சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 7- வது காலாண்டாக மாற்றமில்லை
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்.
நடப்பாண்டின் 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், மாற்றமின்றி நீடிக்கும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து ஏழாவது காலாண்டாக, வட்டி விகிதம் மாற்றப்படாமல் நீடிக்கிறது.
சேமிப்புத் திட்டத்தின் பெயர் (ஜனவரி - மார்ச் வரை)
வட்டி விகிதம்: 2026 ஜனவரி முதல் மார்ச் வரை
செல்வமகள் சேமிப்புத் திட்டம் 8.2%
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2%
தேசிய சேமிப்புப் பத்திரம் 7.7%
கிசான் விகாஸ் பத்திரம் 7.5%
5 ஆண்டு கால வைப்பு நிதி 7.5%
அஞ்சலக மாத வருமானத் திட்டம் 7.4%
பொது வருங்கால வைப்பு நிதி 7.1%
5 ஆண்டு கால வைப்பு நிதி 7.1%
2 ஆண்டு கால வைப்பு நிதி 7.0%
1 ஆண்டு கால வைப்பு நிதி 6.9%
அஞ்சலக ஆர்.டி., 6.7%
அஞ்சலக சேமிப்பு கணக்கு 4.0%