சென்னையில்
நடைபெறும் விண்டர்ஜி இந்தியா 2025இல்,
காற்றாலை
எரிசக்தித் துறை, உள்நாட்டு கூறுகள் பயன்பாட்டை 85% ஆக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்
ஸ்ரீ பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.
ALMM
(காற்றாலை) தொடர்பான நடைமுறை வழிகாட்டுதல்
விரைவில் அறிவிக்கப்படும்.
சென்னை, அக்டோபர் 30, 2025: பிரதமரின் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (Atmanirbhar Bharat) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, காற்றாலை திட்டங்களில் உள்ளூர் கூறுகள் பயன்பாட்டை தற்போதைய 64% அளவிலிருந்து 85% ஆக உயர்த்துமாறு, OEMகள் மற்றும் கூறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட காற்றாலை ஆற்றல் துறையை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.
மாறிவரும் உலகளாவிய சூழ்நிலை மற்றும் அதிகரித்து
வரும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் சுத்தமான எரிசக்தி விநியோகச்
சங்கிலியை வலுப்படுத்த உள்நாட்டு மதிப்பு கூட்டலை அதிகரிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IWTMA) தலைவர் திரு. கிரிஷ் தந்தி அவர்கள், இந்த இலக்கை நோக்கி முன்னேறுவதில்
துறை முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் அவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஆதரவு மேடை
மற்றும் கண்காட்சியான
‘விண்டர்ஜி இந்தியா 2025’
நிகழ்ச்சியின் ஏழாவது பதிப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி 2025 அக்டோபர்
29 முதல் 31 வரை சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரத்
துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சரின் நாடாளுமன்ற மாநிலச் செயலாளர் திரு. ஜோஹன் சாத்தாஃப் ஆகியோரும் அங்கு கலந்து
கொண்டனர். முந்தைய பதிப்புகளின் வெற்றியை அடிப்படையாகக்
கொண்டு நடைபெற்ற விண்டர்ஜி இந்தியா 2025 இன் 7வது பதிப்பில், 20-க்கும் மேற்பட்ட
நாடுகளிலிருந்து 350 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றதுடன், 15,000-க்கும்
மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் திரு.
பிரகலாத் ஜோஷி கூறுகையில், “நாட்டின், நிறுவப்பட்ட மொத்த மின்திறன் 257 ஜிகாவாட்டில் (GW), காற்றாலை ஆற்றல் சுமார் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கிறது.
அதிக அளவிலான உள்நாட்டு கூறு பயன்பாட்டினால், ஆத்மநிர்பார்த்தா
(Aatmanirbharta) மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆகியவற்றை
முன்னெடுத்துச் செல்ல காற்றாலை ஆற்றல் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியா, 2030க்குள்
உலகளாவிய காற்றாலை விநியோகச் சங்கிலியின் 10% பங்கையும், 2040க்குள் 20% பங்கையும் பெற்றிடும் திறன் கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“உள்நாட்டில் காற்றாலை உதிரிபாகங்களை அதிகம் உற்பத்தி செய்யும்
ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நிறுவப்பட்ட காற்றாலை திறனில் கிட்டத்தட்ட
54GW ஐ எட்டியுள்ளோம். மேலும், ALMM(காற்றாலை)
போன்ற முற்போக்கான கொள்கைகளுடன், அடுத்த 46GW
திறன் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தியால் இயக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த நிதியாண்டிலேயே, வருடாந்திர நிறுவல் திறன் 6GW-டை மீறும்
என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நமது நீண்டகால
இலக்குகளைக் நோக்கி ஒரு வலுவான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்,” என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.
இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளர்கள்
சங்கத்தின் (IWTMA) தலைவர் திரு. கிரிஷ்
தந்தி கூறுகையில், “காற்றாலை ஆற்றல் துறையில் ஆத்மநிர்பார்த்தாவை வலுப்படுத்தும்
MNRE-யின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். தற்போது சுமார் 64% உள்நாட்டு கூறுகள்
மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட சிறு,
குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பங்களிப்புடன், இந்தியா உலகின்
மிகவும் மீள்தன்மை கொண்ட திறனும், போட்டித் திறனும் கொண்ட காற்றாலை உற்பத்தி சூழலை உருவாக்கியுள்ளது. நாசல் (nacelle), பலகைகள்
(blades), மற்றும் கோபுரங்கள்
(towers) போன்ற முக்கிய காற்றாலை கூறுகளை உள்ளடக்கிய இத்துறையின் உலகளாவிய சந்தைப் பங்கில் 10%க்கும் மேலான பங்கை
இந்தியா பெற்றுள்ளது.
தொழில்நுட்பம், அளவு மற்றும் புதுமைகளில் தொடர்ந்து
கவனம் செலுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில் 85% உள்ளூர்மயமாக்கலை அடைவது மட்டுமல்லாமல்,
2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய காற்றாலை விநியோகச் சங்கிலியில் 10% சேவை செய்யும் தனித்துவமான
நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது - இதன் மூலம், உலகளாவிய சுத்தமான ஆற்றல் மாற்றத்திற்கான நம்பகமான கூட்டாளியாக இந்தியா
திகழும்,” என்று அவர் கூறினார்.
IWTMA பற்றி:
இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம் (IWTMA) 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது, இந்திய காற்றாலை ஆற்றல் துறையின் உச்ச தொழில் சங்கமாகவும், அதன் ஒருங்கிணைந்த குரலாகவும் திகழ்கிறது. முன்னணி ஆதரவாளராக IWTMA, கொள்கை நிர்ணயர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு, கொள்கை கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை சூழல்களை வடிவமைக்க முக்கிய பங்காற்றுகிறது.
1998 முதல், IWTMA இந்தியாவின் காற்றாலை
மின்சக்தி துறையின் வளர்ச்சியை முன்னெடுத்து நாட்டின் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு
உகந்த எரிசக்தி கலவைக்கு மாறுவதற்கு உதவுகிறது.
