மொத்தப் பக்கக்காட்சிகள்

கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டை ஏற்றுமதி மையமாக்கும் திட்டம்..!


கூட்டு முயற்சிகள் மூலம்த மிழ்நாட்டை ஏற்றுமதி மையமாக்கும் திட்டம்..!

இபிசி ஏற்றுமதி உச்சி மாநாடு 2017 -ல்  FIEO தென் மண்டல சேர்மன்  டாக்டர். ஏ, சக்திவேல் உரை

உலக வர்த்தக வளர்ச்சி 2017ம் ஆண்டில் 3.6%ஆக அதிகரித்திருக்கும் என உலக வர்த்தக அமைப்பு (WTO), மறுமதிப்பீடு செய்துள்ளது. முந்தைய மதிப்பீடு 2.4% ஆக இருந்தது. இது உலக வர்த்தகம், மீண்டும் சிறப்பாக வளர்ச்சிப் பாதைக்கு வந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. வரும் ஆண்டுகள், ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். 2016 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வளர்ச்சி 1.3% ஆகதான் இருந்தது என்பதை பார்க்கும் போது, 2017-ம் ஆண்டின் வளர்ச்சி சிறப்பானதாக உள்ளது. ஏற்றுமதி அதிகரிக்க, நடப்பு 2017-18 ம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் (2018 ஜனவரி முதல் மார்ச் வரை)  அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை அதிகரிக்கும் என நாம் எதிர்பார்ப்பதாகும்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் (Demonetization and GST) சார்ந்த பிரச்னைகளிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டிருக்கிறது. இதனல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  வரும் காலாண்டுகளில் வேகம் எடுக்க ஆரம்பிக்கும்.  வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் (Foreign Trade Policy) அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், அரசிடமிருந்து எதிர்பாக்கப்படும் பொருளாதார விவேக நடவடிக்கைகள் போன்றவை பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகமெடுக்க வைத்துள்ளது.

ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank), வரும் காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என கணித்துள்ளது. அது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் அதிகம் வளர்ச்சி கண்டு வரும் துறைகளில், உற்பத்தி துறை ஒன்றாக உள்ளது.  "மேக் இன் இந்தியா" திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது மூலம் உலக வரைபடத்தில் இந்தியாவை உற்பத்தி மையமாக்கியது. இதன் மூலம்  இந்திய பொருளாதாரத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. 2020 ம் ஆண்டுக்குள் உலகின் ஐந்தாவது பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs), "ஏ ரோடு இன் 2015"  (A Road in 2050) என்கிற தலைப்பில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், 2032 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு, மூன்றாவது பெரிய பொருளாதார  வலிமை உள்ள நாடாக இந்தியா மாறும் என குறிப்பிட்டிருக்கிறது.

நாம் சந்தித்து வரும் பல்வேறு தடைகளை தாண்டி, இந்தியா பல துறைகளில் முன்னணியில் உள்ளது. உலக அளவில் பண்ணை மற்றும் வேளாண் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பால் உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக உள்ளோம். உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 19% ஆக உள்ளது. இறால் ஏற்றுமதியில் முக்கிய ஏற்றுமதியாளராக இருக்கிறோம்; உடனடி காபி (instant coffee), உணவு தானியங்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறோம்; பழங்கள் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளோம்; நறுமணப் பொருட்கள் உற்பத்தியில் பெரிய நாடாக உள்ளோம்; இன்னும் பலவற்றில் முன்னணியில் உள்ளோம். உலக வங்கியின் மதிப்பீடுபடி, 2025ம் ஆண்டுக்குள், உலக அளவில் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) அமலாக்கம் மூலம், 2 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பொதுச் சந்தை (common market) உருவாகி இருக்கிறது என்பது நான் உறுதியாக சொல்வேன். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா முதலீடுகளை மேலும் ஈர்க்கும் மற்றும் தொழில்துறை மேம்பாடு காணும்.

