மொத்தப் பக்கக்காட்சிகள்

Health வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு! சிறந்த நல்ல கொழுப்பு

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!

அதெல்லாம் சரி.  'நிலக்கடலையை உண்ணக்கூடாது... அப்படி உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து. மாரடைப்பு போன்ற இதயநோய்  வரக்கூடும்' என்கிறார்களே ?

 நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது.

✔️  சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

இதய நோய் சிறப்பு மருத்துவர் சர். இராமகிருஷ்ணனிடம் கேட்டபோது,

"நிலக்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அதிகரித்து, இதயநோய் வரும் என்பது தவறான கருத்து. சொல்லப்போனால், அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது. 

வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை எடுத்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது.

 நிலக்கடலையில் உள்ள காப்பர் சத்து மற்றும் அதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் பொருட்களில் மோனோ அன் சாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலி அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன"

இதய நோயை அண்டவிடாத தன்மையைக் கொண்டுள்ள நிலக்கடலை சற்று ஆறுதலாக இருந்தபோதும், "ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செயல்பாட்டில் நிலக்கடலையின் பங்கு என்ன?" என்று தஞ்சையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் குருமூர்த்தியை அணுகியதில்,

"வேர்க்கடலையில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கின்றன. அதனால் இதை ஏழைகளின் அசைவ உணவு என்று கூட கூறலாம். தற்போதைய உணவு ஆராய்ச்சிகள் (FDA) நிலக்கடலையில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நிரூபித்திருக்கின்றன. ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதில் இருக்கும் சர்க்கரையின் தன்மையை அளவாகக் கொண்டு,  இன்டெக்ஸ் (Index) (அதாவது, G - 1 – 14 ) தீர்மானிக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாம் பார்த்தோமேயானால், பச்சைப்பட்டாணி, வாழைப்பழம்,  புழுங்கல் அரிசி, அவித்த உருளைக் கிழங்கு போன்றவற்றில் G-1 அதிகமாக இருக்கிறது. இந்த வகை உணவுகள் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும்.

ஆனால், வேர்க்கடலையில் G-1 குறைவாக இருப்பதால்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. அத்துடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது. ஏறக்குறைய GLP-1 என்ற ஹார்மோன் போன்று வேலை செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி  அளவு (1 ½ oz அல்லது 50 to 75 grms ) வேர்க்கடலை சாப்பிட்டால் போதுமானது,  சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்" என்றார்.

அப்புறம் என்ன நொறுக்கு தீனி, பொரித்த உணவுகளை நீக்கி விட்டு வேர்க்கடலையை வாங்குங்க, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுங்கள். 

#வேர்க்கடலை பயன்கள் #சத்தான உணவின் நன்மைகள் # இயற்கை உணவு #பாண்டியன் ஸ்டோர்ஸ் 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...