மொத்தப் பக்கக்காட்சிகள்

பங்குச் சந்தையில் களமிறங்குவது எப்படி ?


திரு. தி. ரா. அருள்ராஜன்முதலீட்டு ஆலோசகர், Arulrajhan.in
பங்குச் சந்தையும் (ஸ்டாக் எக்ஸ்சேஞ்) மற்ற சந்தைகள் போல்தான். எப்படி காய்கறி சந்தைகள், தானிய சந்தைகள் இயங்குகிறதோ, அதைப்போல்தான் பங்கு சந்தையும் இயங்குகிறது.
சந்தை என்றாலே வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் வசதி பண்ணிக் கொடுக்கும் இடம்தானே.

அந்த வகையில் பங்குச் சந்தையும் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் வசதி பண்ணிக் கொடுக்கும் இடம் தான். எல்லா சந்தைக்கும் இடைதரகர்களும், கண்காணிப்பாளர்களும் உண்டு.
பங்குச் சந்தையை செபி (செக்யூரிடிஸ்  அண்ட் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா SEBI) என்று அழைக்கப்படும் ஒழுங்கு முறை ஆணையம் கண்காணிக்கிறது.  

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி, விற்க உதவி செய்பவர்களை பங்கு தரகர்கள், உப பங்கு தரகர்கள் என்று அழைக்கிறோம்.
இந்தப் பங்கு தரகர்கள்தான், வாடிக்கையாளர்களை கொண்டு வருவது, அவர்களுக்கு சேவை செய்வதையும் தொழிலாக கொண்டுள்ளனர்.
எனவே, பங்கு வாங்குவதற்கும், பணத்தை பட்டுவாடா செய்வதற்கும் பங்குச்சந்தை தரகர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.
நாம் பங்குச் சந்தையில் ஈடுபட வேண்டுமானால் இரண்டு வகையான கணக்குகளை துவக்க வேண்டும்

1.
வர்த்தக கணக்கு (Trading Account)
2.
மின்னணு பங்கு கணக்கு (
Demat Account)
இந்த கணக்குகளை துவக்குவதற்கு தேவையான ஆவணங்கள்

1.
பான் கார்ட் (Pan card)
2.
முகவரி சான்று (ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிம அட்டை, பாஸ்போர்ட்)
3.
வங்கி கணக்கு (பாஸ்புக் அல்லது கடைசி சில மாத பரிமாற்ற விவரம் )
4.
இரண்டு மார்பளவு புகைப் படங்கள்

இவை இருந்தால் நீங்கள் கணக்கு துவக்க தயார்.
மேலும் ஏதேனும் உதவி வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
பிறகு ஒரு முதலீட்டளாரகவோ அல்லது வியாபாரியாகவோ அல்லது இரண்டு சேர்ந்தோ செயல்பட்டு வெற்றியடைவது உங்கள் சமார்த்தியம்.
நினைவிருக்கட்டும், உங்களை தகுதிபடுத்திக் கொண்டு மட்டுமே பங்குச் சந்தையில் இறங்குங்கள்.
வாழ்த்துகள்.
தொடர்புக்கு :

T. R. ARULRAJHAN 
trahits@gmail.com
T R Arulrajhan
E mail id: trahits@gmail.com
ECTRA
154, 3rd Floor, “AA” Block, 3rd Avenue, 
Anna Nagar Roundtana,
 Chennai- 600040
Phone  : 044-45502029
Maid ID: info@ectra.in,   trarulrajhan@ectra.in
Web: www.arulrajhan.inwww.ectra.in


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...