதி பெரும்பாலும் பெரிய நிறுவனப் பங்குகளில் (large-cap stocks) முதலீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஃபண்ட், வேல்யூ ஃபண்ட் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், இந்த ஃபண்ட் அதன் முதலீட்டு உத்தியாக நல்ல பண வரத்து அல்லது சிறப்பான வருமான விகிதங்கள் மற்றும் மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். 2018 மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் (portfolio) 81% லார்ஜ் கேப் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. மீதி, மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளாக உள்ளன.

இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் கலவை, அனைவருக்கும் பரிச்சயமான, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க்,  இன்டஸ் இந்த் பேங்க், இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட், ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட், டிசிஎஸ், கெயில் இந்தியா, டெக் மஹிந்த்ரா மற்றும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். போன்ற நிறுவனப் பங்குகள் 52%க்கும் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், நன்றாக வளர்ச்சி அடையும் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. மதிப்பீடு மற்றும் நடுத்தர கால வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பங்குகள் தேர்வு செய்யப்படும். குறிப்பிட்ட துறைகளில், அந்த நிறுவனத்தின் வருமான விகிதங்கள் மற்றும் ஆரோக்கியமான பண வரத்து ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில், நிதி மேலாளர் (fund manager ) பண வரத்து அல்லது வருமான விகிதங்களை கவனிக்கிறார்.

முதலீட்டுக் கலவையில் லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக இருந்தாலும், மதிப்பீட்டின் அடிப்படையில் மிட் கேப் பங்குகளும் இடம் பெறுகின்றன. இந்த முதலீட்டு பாணி, டாப் டவுண் மற்றும் பாட்டம் அப் இரண்டும் இணைந்ததாக இருக்கும். இங்கே மதிப்பீட்டின் அடிப்படையில் துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறைகளில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பங்குகள் முதலீட்டுக்கு தேர்வு செய்யப்படுகிறது.

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், தங்களின் ஈக்விட்டி போர்ட்போலியோவை வலுவானதாக உருவாக்க விரும்பும் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. இதில், வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகள் மூலம் நீண்ட கால அடிப்படையில் மூலதனம் பெருக்கப்படுகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...