உலக அரங்கில் தலைமைத்துவத்தை நிரூபிக்கும் ஒரு பெரிய வாய்ப்புக்கு தமிழ்நாடு தயாராக உள்ளது. இதன் விளைவாக, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை போன்ற நகரங்கள் உலக நகரமாக வளர வாய்ப்பு உள்ளது. .

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது வாகனத் துறை, ஜவுளி, உற்பத்தி, பயோ - டெக் (உயிரியல்), ஆரோக்கியம், எரிசக்தி, மருந்து தயாரிப்பு, அனிமேஷன், காட்சி விளைவுகள் (visual effects) ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே முன்னணியில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப (IT) துறையையும்  நிச்சயமாக குறிப்பிடலாம். ஆனால், இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை; இந்தத் துறைகளில் தமிழ்நாடு கட்டாயம் உலக மையமாக மாற வேண்டும். வளர்ச்சி மேம்பட மற்றும் வருமானம் பன்மடங்கு பெருக, இந்தத் துறைகள் முதலீட்டை ஈர்ப்பது கட்டாயம். இந்த முதலீடுகள் மூலம் மாநில வளர்ச்சி மேம்படும்.

தமிழ்நாடு, குறிப்பாக சென்னை, வாகனத் துறையின் மையமாக உள்ளது. இங்கு இந்தியாவின் கார் உற்பத்தியில் 40%க்கும் மேல், வாகன உதிரி பாகங்களில் 35% நடக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதியாகிறது. வாகனங்கள் உற்பத்திக்கான மிகவும் செலவு குறைந்த மையமாக தமிழ்நாடு உருவாகி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வாகன ஏற்றுமதி ஆண்டுக்கு சராசரியாக 30 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டு 350 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் இந்தியாவில் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய மையமாக மாறியிருக்கிறது.

பாரம்பரியமாக, தமிழ்நாடு வாகன உற்பத்திக்கு பெயர் பெற்றது. 1840 ம் ஆண்டு சிம்சன்ஸ் (Simpsons), இந்தியாவில் முன்னோடியாக வாகனத் துறையில் ரெயில் பெட்டிகள், மோட்டார் கார்கள், டீசல் என்ஜின்கள் மற்றும் நீராவியில் இயங்கும் பயணிகள் பஸ் ஆகியவற்றை தயாரித்தது. 1948 ஆம் ஆண்டு, அசோக் லேலண்ட் நிறுவனம், அஸ்டின் கார்களை அசெம்பிள் செய்ய ஆரம்பித்தது. ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழில்சாலை (Integral Coach Factory - ICF) கடந்த 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் டிவிஎஸ் குழுமம், பல்வேறு வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தி ஆலைகளை தமிழ்நாட்டில் ஆரம்பித்தது. இதனை அடுத்து இந்தியாவின் பெரிய வாகன உற்பத்தி மையமாகவும், வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதி மையமாகவும் தமிழ்நாடு வளர்ந்தது. ஹூண்டாய், சிறிய கார்களுக்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக சென்னையை மாற்றியது. தற்போது இந்தியாவிலிருந்து பல்வேறு முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் ஏற்றுமதியாகின்றன. குறிப்பாக ஃபோர்ட், கேட்டர்பில்லர், கோமட்சு &கோபெல்கோ, டூசன் (Ford, Caterpillar , Komatsu & Koebelco,  Doosan) போன்றவற்றை குறிப்பிடலாம். சென்னை, இந்தியாவின் டெட்ராய்ட்  (Detroit of India) என அழைக்கப்படுகிறது. இந்தத் துறையில் வரும் ஆண்டுகளில் சென்னை மேலும் பல வாய்ப்புகளை பெரும்.

தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் இன்னொரு தொழில்துறை ஜவுளி (Textiles) ஆகும்.  இந்தியாவின் மொத்த ஜவுளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு அளித்து வருகிறது. மேலும், அதிக அந்நிய செலாவணியையும் (foreign exchange) ஈட்டி தந்துக் கொண்டிருக்கிறது. பாரம்பரியமாக கைத்தறி (handloom) துறையில் மதுரை வலிமையாக இருந்து வருகிறது. ஆனால், மரபு என்பது நவீன முறையில் ரசிக்கப்பட வேண்டும்.  அந்த வகையில், மாறி வரும் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப, புதிதாக பல்வேறு பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதோடு புதிய சந்தைகளையும் பிடிக்க வேண்டும்.

