குறைந்தபட்ச
முதலீடு ரூ. 100: ஜெரோதா பிஎஸ்சி சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட்
Zerodha BSE Sensex Index Fund
ஜெரோதா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சென்செக்ஸ் குறியீட்டில்
முதலீடு செய்யும் புதிய வகை பாஸிவ் திட்டத்தை ஜெரோதா பிஎஸ்சி சென்செக்ஸ் இண்டெக்ஸ்
ஃபண்ட் (Zerodha BSE Sensex Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் 2025 நவம்பர் 3 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின்
(என்.எஃப்.ஓ). மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச
முதலீடு ரூ. 100
பாம்பே பங்குச் சந்தையின் மிகவும் மதிப்பு மிக்க 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் முதன்மையான நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்டில்
முதலீட்டாளர்களின் பணம் முதலீடு செய்யப்படுகிறது.
பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு
ஏற்ற அதிக ரிஸ்க் இல்லாத திட்டம் இதுவாகும்