போலி வீடியோ குறித்து BSE பி.எஸ்.இ. எச்சரிக்கை
மும்பை
பங்குச் சந்தையின் (BSE) தலைமை செயல் அதிகாரி, 2026ம் ஆண்டுக்கான பங்கு முதலீட்டு
பரிந்துரைகள் வழங்குவது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ முழுமையாக
போலியானது என பி.எஸ்.இ. அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த
வீடியோ, டீப்-ஃபேக் (Deepfake) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI)
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
பி.எஸ்.இ.யில்
பணிபுரியும் எந்த அதிகாரிக்கும் பங்குகள் தொடர்பான முதலீட்டு பரிந்துரைகள் வழங்க
அனுமதி இல்லை என்றும், மும்பை பங்குச் சந்தை தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன்
உட்பட எந்த அதிகாரியும் வாட்ஸ்அப் அல்லது சமூக வலைதளங்கள் வழியாக முதலீட்டு
குழுக்களை நடத்துவதில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த போலி
வீடியோவை இணையதளங்களிலிருந்து நீக்கவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பி.எஸ்.இ.
விளக்கம் அளித்துள்ளது.
எனவே,
பொதுமக்கள் இதுபோன்ற போலி வீடியோக்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்
என்றும், பங்குச் சந்தை தொடர்பான உண்மை தகவல்களுக்கு பி.எஸ்.இ.யின் அதிகாரப்பூர்வ
இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.