புதிய தொழில்முனைவோர்களுக்கு நான் ஓர் ஆலோசனை வழங்க விரும்புகிறேன். நீங்கள், பரந்துபட்ட பல்வேறு பொருட்களை தயாரிப்பதோடு, மற்றவர்களை காப்பி அடிப்பதை விட புதுமையான பொருட்களை உருவாக்குங்கள். இதை செய்தால் நீங்கள் சர்வதேச சந்தையில் நிச்சயம் வெற்றி பெற முடியும். அங்கே பல்வேறு புதிய சந்தை வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஜவுளித் துறையை எடுத்துக் கொண்டால், டெக்னிக்கல் ஜவுளிகள் (technical textiles) பிரிவில் பெருமளவு தேவைப்பாடு உள்ளன. இது, வீடுகளில் பயன்படுத்தப்படும் ஜவுளிகள் தீ பிடிக்காமல் ஃபையர் புருப் உடன் கூடியதாக அல்லது அழுக்கு ஆகாத ஜவுளி பொருட்களாக இருக்கலாம். இவை, வேளாண் துறை, தொழிசாலைகளில் பயன்படும் துணிகள் தவிர்த்த ஐவுளிகளாக இருக்கலாம். இப்படி புதுமையான பொருட்களை தயாரிக்கும் போது, நல்ல விலை கிடைப்பதோடு, போட்டியும் குறைவாக இருக்கும். இதேபோல், ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதியாளர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்றவர்கள் வழங்க முடியாததை நீங்கள் அளிக்க முடியும்.

நாம் தொழில்முனைவோர்களின் (entrepreneurs) நாட்டில் உள்ளோம். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்தான் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ - MSME) உள்ளன. நாட்டில் உள்ள மொத்த எம்எஸ்எம்இ நிறுவனங்களில் 15 சதவிகிதம் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. 8,000-க்கும் மேற்பட்ட பொருட்களை இந்த நிறுவனங்கள் ரூ. 32,000 கோடி முதலீட்டில் தயாரித்து வருகின்றன  நுண் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களை (micro and small enterprises) மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உள்ளன. கூட்டு அபிவிருத்தி திட்டங்கள் (Cluster Development Programmes) வளர்ச்சி வேகப்படுத்துகின்றன.

உணவுப் பதப்படுத்தும் துறை (Food Processing Industry) வேகமாக வளரும் துறையாக இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில்,   "உடனே சாப்பிடக்கூடிய உணவு" ( Ready to Eat) ; "சமைக்க தயாராக உள்ள உணவு"க்கு (Ready to Cook) மாறி வருகிறார்கள்.  அதன் மகத்தான எதிர்கால வாய்ப்புகளை பார்த்தால், 20 முதல் 25 தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யும்படி இபிசி (EPC) -ஐ  கேட்டுக் கொள்கிறேன். மதுரை உணவுப் பதப்படுத்தும் பூங்காவை முன்மொழியவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் FIEO மூலம் உதவி செய்வேன். குறிப்பாக, அரசாங்கத்திடமிருந்து நிதி ஆதாரத்தை  பெற உதவி செய்வேன்.

இந்தியாவின் ஏற்றுமதில், 2016-17ம் ஆண்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.50% ஆகவும் அதன் மதிப்பு 3,151 கோடி டாலராக (31.51 Billion USD) உள்ளது. ஏற்றுமதியில் குஜராத் (23%) மற்றும் மஹாராஷ்ட்ரா (21%)-ஐ அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 2014-15 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கோடி 3578 கோடி டாலராக  (USD 35.78 Billion) இருந்தது. இது 2015-16ம் ஆண்டில் 3,026 கோடி டாலராக (USD 30.26 Billion) குறைந்துள்ளது.  இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியும் குறைந்துக் காணப்பட்டது.

