மொத்தப் பக்கக்காட்சிகள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஏஜென்ட்களுக்கு கட்டணம் கொடுக்க வேண்டுமா?

கேள்வி: அண்மையில் நான்  மியூச்சுவல் ஃபண்டில் ரூ.15,000 முதலீடு செய்தேன். எனக்கு ரூ. 14,850 க்குதான் யூனிட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்  முதலீட்டில் ஏஜென்ட்களுக்கு கட்டணம் கொடுக்க வேண்டுமா?
 - சி.சரவண பாலாஜி, சைதாப்பேட்டை, சென்னை 

பதில்:
+ நிதி சாணக்கியன்

கடந்த 2011 ம் ஆண்டு செப்டம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு பரிவர்த்தனை (MF Transaction Charges ) கட்டணம் செபி அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்டது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் செபி அமைப்பு இதை கொண்டு வந்தது.

இதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.10,000 மற்றும் அதற்கு அதிகமாக முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு தொடங்குபவர்களுக்கன பரிவர்த்தனை கட்டணம் ரூ.150. அதேநேரத்தில், ரூ.10,000 க்கும் குறைவாக முதலீடு செய்பவர்களிடமிருந்து பரிவர்த்தனை  கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது

மியூச்சுவல் ஃபண்ட் திட்ட விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை ஈடுசெய்வதற்காக மேற்கண்ட பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் (ரூ.100/150) ரூ. 25 வீதம் 4/6 மாதங்கள் பிடிக்கப்படுவதும் உண்டு.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நுழைவு கட்டணம் (என்ட்ரி லோடு) ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கமிஷன் இல்லை என்பதால் திட்டங்களை விற்பனை செய்வதில் விநியோகஸ்தர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால்  மூன்றே மாதங்களில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் (பரஸ்பர நிதி நிறுவனங்கள்)  7 லட்சம் முதலீட்டு கணக்குகளை (ஃபோலியோ) இழந்துள்ளது.

இந்த நிலையில், பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

சிறு முதலீட்டாளர் நலன் கருதி செபி அமைப்பு மேலும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அவற்றின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும்போது, நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பேலன்ஸ்ட் ஃபண்ட் எனப்படும் பங்கு மற்றும் கடன்பத்திரங்களில் கலந்து முதலீடு செய்வதற்கான திட்டங்கள் ஆகியவற்றின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை தனித்தனியாக தெரிவிக்க வேண்டும்.

மேலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மொத்த கமிஷன் குறித்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என செபி அமைப்பு தெரிவித்தது. .

English Summary

Mutual fund distributors and agents to charge Rs. 100 as 'transaction fee' per subscription for investments over Rs. 10,000. For new investors, the charge would be Rs. 150 for every subscription.

So in addition to the usual upfront charges, some funds houses pay a flat charge per application. Fund officials say that typically some fund houses pay Rs. 50 per application if it is a one-year SIP, Rs.100 for a 3 year SIP, Rs.150 for a 5 year SIP and Rs.200 for a 10 year SIP. These are merely approximate amounts; your fund house may or may not pay such flat charges.

கேள்வி கேளுங்கள்..
+ நிதி சாணக்கியன் பதில் அளிக்கிறார்.

பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ்,முதலீடுகள் பற்றி கேள்விகளை 
nidhimuthaleedu@gmail.com க்கு அனுப்பி வைக்கவும். 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...