மொத்தப் பக்கக்காட்சிகள்

எக்விடாஸ் பேங்க், இந்தியாவின் முதல் சுய சேவை FASTag அறிமுகம் செய்கிறது

எக்விடாஸ் பேங்க், இந்தியாவின் முதல் சுய சேவை FASTag அறிமுகம் செய்கிறது
எக்விடாஸ் பேங்க், இந்தியாவின் முதல் சுய சேவை FASTag, ஆன -ஐ அறிமுகம் செய்கிறது

முதல் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியான எக்விடாஸ், யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ( Unified Payments interface - UPI) –ல் வங்கியின் வேலட் (wallet)ஆன புர்ஸ் (PURZ)  மூலம்  ஃ பாஸ்டேக் ( FASTag) சேவை அளிக்கிறது.

ஆதார் சார்ந்த பண பரிமாற்ற முறை ( Adhaar Enabled Payment System -AePS) மற்றும் இதர டிஜிட்டல் சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

 டிஜிட்டல் வழி பண பரிமாற்றத்தில் இந்தியா முழுக்க ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியான எக்விடாஸ் பேங்க் (Equitas Bank) நுழைந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் உருவான முதல் தனியார் வங்கி இது. இந்த வங்கி சுய சேவை (Self Service) வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

இந்தச் சேவை யை அது வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு மொபைல் ஆப் மூலம் ஃபாஸ்டேக் - FastTAG (RFID Sticker) என்கிற பெயரில் அளிக்கிறது. இந்தச் சேவையை ஆன்லைன் பதிவு மற்றும் பணப் பரிமாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன் மூலம் FastTAG சேவையை எளிதாக சிக்கல் இல்லாமல் பெற முடிகிறது.

இந்த FastTAG சேவையை இந்தியாவில் அளிக்கும் ஏழு வங்கிகளில் முதல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், எக்விடாஸ் ஆகும். இந்த வங்கி, என்பிசிஐ-ன் யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (NPCI’s Unified Payments interface -UPI) உடன் ஒருங்கிணைந்து அதன் சொந்த வேலட் (wallet) ஆன PURZ –ஐ அறிமுகம் செய்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்கல் இல்லாமல் பயணம் செய்ய எக்விடாஸ்-ன் FastTAG சிறந்த தீர்வாகும். இந்தச் சேவை மூலம் இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சுங்கச் சாவடிகளில் (டோல் பிளாஷா - toll plaza) கட்டணம் செலுத்த (cash transaction) வாகங்களை நிறுத்த தேவை இல்லை. அவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தாமலே சுங்கச் சாவடிகளை கடந்து செல்லலாம். அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் தானாக கழிக்கப்பட்டு விடுவதோடு, சுங்கச் சாவடிக்கான டிரைவர் அனுமதி சீட்டும் கிடைத்துவிடும்.

இந்த வங்கி, ஆதார் மூலமான பணப் பரிமாற்ற முறையில் வாடிக்கையாளர்களுக்கு எம்-விசா (m-VISA) மற்றும் இதர டிஜிட்டல் வழி சேவைகளை அளித்து வருகிறது.

ஆதார் மூலமான பணப் பரிமாற்ற சேவையை வங்கியின் வாடிக்கையாளர்கள் பெற, வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி செய்யும் போது வங்கி அடிப்படை பரிமாற்றங்களான கணக்கில் இருக்கும் பாக்கி தொகை (balance), ரொக்கப் பணம் டெபாசிட், பணம் எடுத்தல், வணிக பிரதிநிதி மூலம் பணம் கணக்கில் செலுத்துதல் போன்றவற்றை அறிந்துக் கொள்ள முடியும். மேலும் ஒருங்கிணைந்த பில் பேமென்ட் சிஸ்டமான பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தையும் (Bharat Bill Payment System) வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இந்த வணிக உத்தி குறித்து எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் –ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. பி என் வாசுதேவன் (Mr. P N Vasudevan, MD & CEO, Equitas Small Finance Bank) கருத்து தெரிவிக்கும் போது,’’ மொபைல் ஆப் மூலம் பெரும்பாலான பிரத்யேக சேவைகள் மற்றும் சலுகைகளை அளித்து வருகிறோம். எங்களின் வங்கியின் பரிமாற்றங்களில் 83% டிஜிட்டல் முறையில்தான் நடக்கிறது.நமது நாட்டில் ரொக்கப் பண புழக்கம் குறைந்து,

டிஜிட்டல் வழி பணப் பரிமாற்றத்தில் புரட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வழி சேவைகளை அதிகமாக, பாதுகாப்பான வழியில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்..

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ஏ.பி. ஹோடா (Mr. A. P. Hota, MD & CEO, National Payments Corporation of India - NPCI) கூறும் போது,“ என்பிசிஐ அளிக்கும் அனைத்து சேவைகளையும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் எக்விடாஸ் பேங்க்-ஐ பாராட்டுகிறோம். இது இதர ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்களையும் இந்த டிஜிட்டல் சேவைகளை அளிக்க ஊக்குவிப்பதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.”

