மொத்தப் பக்கக்காட்சிகள்

பழந்தமிழ் நாட்டில் கள் நாகரிகம் Tamilnadu

பழந்தமிழ் நாட்டில் கள் நாகரிகம்

பழந்தமிழ் நாட்டில் கள் நாகரிகப் பொருளாக கருதப்பட்டுள்ளது இப்பொழுது அரசியலார்கள் கள் விற்பனைக்கு அனுமதித்தால் ஒரு இனத்தவர் அரசியலிலும் பொருளாதார ரீதியாகவும் வளம் பெற்று விடுவார்கள் அரசியலை ஆட்டிப்படைக்கும் வலிமை பெற்று விடுவார்கள் என்பதற்காக கள் மட்டும் மதுவிலக்குக்கு உட்பட்டு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.. 

இப்போது கள்ளுக்கு எத்தனை பெயர்கள் என்பதை காண்போம் .அம்மியம் அரி அருகி அருப்பம் இலி குண்டி கல்லியம் கவ்வை சாழி சாறு சிர்க்கா சூழிகை தனியல் தேம் தேறல் தொண்டி தோப்பி நறவு நநை பாளி மட்டு மறலி மருட்டம் மாலி முருகு வடி விதனி வெளி சவுண்டி துவகம் பருவம் பிழியம் கள்.. இவை அனைத்தும் கள்ளின் பழந்தமிழ்ப் பெயர்கள் பழந்தமிழர் சமுதாயத்தில் கள் மன்னர் முதல் கடைக்கோடி மக்கள் வரை பெருமையாக அருந்தப்பட்டு உபசரிப்பிலும் விருந்துகளிலும் பெரும் பங்கு வகித்துள்ளது என்பது  தமிழ் இலக்கியப் பாடல்களால் தெரிய வருகிறது.

 மாங்குடி மருதனார் மதுரை காஞ்சியில்.. இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய மணங் கமல் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிதுறை மதி பெரும// என்று பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்துகிறார்.

 மதுரை தமிழ் சங்கத் தலைவர் நக்கீரர் பாண்டியன் நன்மாறனை வாழ்த்தும் பொழுது //யவனர் நன்கலம் தந்த தண் கமல்தேறல் ஒன்றொடி மகளிர் மடுப்ப// மகிழ்ச்சியிலிருப்பாயாக என்கிறார்.. (இதிலிருந்து யவன நாட்டிலிருந்து மது இறக்குமதி செய்யப்பட்டது தெளிவாகிறது ) (ரோமர் கிரேக்கர் அரேபியர் அனைவரும் யவனர் என்றே குறிப்பிடப்படுகின்றனர்)தமிழ் மூதாட்டி ஔவையார் மண் மன்னன் அதியமான்.. கொஞ்சமாக கள் கிடைத்தால் எனக்கு கொடுத்து விடுவான் நிறைய கள் இருந்தால் என்னை பாடச் சொல்லி மகிழ்வோடு கள் பருகி இன்புற்று இருப்பான் என்ற பொருளில்// சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே// பெரிய கட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே//என்று பாடுகிறார் அதே ஔவையார் சேரனும் பாண்டியனும் சோழனும் ஒருங்கு இருக்க கண்டு மகிழ்ந்து அவர்களை வாழ்த்தி //பாசிலை மகளிர் பொலங்கலத்து ஏத்திய //நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து //வாழ்தல் வேண்டும் என்று பாடுகின்றார்(புற400) இவ்வாறு தமிழ் மக்களின் வாழ்வில் கள் நாகரீகம் தனிச்சிறப்பு பெற்றிருந்ததற்கு தமிழ்  இலக்கிய நூல்கள் அனைத்தும் சான்று கூறுகின்றன சங்க காலத்து மகளிரும் கள் அருந்தினர் என்பதற்கு பல பாடல்கள் உள்ளன //ஈரணி மெய்யீரம்  தீரச்சுரும் பார்க்கும் சூர்நறா ஏந்தினாள்// (அதாவது உடம்பில் உள்ள ஈரத்தை நீக்கி வெம்மைப் படுத்துவதற்காக அவள் கள்ளை அருந்தினாள் என்று பொருள்)என்று பரிபாடல் கூறும் //தென்கட் தேறல் மகளிர் மாந்தி //என அகநானூறு கூறும்.. அது மட்டுமின்றி சங்ககாலத் தமிழர் திருமணத்தில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டார் விருந்தினர் அனைவரும் கள்ளருந்தி களித்தனர் என்பது அகநானூற்றில் உள்ளது //நனைவினை நறவின் தேறல் மாந்தி// புனைவினை நல்லில் தரு மணல் குவை இப் // பொம்மல் ஓதி எம் மகள் மணன் என வதுவை அயர்ந்தனர் நமரே (அதாவது மணமகள் வீட்டார் புதிய கள்ளினை அருந்தி வீடு முழுவதும் மணல் பரப்பி எமது மகளின் மணநாள் இன்று என்று மகிழ்ந்து இருந்தார்கள் என்று பொருள்)//போரில் வீரர்கள் கள்ளை அருந்தி உற்சாகம் பெற்றனர் என்பதற்கு.. முடலை யாக்கை முழு வலிமாக்கள் வண்டுமுசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து.. என்று நெடுநல்வாடையில் வரும் வரிகளும்... களிகள் களிகட்டு நீட்ட தம் கையால் களிகள் விதிர்த்திட்ட செங்கல் துளி கலந்து ஓங்கெழில் யானை மிதிப்பச் சேறாயிற்றே பூம்புனல் வஞ்சிஅகம்.. (அதாவது போர் வீரர்கள் ஒருவருக்கொருவர் கள்ளை வழங்கி களிப்பதனால் கள் சிந்தி அதை யானைகள் மிதித்ததனால் சேரனது போர்க்களம் சேறானது என்பது பொருள்) என்ற முத்தொள்ளாயிரம் செய்யுளும் சான்று கூறும் //உழவர் பெருமக்களும் சுற்றத் தாரோடு கள்ளருந்தி களிப்பெய்தினர் என்பதற்கு.. கள்ளாறுவகை களிமகிழ் உழவர் மகிழ்துணைச் சுற்றமோடு மட்டு மாந்தி.. ( அகநானூறு) கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கும் படைக்கப்பட்டது என்று சங்கப் பாடல்களில் தெரிய வருகிறது ..//கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக்கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் (தொங்குகின்ற பெரிய காதினை உடைய கிடாய்)நிவலத்துறை கடவுளுக்கு புலப்படவோச்சி ..//என அகநானூறு கூறும் அதாவது கள்ளும் கிடாயும் கடவுளுக்கு படைக்கப்பட்டன.. பனை மரக்கள்ளோடு வீடுகளிலும் அரிசி போன்றவற்றால் கள் தயாரிக்கப்பட்டது இது தோப்பி என்று அழைக்கப்பட்டது //இல்லடு கள்ளின் தோப்பி பருகி //என்று பெரும்பாணாற்றுப்படை கூறும்.. பழந்தமிழ் நாட்டில் பாலை வீடு தோறும் சென்று விற்க வேண்டும் ஆனால் கள் இருந்த இடத்திலேயே விற்று விடும் என்று நீதிவெண்பா கூறுகின்றது.. கள் இல்லாத ஊர் களிப்பைத் தேடுவோர்க்கு இன்னாத ஊராகும் என்று இன்னா நாற்பது கூறுகின்றது.. இவ்வாறு முடியுடை மூவேந்தர் முதல் குடிமக்கள் உழவர் பாணர் மறவர் மங்கையர் அனைவருமே சங்ககாலத்தில் கள் அருந்தி களிப்பிட்டு இருந்தார்கள்..
 அப்போது நாட்டின் வளம் செழிப்பு அனைத்தும் கள்ளின் நிறைவில் தான் காணப்பட்டது என்று தெரிகிறது ..விருந்து அயர்வதும் மணவிழாவும் தெய்வ விழாக்களும் கள்ளினால் நிறைவு செய்யப்பட்டன என்று இலக்கியங்கள் கூறுகின்றன இவ்வாறு இருக்கையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் 500 ஆண்டுகள் நிலைத்த சமண சமயத் தாக்கத்தினால் கள் ஒதுக்கத்தக்க பொருளாக மாற்றப்பட்டு கள் உண்பது ஐந்து பாவங்களில் ஒன்றாகும் என்று நிலையாமையை வலியுறுத்தும் சமணசமயம் கள்ளை வெறுத்து ஒதுக்கியது ஆனால் சுற்றத்தோடு மகிழ்ந்து வாழும் வாழ்க்கையை விரும்பிய தமிழர் நாகரீகத்தில் கள் தலையாய இடம் பெற்றிருந்தது என்று சங்க இலக்கியங்களில் தெற்றெனத் தெரிகின்றது நன்றி வணக்கம் ஆ ஆறுமுக நயினார்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும் அரசு சுகாதாரத் துறை Summer

இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம்  *110டிகிரி வரை* அதிகரிக்க வாய்ப்பு!!!  வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிக...