national pension system
#Zaruri Hai
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
தேசிய ஓய்வூதிய அமைப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி உறுப்பினர்களுக்கான தகவல்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PERDA) என்பது PFRDA சட்டம், 2013 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ சட்டப்பூர்வ ஆணையமாகும். இது தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) உட்பட, மேற்கண்ட சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் மூலம் முதியோர் வருமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
NPS என்பது ஒரு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஆரம்பத்தில் 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு, மத்திய தன்னாட்சி அமைப்புகள், மாநில அரசுகள், மாநில தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ட்டது. பின்னர் இந்தத் திட்டம் தன்னார்வ அடிப்படையில் பெரு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. முதலீட்டில் உள்ள ஆபத்து மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை கருத்தில் கொண்டு NPS ஆனது பல ஆண்டுகளாக, பல்வேறு துறைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு வழிகாட்டுதல்களின்படி, பல்வேறு சொத்துவகைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதிகள் மூலம் மொத்த நிதி தொகுப்பை முதலீடு செய்வதன் மூலம் சந்தாதாரர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. NPS பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, ஆணையத்தின் இணையதளம் www.pfrda.org.in> Schemes> NPS.
வருமான வரிச் சட்டம், 1961 இன் விதிகள் NPS இன் கீழ் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குகின்றன. திட்டத்திலிருந்து வெளியேறியதும், திரட்டப்பட்ட மொத்த ஓய்வூதியத் தொகையில் 60% வரை வரி இல்லாத மொத்தத் தொகையாக திரும்பப் பெற இது அனுமதிக்கிறது. மீதமுள்ள தொகை சரக்கு மற்றும் சேவை வரி (GST) விலக்கு அளிக்கப்பட்ட ஆண்டுத் தொகையை ஆண்டுத் தொகை சேவை வழங்குநர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள பயன்படுகிறது.
NPS இன் கீழ் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் PFRDA சட்டம், 2013 மற்றும் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மேலும், NPS இன் கீழ் உள்ள செயல்பாடுகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மொபைல் செயலிகள் அல்லது சந்தாதாரரின் உள்நுழைவைப் பயன்படுத்தி சந்தாதாரருக்கு தினசரி அடிப்படையில் கிடைக்கும் தனிப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் தொகை பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் வெளிப்படையான முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. சந்தாதாரர்கள் பலவகை ஓய்வூதிய நிதிகள், சொத்து ஒதுக்கீட்டிலிருந்து தேர்வு செய்யும் வாய்ப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் பணிக்காலம், பணியிடங்கள் எடுத்துச்சென்று பயன்பெறலாம். மற்றும் வேலைவாய்ப்பு நிலை முழுவதற்கும்
இந்த அறிவிப்பின் மூலம், வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி உறுப்பினர்கள், NPS இன் கீழ் சலுகைகள் மற்றும் வருமானங்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் அந்தந்த அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி அறக்கட்டளை/முதலாளியைத் தொடர்புகொண்டு NPS-க்கு மாறலாம். வருமான வரிச் சட்டம், 1961 இன் விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதியிலிருந்து NPS-க்கு ஒரு முறை மாறும்பட்சத்தில் வரிவிதிப்பிலிருந்து விலக்கு கிடைக்கும். பாதுகாப்பான ஓய்வூதியம் பெறும் சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற, அதன் உறுப்பினர்களை NPS-க்கு இடம்பெயர்வதை எளிதாக்க, அங்கீகரிக்கப் பட்ட ஒய்வூதிய நிதிகளுக்கு ஆணையம் தேவையான ஆதரவையும் வழிகாட்டு தலையும் வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதிகள் அல்லது அதன் தனிப்பட்ட உறுப்பினர்கள், சூழ்நிலைக்கேற்ப, ஆணையத்தின் இணையதளத்தில் (www.pfrda.org.in)"Sche mes>NPS>Superannuation Funds" விரிவான நடைமுறைகளுடன் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் NPS-க்கு மாறலாம். மேலும், இதுதொடர்பான எந்த saf-information@pfrda.org.in DX6O மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ஆணையத்தின் அலுவல கத்திற்கு அனுப்பலாம்.
தலைமை பொது மேலாளர்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்காகவும் அதன் சார்பாகவும்