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீசந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin, Indian Cricket Player) கூறும் போது,“ வங்கிச் சேவை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற பாரத பிரதம மந்திரியின் நோக்கத்தின் ஒரு பகுதியாக செயல்படும், புதிய தலைமுறை மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்ந்த எக்விடாஸ் வங்கி உடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியக் குடும்பங்கள் இதனை பயன்படுத்தி வங்கிச் சேவையை சிறப்பாக பெற என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..”

எக்விடாஸ், இணைய தளம் மற்றும் மொபைல் பேங்கிங், மொபைல் டாப் அப்ஸ், கார்ப்பரேட் நெட் பேங்கிங், வியாபார இடங்களில் பாயின்ட் ஆஃப் சர்வீஸ் (POS), கியூஆர் (QR) கோட் சார்ந்த சேவைகள், கல்வி நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்ற தீர்வுகள், FASTag & சேவை போன்றவற்றை அளித்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஏராளமான கடைகளில் குறைந்த வருவாய் பிரிவினர் பரிமாற்றம் கொள்ளும் விதமாக விரைவில் AEPS சேவையை எக்விடாஸ் அளிக்க இருக்கிறது. வங்கிச் சேவையில் டிஜிட்டல் வழி சேவை அளிப்பதில் முன்னணி வங்கியாக இருப்போம் என எக்விடாஸ் நம்புகிறது.

இதன் மூலம் நாட்டில் அனைவருக்கும் வங்கிச் சேவையை அளித்து ஊக்குவிக்கிறது.
இளைஞர்களை இலக்காக வைத்து மொபைல் ஆப் வசதியை எக்விடாஸ் அளிக்கிறது. யார் வேண்டுமானலும் எக்விடாஸ் வங்கி வாடிக்கையாளராக இல்லாதவர்கள் கூட இந்த ஆப்-ஐ கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.https://play.google.com/store/apps/details?id=com.equitas.purz

மேலும் இதனை உடனடியாக பயன்படுத்த தொடங்கிவிடலாம். PURZ மூலம் அவர்கள் வியாபார பேமென்ட்கள் மற்றும் இதர வசதிகளை பாரத் கியூஆர் கோட்-ஐ ஸ்கேனிங் செய்வது மூலம் பெற முடியும். எக்விடாஸ் ஸ்மால்
ஃபைனான்ஸ் பேங்க் பற்றி..!

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (Equitas Small Finance Bank Limited - ESFBL)  என்பது ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ( Small Finance Bank -SFB), இது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து, வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949, பிரிவு 22 கீழ் உரிமம் பெற்றுள்ளது. இந்த வங்கி , 2016 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

சுதந்திரத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் உருவான முதல் தனியார் வங்கி இது. எக்விடாஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் [Equitas Finance Limited - EFL] உடன், அதன் முழு துணை நிறுவனங்களான எக்விடாஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட்[Equitas Micro Finance Limited - EMFL]  மற்றும் எக்விடாஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் [Equitas Housing Finance Limited  EHFL]

இணைந்து உருவானதுதான்  எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்இ எஸ்எஃப்பிஎல், அதன் செயல்பாடுகளை இந்தியா முழுக்க கொண்டு செல்ல கவனம் செலுத்தி வருகிறது. இது தனிநபர்கள் மற்றும் நுண் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு நிதித் தீர்வுகளை அளித்து வருகிறது. அனைவருக்கும் டிஜிட்டல் வழி சேவைகளை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

இது வேடிக்கை வங்கி (Its Fun Banking) என விளம்பரம் செய்யப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்ப சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பத்தினர், தொழில்முனைவோர்களுக்கு இந்த முழுக்க புதிய மற்றும் வேடிக்கையாக, சந்தோஷமாக சேவை அளித்து வருகிறது. 2017-18 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இஎஸ்எஃப்பிஎல், 13 மாநிலங்களில் 412 கிளைகளை திறக்க திட்டமிட்டிருந்தது. இந்த 412 கிளைகளில் 50% தென்னிந்தியா, 30% மேற்கு இந்தியா, 20% வடக்கு இந்தியாவில் அமைக்கிறது. சுமார் 25 சதவிகித வங்கி கிளைகள், கிராமப்புறம் குறிப்பாக வங்கியே இல்லாத கிராமங்களில் அமைகிறது. தற்போது இந்த வங்கி,. கிட்டத்தட்ட ரூ. 7,181 கோடியை நிர்வகித்து வருகிறது.

இதில் சுமார் 49% மைக்ரோ ஃபைனான்ஸ், 26% பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்களுக்கான நிதி உதவி மற்றும் மீதி 24% நுண் மற்றும் சிறிய நிறுவனங்கள் மற்றும் வாங்கக் கூடிய விலையிலான வீடுகளுக்கான நிதி உதவி (affordable Housing Finance) பிரிவை சேர்ந்ததாக இருக்கின்றன.

என்பிசிஐ பற்றி..!

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India -NPCI) , 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் பல்வேறு சில்லறை பேமேன்ட் முறைகளை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் பண பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக பாரத ரிசர்வ் வங்கியால் இது ஏற்படுத்தப்பட்டதாகும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...