மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆம்னி பேருந்துகள் கட்டண சம்பந்தமான புகாருக்கு 90433 79664



ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை  Non AC Seater, AC Seater , Non AC Sleeper, AC Sleeper , Premium Seater (Volvo/Benz & Scania Multiaxle Seater ), Premium Sleeper (Volvo/Benz & Scania Multiaxle Sleeper) என 6 வகையான பேருந்துகள் ஆம்னி பேருந்துகளில் உள்ளன. ஆகையால் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் கட்டணம் 6 விதமாக இருக்கும்.

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை வாகனங்களின் வசதிக்கு ஏற்றவாறு கட்டணங்கள் ஆன்லைன் மூலம் காண்பிக்கப்படுகிறது அந்தப் பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் நூறுக்கு அதிகமான பேருந்துகள் இருந்த போதிலும் பயணிகளின் விருப்பப்படி அவர்களே பேருந்துகளை முன்பதிவு செய்கிறார்கள். எந்த ஆம்னி பேருந்துகளிலும் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை சாதாரண பேருந்துகளுக்கு குறைந்த அளவும் சகல வசதிகளும் உள்ள பேருந்துகளுக்கு அதற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பலவகையான போக்குவரத்துகளில் ஆம்னி பேருந்துகளும் ஒருவகையான விமான போக்குவரத்துக்கு அடுத்தபடியாக உள்ள சொகுசு போக்குவரத்து. காரில் பயணம் செய்யும் பயணிகள் காரில் செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் செல்லும்போது அவங்களுக்கு செலவு குறைவாக மற்றும் விரைவாகவும் அதே சொகுசும் கிடைக்கிறது 

இந்தப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணம் ஒரு வருடத்திற்கு சராசரியாக அந்த பேருந்துகளை பராமரிப்பதற்கு இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை ஆகவே இந்த தொழிலில் எந்த பெரிய நிறுவனங்களும் வருவதில்லை இந்தத் தொழிலில் வந்து மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் இந்த தொழிலை செய்து கொண்டு உள்ளார்கள்.

ஆம்னி பேருந்துகளுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்தபோதிலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டண நிர்ணயித்து அதற்கு மேல் எந்த பேருந்துகளிலும் போடாத வனம் கண்காணித்து அதை மீறுபவர்கள் மீது அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஆம்னி பேருந்துகள் கட்டண சம்பந்தமான புகாருக்கு 90433 79664 இந்த எண்ணில் தெரியப்படுத்தவும்.

இப்படிக்கு
அ.அன்பழகன் - 9444039661
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...