ஏற்றுமதியை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டின் மிகப் பெரிய சாதகமாக, மென்பொருள் (சாஃப்ட்வேர்) தவிர, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் பொருட்கள் தயாரிப்பு, ஆட்டோமொபைல் மற்றும்  உதிரிப் பாகங்கள் உணவுப் பதப்படுத்துதல் (Textiles & Garments, Leather,  Automobile and components, Food processing)போன்றவை உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து பொறியியல், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள், ஜவுளிகள், ஆடைகள், தோல் பொருட்கள், ரசாயனங்கள், வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவுகள், கடல் பொருட்கள், ஆபணரங்கள் ( Engineering, Automobile and spare parts, Textiles and Garments, Leather products, Chemicals, Agro & Processed Food, Marine products, Jewellery) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அமெரிக்கா (45%), இங்கிலாந்து (16%), ஐரோப்பிய ஒன்றியம் (15%), ஐக்கிய அரபு நாடுகள் (14%) ஆப்ரிக்கா (4%), ஜப்பான (3%), போன்ற நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவின் கடற்கரையில் ஒரு தனித்துவமான இடமாக தமிழ்நாடு அமைந்திருப்பது நமக்கு முக்கியமான வரப்பிரசாதமாக இருக்கிறது. தமிழ்நாடு நாட்டிற்கான ஓர் ஏற்றுமதி மையமாக தன்னை மாற்றும் வளங்களை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைமுகத் துறைமுகங்களையும் துறைமுக வழித்தடங்களுடன் இணைக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. இபிசி. மற்றும்  தொழில் வர்த்தக சபை (சேம்பர்) ஆதரவுடன் உங்களைப் போன்ற தொழில்முனைவோர்கள் இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி மாநிலமாக தமிழகத்தை உருவாக்க உதவுவீர்கள் என  நான் நம்புகிறேன்.

நாட்டின் உள்கட்டமைப்பு, புவியியல் (geographical) அமைவிடம் மற்றும் கிடைக்கும் வளங்கள் போன்றவை காரணமாக ஓர் ஏற்றுமதி மையமாக இயங்கக்கூடிய சில மாநிலங்களில் ஒன்றாக நம் தமிழ்நாடு உள்ளது. தற்போது மாநிலத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளை இணைக்கும் மிகவும் வசதியான சாலை இணைப்புகள் உள்ளன.
இந்தியாவின் முக்கிய தொழில்துறை, வேளாண் மற்றும் கலாச்சார மையங்களை இணைக்கும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை (Golden Quadrilateral NH) மூலமும் சாலை வழியாக தமிழ்நாடு இணைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சில கவலைகள் உள்ளன. குறிப்பாக, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் ஏற்றுமதிகளில் அதிக வட்டியிலான கடன்,  தொழில்நுட்ப வசதி இல்லாதது, குறைவான சந்தைப்படுத்தும் வாய்ப்புகள், ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் பணப்புழக்க நெருக்கடி, அதிக  பரிவர்த்தனை கட்டணங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேலே குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண FIEO பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் மத்திய கால மீளாய்வு குறித்த கலந்துரையாடலில் சில பிரச்னைகள் குறித்து அலசப்பட்டன. பல பிரச்னைகள் மத்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளன.

இந்தியாவில் கடன் விகிதம் (credit rate), சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது (international benchmark) குறைந்தது 6% அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒரு துறையை எடுத்திக் கொண்டால், ஏற்றுமதிகளுக்கான உள்ளீடுகளை கொள்முதல் (procurement of inputs) 9 மாதங்கள் எடுத்துக் கொள்கிறது மற்றும் மதிப்பு கூட்டும் செலவு 20% ஆகும். இதனால், ஏற்றுமதி போட்டித் திறன் (exports competitiveness) 5% குறைகிறது. வட்டி சமப்படுத்தல் திட்டம் (Interest Equalisation Scheme) எம்எஸ்எம்இ உற்பத்தியாளர்களுக்கு 3% வட்டி ஆதரவை வழங்குகிறது. மத்திய அரசு, பொருட்களை வாங்கி விற்கும் மெர்சன்ட் ஏற்றுமதியாளர்களுக்கும் (Merchant exporters) இந்த வட்டிச் சலுகையை அளிக்க வேண்டும் என FIEO மத்திய அரசுக்க்கு ஆலோசனை அளித்துள்ளது.
கடன் இணைப்பு மூலதன மானிய திட்டம் (Credit Link Capital Subsidy Scheme )  ரூ. 1 கோடி வரையிலான கடனுக்கு வட்டி மானியம்  15% வழங்கப்படுகிறது. மூலதனப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் {Export Promotion Capital Goods (EPCG) scheme}  ஏற்றுமதிகாக செய்யப்படும் இறக்குமதிகளை வரி இல்லாமல் அனுமதிக்கிறது. இது மூலம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் அவற்றின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

மத்திய அரசின் மதிப்பீட்டின் படி, ஏற்றுமதி பரிவர்த்தனை செலவு 8 முதல் 13% வரை உள்ளது. அறிவு குறைபாடு, குறைவான தொழில்நுட்பம், அமைப்புச் சார்ந்த பிரச்னைகள் (system issues)  போன்றவற்றால் எம்எஸ்எம்இ நிறுவனங்கள், ஏற்றுமதி செய்யும் போது அதிகமாக செலவிடுகிறார்கள். இத்தகைய செலவை குறைக்க, வர்த்தக உதவிகள் ஒப்பந்தத்தை (Trade Facilitation Agreement ) இந்தியா திருத்தி இருக்கிறது. வணிகத்தை சுலபமாகச் செய்வதற்காக (Ease Of Doing business) மத்திய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும் செலவினங்களைக் குறைப்பதற்கும் துணைபுரிகின்றன.
FIEO, பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஓர் ஒருங்கிணைந்த தளத்தை (Integrated platform) வர்த்தகர்களுக்கு வழங்குகிறது.

இறக்குமதியாளர்கள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க 64 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய இருதரப்பு ஒப்பந்தங்களை (Bilateral agreements) நாம் கொண்டிருக்கிறோம்.

நாங்கள், சந்தை அபிவிருத்தி உதவி (Market Development Assistance), சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் (international trade fairs) மானியக்  கட்டணத்தில் அரங்குகள் (stall) அமைக்கும் வசதியை அளித்து வருகிறோம். ஒரு ஆண்டில் நாங்கள் 50க்கும் மேற்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளோம்.

இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு சாத்தியமான சந்தைகளை அளித்துள்ளோம்.

உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பது தவிர, அந்நிய செலாவணி போக்குகள் (forex trends), கொள்கை விளக்கங்கள், சர்வதேச சந்தை வாய்ப்புகள் குறித்து உறுப்பினர்களுடன் நேரடி உரையாடி (Live Chat) வருகிறோம்.
தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல்  உதவியை அளிக்க, எம்எஸ்எம்இ நிறுவனங்களை மையமாகக் கொண்ட ஐரோப்பிய நெட்வொர்க்கில் (Enterprise Europe Network) தீவிரமாக FIEO பங்கு பெற்று வருகிறது.  இந்த நெட்வொர்க்கின் மூலம்  ஐரோப்பாவிலுள்ள சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை (SMEs) சார்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள் நேரடியாக (face-to-face) இணைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்த நெட்வொர்க்,  தொழில் விதிமுறைகள் & ஒழுங்குமுறைகள்,  தரநிலைகள், சான்றிதழ் தேவைகள் மற்றும் சுங்கம் சார்ந்த தகவல்களை வழங்குவதைத் தவிர, கூட்டுத் திட்டங்களையும் உருவாக்கி தருகிறது.
சர்வதேச வர்த்தகத்தை தொடங்க விரும்பும்  தொழில்முனைவோர்களுக்கு  தேவைப்படும் அனைத்து தகவல்களையும் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு INDIAN TRADE PORTAL மூலம் FIEO அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், இந்த இணையதளத்தை பலரும் பயன்படுத்துகிறீர்கள் என்று நான்  நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் குறிப்பாக சிறிய நகரங்களில் தகவல் பரிமாற்றப் பற்றாக்குறையை நீக்குவதில் இபிசி  உதவி செய்து வருகிறது என்பதை அறிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். EPC -ன் முயற்சிகள் மூலம் தங்களின் வணிகத்தை தொடங்கி வளர்ச்சி பெற்ற  பல தொழில்முனைவோர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது அதன் அணியின் செயல்திறன் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்துகிறது.

மாநிலத்தின் இந்தப் பகுதியில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க சிறந்த வேலைகளை செய்தற்காக திரு ராஜன் மற்றும் அவரது அணிக்கும் நான் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்

 FIEO முதல் EPC வரையிலான அனைத்து உதவிகளுக்கும் வாக்குறுதி அளிக்கிறேன். மேலும், ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவதற்கு மேலும் மேலும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
 சரியான திட்டமிடல், விடாமுயற்சி, தொடர்ச்சியான பின்தொடர் (consistent follow-up), மற்றும் மிக முக்கியமாக, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு (patience and commitment) ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் வெற்றிகரமான வணிகத்திற்கு அவசியம் தேவையானவை களாகும்.
பல்முனை மார்க்கெட்டிங் முயற்சிகளுக்கு, பிராந்திய வாய்ப்புகள், தரநிலைகள், மொழிகள், கலாச்சார வேறுபாடுகள், மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அளவு ஆகியவை தேவைப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் வெற்றிகரமாக நுழைய, நுகர்வோர் முன்னுரிமைகள், ஏற்கனவே உள்ள விற்பனை சேனல்கள் மற்றும் விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை கவனமாக தொடர்ந்து பகுப்பாய்வு செய்து வர வேண்டும்.
சர்வதேச வர்த்தகத்தில், விற்பனை சேனல்கள், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகள், விலை நிர்ணயிடம் மற்றும் பெயரிடல் (pricing and labeling), மற்றும் அறிவார் சொத்துகளின் பாதுகாப்பு (protection of intellectual property) ஆகியவை மிக முக்கியமானவைகளாகும்.

பல்வேறு தடைகளை சமாளிக்க FIEO தொடர்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. மேலும் இங்குள்ள ஏற்றுமதியாளர்களின் நன்மைக்காக மதுரையில் சில நிகழ்ச்சிகளை நடத்த FIEO, இபிசி உடன் இணைந்து செயலாற்ற முடியும் என்பதை  அறிவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

 பல்வேறு தொழில் பிரிவுகளில் வளரும் மகத்தான சாத்தியம் உள்ளதால், ஏற்றுமதியில்  நம்பர் ஒன்  மாநிலமாக தமிழ்நாடு மாற வாய்ப்பு உள்ளது.


நாம் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கிய  தயாரிப்புகளை கொண்டுள்ளோம். இவை போட்டி இல்லாததாகவும் உள்ளதால், இந்தத் தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் மிக குறுகிய காலத்தில்  நாம் இந்த இலைக்கை அடைவோம் என்று நான் நம்புகிறேன்.

இபிசி மற்றும் தொழில் வர்த்தக சபைகள் ஆகியோருடன், கீழ் மட்ட நிலை வரைக்கும் சென்று, பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க மற்றும் சர்வதேச சந்தையில் சவால்களை எதிர்கொள்ள தொழில் முனைவோருக்கு  உதவுவதற்கு FIEO தயாராக உள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை மற்றும் கோயம்புத்தூரை அடுத்து மதுரையில் ஏற்றுமதிகான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.  திரு. ராஜன் மற்றும் அவரது குழு இந்த திசையை நோக்கி மிகச் சிறப்பான பணி செய்து வருவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.


எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இபிசிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7