மொத்தப் பக்கக்காட்சிகள்

வீடு வாங்குபவர்களின் குறைகளை 90 நாட்களுக்குள் தீர்க்கும் கிரெடாய்

வீடு வாங்குபவர்களின் குறைகளை 90 நாட்களுக்குள் தீர்க்கும் கிரெடாய் குறை தீர்க்கும் பிரிவு 


~ வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவான நடவடிக்கைக்கு உறுதியளிக்கிறது ~

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சென்னை கிரெடாயின் குறை தீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. சமீப காலமாகத்தான் அதிகமான வாடிக்கையாளர்கள் வீடு மற்றும் நிலம் சம்பந்தமான தங்கள் பிரச்னைகளுக்கு சென்னை கிரெடாயின் குறை தீர்க்கும் பிரிவை அதிக அளவில் அணுகி வருகின்றனர்.கட்டுமான நிறுவனங்களால் பிரச்சினையை சந்தித்த வாடிக்கையாளர்களின் அனைத்து குறைகளையும் கிரெடாயின் குறை தீர்க்கும் பிரிவு நிவர்த்தி செய்துள்ளது.


இது குறித்து கிரெடாய் சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன் பேசுகையில், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே எங்களின் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கிரெடாயின் மற்றொரு நோக்கமானது ரியல் எஸ்டேட் துறையில் மறுமலர்ச்சியை உறுதிசெய்து இந்தியாவை ஒரு உன்னத நிலைக்கு உயர்த்துவதாகும் என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், வீடு வாங்குபவர்களின் குறைகளை விசாரிக்க கிரெடாயில் தனி குழு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், நுகர்வோர் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு சிறப்பாக தீர்வு கண்டு வருகிறது. கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடன் எங்கள் அமைப்பு சுமுகமான உறவைக் கொண்டிருப்பதால் அவர்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது குறித்து முதலில் எங்களை அணுகுமாறு நாங்கள் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையம்..!

இருப்பினும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையத்தில் நியாயம் கிடைக்கும் என நுகர்வோர் கருதினால், அவர்கள் அங்கு செல்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்டுமான நிறுவனங்கள் சொத்தை ஒப்படைப்பதாக கூறிய காலத்திற்குள் ஒப்படைக்காமல் காலதாமதம், ஒப்பந்தங்களை ரத்து செய்யும்போது பணத்தை திரும்ப வழங்காமை, கட்டமைப்புகளில் போதிய வசதிகள் வழங்காமை உள்ளிட்ட புகார்களே இதுவரை எங்களுக்கு வருகின்றன. பிரச்னைகளின் தன்மையைப் பொறுத்து அவை 45 முதல் 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒரு சில பிரச்னைகள் ஒரே நாளில் தீர்க்கப்படுகின்றன. 

மேலும் கிரெடாய் அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் மூலம் ஏற்படும் பிரச்னைகளுக்கு மட்டுமே இதன் மூலம் தீர்வு காண முடியும். கடந்த 2021-22 நிதியாண்டில், 44 புகார்கள் வரபெற்றன. இதில் 38 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்த புகாரில் 86% புகார்கள் தீர்க்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார்.

 

கிரெடாய் குறை தீர்க்கும் பிரிவு குறித்து சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ராதா கூறுகையில், கட்டுமான நிறுவனங்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சிறந்த ஒரு தளத்தை வழங்கிய உள்ள கிரெடாய்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் வாங்கிய ஃபிளாட்டை எனக்கு தருவதில் கால தாமதம் ஏற்படுத்திய கட்டுமான நிறுவனம் தொடர்பாக கடந்த மார்ச் (2022) 1–ந் தேதி கிரெடாய் குறை தீர்க்கும் பிரிவில் புகார் அளித்தேன். அதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்துடனான சந்திப்பிற்கு கிரெடாய் ஏற்பாடு செய்தது. அதில் இறுதித் தொகை மற்றும் கட்டுமானத்தை முடித்து என்னிடம் வழங்குவதற்கான தீர்வு கிடைத்தது. கட்டுமான நிறுவனங்களுடன் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பது என்பது சாத்தியமானது இல்லை. ஆனால் கிரெடாய் தலையிட்டு இந்தப் பிரச்னையை சுமுகமாகவும் தாமதம் இல்லாமல் முடித்து வைத்தது என்று தெரிவித்தார்.

இது குறித்து சென்னை, புழுதிவாக்கத்தில் வசிக்கும் பிரபாகர் தாஸ் கூறுகையில், ஒரு கட்டுமான நிறுவனத்திடம் ஃபிளாட் வாங்குவதற்காக முன் பணம் செலுத்தினேன். ஆனால், என்னால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்த பணத்தை திரும்பக் கேட்டேன். ஆனால் அந்த நிறுவனம் அதை திரும்ப வழங்க மறுத்துவிட்டது. அது குறித்து கிரெடாய் குறை தீர்க்கும் பிரிவில் புகார் அளித்தேன். அது குறித்து உடனடியாக தீர்வு காணப்பட்டு எனது பணம் திரும்ப கிடைத்துள்ளது. கட்டுமான நிறுவனங்களுடன் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அது குறித்து கிரெடாய் குறை தீர்க்கும் பிரிவை தொடர்பு கொண்டால், அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவான தீர்வு கிடைக்கும். எனவே அனைவரும் கிரெடாய் குறை தீர்க்கும் பிரிவை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.  

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...