மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய சிறு முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தைகளில் வரம்பற்ற இலவச வர்த்தகத்தை மேற்கொள்ளவது எப்படி?

 ஆக்ஸிஸ்  செக்யூரிட்டீஸ், இந்திய முதலீட்டாளர்களுக்கான உலகளாவிய முதலீடு (குளோபல் இன்வெஸ்டிங்) அறிமுகம்..!

 

இந்திய  சிறு முதலீட்டாளர்கள்  இப்போது அமெரிக்க சந்தைகளில் வரம்பற்ற இலவச வர்த்தகத்தை மேற்கொள்ளலாம் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான  மாதிரி  முதலீட்டுக் கலவைகளில் முதலீடு செய்யலாம்

ஆக்சிஸ் பேங்க்-ன் (Axis Bank) பெருமை மிக்க துணை நிறுவனம் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் (Axis Securities). இது, உலகளாவிய முதலீடு (குளோபல் இன்வெஸ்டிங் - Global Investing) என்கிற முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்திய சிறு முதலீட்டாளர்கள் சிறந்த அமெரிக்க நாட்டு நிறுவனப் பங்குகளை (US stocks) தங்கள் முதலீட்டுக் கலவையில் (portfolio) சேர்க்க ஒரு சிறந்த தீர்வை குளோபல் இன்வெஸ்டிங் மூலம் அறிவித்துள்ளது. ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ், ஆன்லைன் முதலீட்டுத் தளமான வெஸ்டட் ஃபைனான்ஸ் (Vested Finance) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தக் கூட்டு, அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு  இந்திய முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.

 

இந்திய முதலீட்டாளர்கள் இப்போது பேஸ்புக், ஆப்பிள், நெட்ஃபிக்ஸ், கூகிள் மற்றும் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்க / விற்கலாம்; அல்லது கருத்து அடிப்படையிலான முதலீட்டு திட்டங்கள் அல்லது பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் ஈ.டி.எஃப்களில் (ETFs) ஒரு சில கிளிக்குகளில் முதலீடு செய்யாலாம். ஒரு வலுவான உலகளாவிய சந்தையை எளிதில் அணுகுவதன் மூலம், முதலீட்டாளர்கள் புவியியல் பல்வகைப்படுத்தலின் (geographical diversification) நன்மைகளை அனுபவிக்கிறார்கள். 

இது மட்டுமல்லாமல், ஒரு நாடு மற்றும் ஒற்றை நாணய இடர்ப்பாட்டிலிருந்து (risk) தங்கள் முதலீட்டுக் கலவைகளைப் (portfolios)  பாதுகாக்க முடியும்.  தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் முதலீட்டுக் கலவைகள் மற்றும் பங்குகள் மற்றும்  ஈ.டி.எஃப்கள், கருத்து அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்களை வழங்கும் ஒரு வகையான தீர்வாகும். முற்றிலும் டிஜிட்டல் முறை மற்றும் நிதி பரிமாற்ற செயல்முறை மூலம் உலகளாவிய முதலீடு #சிம்பிள்ஹாய் (#SimpleHai) என்பதை உறுதி செய்கிறது.

 

குளோபல் இன்வெஸ்டிங், ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்க பங்குச் சந்தைகளில் பூஜ்ஜிய தரகு (zero brokerage) கட்டணத்தில் முதலீடு செய்ய உதவுகிறது. பிரீமியம் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்கள்  பூஜ்ஜிய கணக்கு தொடக்க கட்டணம், பூஜ்ஜிய தரகு மற்றும் ஒரு வருட இலவச திரும்பப் பெறுதல் சலுகைகள் (one-year free withdrawal benefits) போன்ற பல அம்சங்களை அனுபவிக்க முடியும். இந்த முறையில், அதிக விலை கொண்ட பங்குகளில் ஒரு பங்குகளுக்கும் குறைவாக,  $ 1 என்கிற குறைவான முதலீட்டை கூட மேற்கொள்ள முடியும். இந்த தளத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகள் மற்றும்  ஈ.டி.எஃப்களில் முதலீடுகளைச் செய்து நிர்வகிக்கலாம். 

தொழில்ரீதியாக நிர்வகிக்கப்பட்ட மாதிரி முதலீட்டுக் கலவைகள் மற்றும் கருத்து அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கூடுதல் வசதியுடன், சிறு முதலீட்டாளர்கள் இப்போது வலிமையான ஆராய்ச்சியின் ஆதரவுடன் உலகளாவிய வளர்ச்சி பொருளாதாரங்களில் பங்கேற்கலாம்.

 

குளோபல் இன்வெஸ்டிங் பற்றி பேசுகையில், ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி பி கோப்குமார் (B Gopkumar, MD & CEO, Axis Securities), "சர்வதேச முதலீடுகளுக்கான தேவை இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ளது, குறிப்பாக, தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருக்கும் மில்லினியல்களிடம் (millennials) இந்தத் தேவை அதிகமாக உள்ளது.   எங்கள் குளோபல் இன்வெஸ்டிங் மூலம், முதலீட்டாளர்களை மிகவும் புதுமையான உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் பங்குதாரர்களாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். நிர்வகிக்கப்பட்ட முதலீட்டுக் கலவைகள், கருத்து அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆலோசனை மூலம், சர்வதேச முதலீட்டை எளிமையாக்கி சரியான முடிவுகளை எடுக்க முதலீட்டாளர்களுக்கு உதவ விரும்புகிறோம். உலகளாவிய மூலதன சந்தைகளை (capital markets) தடையின்றி அணுகவும், மிகவும் சக்திவாய்ந்த, புவியியல் ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்கவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதன் மூலம் இந்தத் திட்டம் நிச்சயமாக மதிப்பு கூட்டலாக இருக்கும்.என்றார்.

 

இந்தக் கூட்டு குறித்து பேசிய வெஸ்டட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி விராம் ஷா (iram Shah, Co-Founder & CEO, Vested Finance) கூறும்போது,நாட்டின் முன்னணி சில்லறை பங்குத் தரகு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் உடன்  கூட்டுச் சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய சிறு முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீட்டிற்கான புவியியல் ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க ஆர்வமாக  இருக்கிறார்கள். இந்தத் தளம் பல இந்திய முதலீட்டாளர்களுக்கு உலகளாவிய வர்த்தகத்திற்கான கதவுகளைத் திறக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தத் திட்டம் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்க பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும்.என்றார்.

 

சலுகையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு (Following are some of the features of the offering):

§ பூஜ்ஜிய தரகு கட்டணங்களுடன் அமெரிக்க பங்குகளில் வரம்பற்ற பரிவர்த்தனைகள்


§ பகுதியளவு முதலீடு (Fractional investing) - ஒரு பங்கிற்கும் குறைவாக வாங்குவதற்கான திறன். அமேசான், கூகுள் அல்லது பெர்க்ஷயர் ஹாத்வே போன்ற அதிக விலை கொண்ட பங்குகளில், குறைவான தொகை அதாவது  $ 1  கூட முதலீடு செய்ய உதவுகிறது.


§ தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் முதலீட்டுக் கலவைகள் மற்றும் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈ.டி.எஃப்கள் மற்றும் கருத்து சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள்


§ எளிமையான பணம் அனுப்பும் செயல்முறை: ஆன்லைனில் செயல்படுத்த மற்றும் பணம் அனுப்பும் சேவையை பெற  வங்கிகளுடன்  கூட்டாண்மை 

 

ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் பற்றி (About Axis Securities)

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (.எஸ்.எல் - Axis Securities Limited - ASL) என்பது இந்தியாவின் 3 வது பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் பேங்க்-ன்ன் பெருமைமிக்க துணை நிறுவனமாகும். இந்தியா முழுவதும் ஒரு வலுவான கிளை வலையமைப்புடன், .எஸ்.எல் அதன் முதன்மை பிராண்டான ஆக்சிஸ் டைரக்ட் (www.axisdirect.in) இன் கீழ் சில்லறை பங்குத் தரகு சேவைகளை வழங்குகிறது.

ஆக்ஸிஸ்டைரக்ட் (AxisDirect) வாடிக்கையாளர்களுக்கு எளிமையான முதலீட்டுத் தீர்வுகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இது அதன் வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டுத் திட்டங்களின் தொகுப்பை வழங்குகிறது எடுத்துக்காட்டு. நிறுவனப் பங்குகள், பரஸ்பர நிதிகள், எஸ்.ஐ.பி-க்கள், ஐ.பி.ஓ.-க்கள், டெரிவேட்டிவ்ஸ், பத்திரங்கள், என்.சி.டிக்கள், ஈ.டி.எஃப் மற்றும் நிறுவன நிலையான வைப்பு (Equities, Mutual Funds, SIPs, IPOs, Derivatives, Bonds, NCDs, ETFs, and Company Fixed Deposits) போன்ற முதலீட்டு வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது. 20 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட, ஆக்சிஸ் டைரக்ட் தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும்  முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

 

வெஸ்டட் ஃபைனான்ஸ்  பற்றி (About Vested Finance)

வெஸ்டட் ஃபைனான்ஸ் (Vested Finance) என்பது கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (Securities and Exchange Commission - SEC) பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசனை நிறுவனம் (Registered Investment Advisor - RIA) ஆகும். 

இது ஆன்லைன் முதலீட்டு தளத்தை வழங்குகிறது. இது இந்திய முதலீட்டாளர்களை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்ய உதவுகிறது. உள்ளூர் முதலீட்டாளர்களை உலகப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதிப்பதன் மூலம் நிலையான செல்வத்தை (wealth creation) உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம். அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட எஸ்..சி-பதிவு செய்யப்பட்ட புரோக்கரான டிரைவ்வெல்த் (DriveWealth) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. 

இந்தத் தரகு நிறுவனம், 150 நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. பத்திர முதலீட்டாளர் பாதுகாப்புக் கழகத்தின் (Securities Investor Protection Corporation - SIPC) உறுப்பினராக உள்ளது. இது அவர்களின் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 5,00,000 (USD) அமெரிக்க டாலர் வரை முதலீட்டு பத்திரங்களுக்கு காப்பீடு செய்கிறது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...