எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசி உத்தரவாதம் அளிக்கும் பென்ஷன் பிளான்


 எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசி


இன்றைய சூழலில், நிதி மேலாண்மை மற்றும்சிக்கல்களை சமாளிக்கவும், இளைஞர்கள் நிலையான வருமானத்தை பெறவும், எல்..சி., சார்பில், 'ஜீவன் சாந்தி' எனும் ஒற்றைதவணைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையுடன்  இணைக்கப்படாத,லாபத்தில் பங்கேற்காத ஒரேஒருமுறைபிரீமியம் செலுத்தும் ஆண்டளிப்பு தொகை(ஆன்யூட்டி) என்பதுஇந்தப்பாலிசியின் திட்டமாகும்.

ஆன்யுட்டி தொகையைஉடனடியாகவோ அல்லதுகுறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகோ (1 முதல் 20 ஆண்டுகள்)  பெறும் வகையில் பாலிசிதாரர் தேர்வுசெய்துகொள்ளமுடியும்

இதில், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், தனி நபராகவோ, நெருங்கியஉறவினருடன் இணைந்தோ (தந்தை / மகள்)  அல்லதுமாற்றுத்திறனாளிகளின் பயனுக்காகவோ இந்தத் திட்டத்தில் சேரலாம்.

இதில், செலுத்தப்படும் தொகை, அதனால் வரும்வருமானம் இரண்டுமே பாலிசி துவங்கும் அன்றேதீர்மானிக்கப்படுவதால், நிரந்தர வருமானம் வாழ்நாள்முழுமைக்கும் உறுதியளிக்கப்படுகிறது.

பாலிசி எடுத்து ஓராண்டுக்கு பிறகு, பாலிசியின் மீது கடன் பெறும்வசதி உள்ளது.

இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது. கிடைக்கும் பென்ஷன் பணத்துக்கு வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டி வரும்.
குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 1.5 லட்சம். குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ. 1,500


எல்ஐசி, புதிதாக அறிமுகப்படுத்திய ஜீவன்சாந்திஎனப்படும் ஆண்டளிப்பு (ஆன்யூட்டி) பாலிசிமூலம்ரூ.1,312.46 கோடிவருவாய் கிடைத்துள்ளதாக அதன்தென்மண்டலமேலாளர் தாமோதரன் கூறினார்.

எல்ஐசிநிறுவனத்தின் ஜீவன்சாந்திபாலிசிதிட்டவிளக்கநிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது.

இதில்பங்கேற்று தாமோதரன் கூறியதாவது: தமிழகம் உள்படநாடுமுழுவதும் இந்தப்புதியபாலிசிதொடங்கிய நாளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.30) வரை31,235 பாலிசிகளின் மூலம்ரூ.1,312.46 கோடிகிடைத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ரூ.17.11 கோடிபெற்றுசென்னைகோட்டம்-1 முதலிடத்தில் உள்ளது.Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: