தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி

 

தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி அளிக்கபபட்டுள்ளது. அதன்படி, பத்திர பதிவு அலுவலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:

 

*பதிவுத் துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (ஏப்ரல் 14, 2021) , ஆடிப்பெருக்கு (03.08 .2021) மற்றும் தைப்பூசம் (18- 1- 2022) ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது

 

Government Order 

மேலும், மங்களகரமான நாள்களில் பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலர்கள் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாள்களில் மேற்கொள்ளப்படும்  பதிவுகளுக்கு பதிவு சான்றிதழ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் கோரிக்கை வந்தது.

 

இதன் அடிப்படையில், சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு  மற்றும் தைப்பூசம்  ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவினை மேற்கொள்ளும் மற்றும் அந்த நாள்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதியும் வழங்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: