மொத்தப் பக்கக்காட்சிகள்

டிரான்ஸ்யூனியன் சிபில் - சிட்பி எம்எஸ்எம்இ பல்ஸ் காலாண்டு அறிக்கை - கடன் வளர்ச்சியில் விரைவான மீட்சி


டிரான்ஸ்யூனியன் சிபில் - சிட்பி எம்எஸ்எம்இ பல்ஸ் காலாண்டு அறிக்கை - கடன் வளர்ச்சியில் விரைவான மீட்சி

·         எம்எஸ்எம்இ  கடன்வழங்குவதில் டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும்புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தீர்வு காணுதல்மூலம் வேகமானமீட்சி மேம்பட்டுள்ளது
சென்னை, செப்டம்பர் 17, 2018: டிரான்ஸ்யூனியன்  சிபில்  சிட்பி எம்எஸ்எம்இ  பல்ஸ் அறிக்கை (TransUnion CIBIL- SIDBI MSME Pulse Report) மூன்றாம் பதிப்பு வெளியாகி இருக்கிறது இதன் மூலம்வர்த்தக கடன்  (commercial credit)  வளர்ச்சி 2018 ஜூன் காலாண்டில் நிலையாக 10.1% அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்த அறிக்கையில் 2018 ஜூன் நிலவரப்படி, இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 101 லட்சம் கோடிகளாக உள்ளன, இதில் எம்எஸ்எம்இ கடன்கள் ரூ. 22.8 லட்சம் கோடிகளாக உள்ளன. இந்தக் கடனில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வணிகத் தேவைக்கு வழங்கப்பட்ட கடன்களும் அடங்கும்.

எம்எஸ்எம்இ கடன்களில் வாராக் கடன் விகிதம் (NPA rates) நிலையாக உள்ளதோடு, அது ஒரு வரம்புக்குள் இருக்கிறது. நுண் நிறுவனங்கள் பிரிவில் வாராக் கடன் விகிதம் 8.9% (2017 ஜூன்) லிருந்து 8.7% (ஜூன் 2018) ஆக குறைந்துள்ளது; அதேநேரத்தில், எஎஸ்எம்இ நிறுவனங்கள் பிரிவில் வாராக் கடன் விகிதம் 11.2% (2017 ஜூன்) லிருந்து 11.5% (ஜூன் 2018) ஆக அதிகரித்துள்ளதுஇதில் ஆர்வமூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், தனிநபர்கள் வணிகத் தேவைக்காக வாங்கிய கடன்களில் வாராக் கடன், மிகவும் குறைவாக 2.5% ஆக இருக்கிறது.

எம்எஸ்எம்இ  பல்ஸ், நாட்டிலுள்ள எம்எஸ்எம்இ பிரிவை காலாண்டு அடிப்படையில் மிகவும் நுணுக்கமாக கவனித்து மற்றும் கண்காணித்து வருகிறது.  டிரான்ஸ்யூனியன் சிபில் வர்த்தக பிரிவு (TransUnion CIBIL Commercial Bureau) 67 லட்சத்துக்கு (6.7 million) மேற்பட்ட செயல்பட்டுக் கொண்டிருக்கும் வணிக நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனி உரிமை நிறுவனங்கள் / கூட்டு நிறுவனங்கள் முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வரை என பல தரப்பட்ட நிறுவனங்கள்  இடம் பெற்றுள்ளன. 

இந்தக்கடன் சார்ந்த புள்ளி விவரங்கள், வங்கிகள், வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்கள் (NBFCs), வீட்டு வசதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப் புற வங்கிகள் மற்றும் இதர ஒழுங்குப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு மாதம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கை குறித்து சிட்பி-ன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. முஹம்மத் முஸ்தபா (Shri Mohammad Mustafa, Chairman and Managing Director, SIDBI) கூறும் போது, இந்த எம்எஸ்எம்இ பல்ஸ் அறிக்கையின் இந்தப் பதிப்பு மூலம் அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களிலும் எம்எஸ்எம்இ கடன்கள் வேகமான மீடசியை (faster turnaround time –TAT) அடைந்திருப்பதை காண முடிகிறது. இது  எம்எஸ்எம்இ கடன் பிரிவில்  2016  ஆம் ஆண்டில் சராசரியாக 32 நாள்களாக இருந்தது, இப்போது 2018 ஆம் ஆண்டில் 26 நாள்களாக குறைந்து மேம்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த எம்எஸ்எம்இ  பல்ஸ் அறிக்கையின் புள்ளிவிவரங்கள் பயன்படுத்துவது மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் வர்த்தக கடன் சந்தையின் செயல்பாடு இடையே நிச்சயமாக ஒரு சாதகமான தொடர்பு இருப்பதை காண முடிகிறது. இந்த அறிக்கை கடன் பிரிவு வாரியாக டிஏடி விவரங்களை அளிக்கிறது. இந்த டிஏடி என்பது கடன் கேட்டு நிறுவனங்கள் விசாரணை மேற்கொண்ட தேதி மற்றும் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி அல்லது புதுப்பிக்கப்பட்ட தேதிக்குக்கு இடைப்பட்ட நாள்களை குறிக்கிறது. இதன்படி, வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களின் எம்எஸ்எம்இ கடன்கள் குறைவான டிஏடி- கொண்டுள்ளன. இவற்றில் இந்த நாள்கள் 2016 ஆம் ஆண்டில் 24 ஆக இருந்தன. அது இப்போது 18 நாள்களாக மேம்பட்டுள்ளன.  அதேநேரத்தில், பொதுத்துறை வங்கிகளில் நீண்ட டிஏடி காணப்படுகிறது. இருந்தாலும் அவற்றில் இந்த நாள்கள் எம்எஸ்எம்இ பிரிவில் 2016 ஆம் ஆண்டில் 41 ஆக இருந்தன. அது இப்போது 31 நாள்களாக குறைந்துள்ளன. தனியார் வங்கிகளில் டிஏடிகள் 2016 ஆம் ஆண்டில் 32 ஆக இருந்தன. அது இப்போது 29 நாள்களாக குறைந்துள்ளன.

இந்தஅறிக்கையிலிருந்து மற்றொரு முக்கிய விஷயம் வெளிபட்டியிருக்கிறது. அதாவது, வங்கிச் சேவையை புதிதாக பெற்றவர்கள் (New to Bank -NTB) வாங்கிய கடன்கள் மூலம் எம்எஸ்எம்இ  கடன்வளர்ச்சி கண்டுள்ளது. எம்எஸ்எம்இ  பல்ஸ்மூலம், ஓராண்டு காலத்தில் கடன் வழங்கிய நிறுவனங்கள் 14% வெளியேற்றத்தை சந்தித்து வருகின்றன என தெரிய வருகிறது. அதேகால கட்டத்தில் எம்எஸ்எம்இகடன் வாங்கிய நிறுவனங்கள், அதே கடன் நிறுவனத்துடன் தொடர்ந்து கடன் பெறுவது வெறும் 2% பங்களிப்பாக உள்ளது. ஒட்டு மொத்த எம்எஸ்எம்இ  கடன்கள்20% வளர்ச்சிக் காண என்டிபி பிரிவை சேர்ந்த கடன் பெற்றவர்கள் காரணமாக இருக்கிறார்கள். எம்எஸ்எம்இ  கடன்கள்  வளர்ச்சியில்இவர்களின் பங்களிப்பு 32% ஆக உள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வின் முக்கிய அம்சங்கள் குறித்து டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சதீஷ் பிள்ளை (Managing Director and CEO of TransUnion CIBIL –Shri.Satish Pillai) மேலும் விளக்கும் போது, நாங்கள் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அவர்கள் சிறப்பாக செயல்பட தேவையான உதவிகளை அளித்து வருகிறோம். எம்எஸ்எம்இ  பல்ஸ்-ல் வர்த்தக கடன்கள் நான்கு பிரிவாக (நுண், குறு, நடுத்தரம் மற்றும் பெரிது) பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நுண் மற்றும் குறு பிரிவுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இவை முறையே 21 மற்றும் 14% ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் கடனை சரியாக செலுத்தாமல் இருப்பது கடந்த 8 காலாண்டுகளாக அதிகரிக்காமல் உள்ளன. அதேநேரத்தில் நடுத்தரம் மற்றும் பெரிய நிறுவனங்களில் கடன் வளர்ச்சிக் குறைந்திருப்பதோடு, கடனை சரியாக செலுத்தாமல் இருப்பது அதிகரித்துள்ளது. இந்த மதிப்புமிக்க புள்ளிவிவரங்கள், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் வர்த்தக கடன் துறையின் நிலையான வளர்ச்சிக்கு உதவி செய்வதாக இருக்கும்.”

எம்எஸ்எம்இ பல்ஸ் மூன்றாம் காலாண்டு பதிப்பு முக்கிய அம்சங்கள்
(MSME PulseThird Quarter Edition Highlights)

·         இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 101 லட்சம் கோடிகள் (Total credit exposure in India stands at ₹101 lakh crores): 2018 ஜூன் நிலவரப்படி, இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 101 லட்சம் கோடிகளாக உள்ளன, இதில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 22.8 லட்சம் கோடிகளாக உள்ளன. இந்தக் கடனில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வணிகத் தேவைக்கு வழங்கப்பட்ட கடன்களும் அடங்கும். பெரிய மற்றும் நடுத்தர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 42.8 கோடிகளாக உள்ளது. வேளாண் மற்றும் சிறுகடன்கள் ரூ. 35.4 லட்சம் கோடிகளாக உள்ளன. வணிகத்துக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் பங்களிப்பு 35% ஆக உள்ளது..

·         ஓர் உறுதியானநிலைக்கு கடன்வளர்ச்சி மீட்சி(Credit growth recovery on a firm footing): 2018 ஜூன் காலாண்டில் , வர்த்தக கடன்  வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 10.1% அதிகரித்துள்ளது. 2017 செப்டம்பர் காலாண்டில் பெரிய நிறுவனங்கள் (ரூ.100 கோடிக்கு மேல் கடன்) குறைவான வளர்ச்சியை பெற்றிருந்தது. இந்தப் பிரிவு, தொடர்ந்து இரு காலாண்டுகளாக நிலையான அதிக வளர்ச்சியை பெற்று வருகிறது.

நுண் நிறுவனங்கள் (ரூ. 1 கோடிக்கு குறைவான கடன்)  மற்றும்எஸ்எம்இ நிறுவனங்கள் (ரூ. 1 கோடி முதல் ரூ. 25 கோடிகள்)  பிரிவுகளுக்கு ரூ.13.2  லட்சம் கோடிகடன்கள் (மொத்தம் வழங்கப்பட்ட கடன்களின் இப்பிரிவுகளின் பங்களிப்பு 23.5%) வழங்கப்பட்டுள்ளன. 2017 ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான காலத்தில் இந்தப் பிரிவுகள் முறையை ஆண்டு கணக்கில் 21% மற்றும் 14% வளர்ச்சிக் கண்டுள்ளன. இந்த வளர்ச்சி நடுத்தர நிறுவனங்களில் 5.1%   (ரூ. 25 கோடிகள் முதல்ரூ. 100 கோடிகள்) மற்றும் பெரிய நிறுவனங்களில்  8.9%  (ரூ. 100 கோடிக்கு மேல்) வளர்ச்சி அடைந்துள்ளன.
தனிப்பட்ட தகுதிஅடிப்படையில் வாங்கியகடன்களுக்கான வாராக்கடன் விகிதங்கள்மிகவும் குறைவு(Significantly lower NPA rates for loans taken in individual capacity):.எம்எஸ்எம்இ கடன்களில் வாராக் கடன் விகிதம், நிலையாக மற்றும் வரம்புக்குள் உள்ளது. நுண் நிறுவனங்கள் பிரிவில் வாராக் கடன் விகிதம் 8.9% (2017 ஜூன்) லிருந்து 8.7% (ஜூன் 2018) ஆக குறைந்துள்ளது. எஎஸ்எம்இநிறுவனங்கள் பிரிவில் வாராக் கடன் விகிதம் 11.2% (2017 ஜூன்) லிருந்து 11.5% (ஜூன் 2018) ஆக உயர்ந்துள்ளது. ஆர்வமூட்டும் விதமாக, தனிநபர்கள்வணிகத் தேவைக்காக வாங்கிய கடன்களில் வாராக் கடன் மிகவும் குறைவாக 2.5% ஆக உள்ளது.

·         தனியார் வங்கிகள்மற்றும் வங்கிச்சாரா நிதிச்சேவை நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்புதொடர்ந்து அதிகரிப்பு(Private Banks & NBFCs continue to gain market share): நுண் மற்றும் எம்எஸ்எம் கடன் பிரிவில், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017 ஜூன் மாதத்தில் இவற்றின் பங்களிப்பு முறையே 28.1% மற்றும் 9.6%  ஆகஇருந்தது. இது 2018 ஜூன் மாதத்த்தில் முறையே 29.9% மற்றும்  11.3% ஆக அதிகரித்துள்ளது. இதேகால கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 55.8% லிருந்து  50.7%  ஆக குறைந்துள்ளது.    

·          கடனுக்கான டிஏடிமேம்பாடு மற்றும்வங்கிச் சாராநிதிச் சேவைநிறுவனங்களில் வேகமானகடன் வளர்ச்சி( TAT for lending improves further with NBFCs lending fastest): எம்எஸ்எம்இ நிறுவனங்களில் கடன் வழங்கும் டிஏடி தொடர்ந்து மேம்பட்டுள்ளதை காண முடிகிறது. 2016 ஆம் ஆண்டில் 32 நாள்களாக இருந்த டிஏடி, 2018 ஆம் ஆண்டில் 26 நாள்களாக மேம்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் வங்கிச் சாரா நிதி சேவை நிறுவனங்கள் குறைவான டிஏடி கொண்டுள்ளது, பொதுத் துறை வங்கிகளின் டிஏடி இந்தக் கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டுள்ளது. அதாவது, 2016 ஆம் ஆண்டில் 41 நாள்களாக இருந்த டிஏடி, 2018 ஆம் ஆண்டில் 31 நாள்களாக மேம்பட்டுள்ளது. வங்கிச் சாரா நிதி சேவை நிறுவனங்களில் ரூ. 10 லட்சங்கள்  முதல்ரூ. 10 கோடி வரையிலான கடன் பிரிவுகளில் சிறப்பான டிஏடி கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை திட்டம் அடிப்படையிலான வரம்புக்கு உட்பட்ட கடன்களாக இருக்கின்றன. அதேநேரத்தில், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கடன்களில் பெரும்பகுதி மதிப்பீட்டின் அடிப்படையிலான நடைமுறை மூலதன கடன்களாக (working capital loans) இருக்கின்றன.

ü  டிஏடிகுறைப்பு உதவியில்டியூசிஎல் வர்த்தகவிவரங்கள் பயன்பாடுஅதிகரிப்பு (Increased TUCL Commercial Bureau usage has helped in TAT reduction): சிபில் வர்த்தக கடன் அறிக்கைகளை (CIBIL Commercial Credit Reports) அனைத்துபிரிவுகளையும் சேர்ந்த கடன் அமைப்புகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் டிஏடி- குறைப்பதில் குறிப்பிடத்தக்கஅளவுக்கு உதவுகிறது. கடன் ஒப்புதல் அளிப்பதற்கு கடன் அறிக்கைகளை பயன்படுத்துவது 2016 ஆம் ஆண்டில் 30% ஆக இருந்தது. இது 2018 ஆம் ஆண்டில் 49% ஆக அதிகரித்துள்ளது. இதேகால கட்டத்தில் டிஏடி 32 நாள்களிலிருந்து 26 நாள்களாக குறைந்துள்ளது.. பொதுத்துறை வங்கிகளில் டிஏடி குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டுள்ளது. அதாவது 41 நாள்களிருந்து 31 நாள்களாக குறைந்துள்ளது. இவற்றில் கடன் ஒப்புதல் அளிப்பதற்கு கடன் அறிக்கைகளை பயன்படுத்துவது 2016 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்தது. இது 2018 ஆம் ஆண்டில் 36% ஆக அதிகரித்துள்ளது.
ü  வங்கிக்குபுதியவர்கள் மூலம்எம்எஸ்எம்இ  கடன் அதிகவளர்ச்சி (New-To-Bank (NTB) segment largely contributes to MSME portfolio growth): எம்எஸ்எம்இ கடன்கள் பிரிவு எப்படி வளர்ந்தது என ஆராயப்பட்டது. இதன் மூலம், ஓராண்டு காலத்தில் கடன் வழங்கிய நிறுவனங்கள், 14% கடன்கள் வெளியேற்றத்தை சந்தித்து வருகின்றன என தெரிய வருகிறது. அதேகாலகட்டத்தில் எம்எஸ்எம்இகடன் வாங்கிய நிறுவனங்கள், அதே கடன் நிறுவனத்துடன் தொடர்வது வெறும் 2% ஆக உள்ளது. ஒட்டு மொத்த எம்எஸ்எம்இ  கடன்கள்20% வளர்ச்சிக் காண, வங்கிச் சேவையை புதிதாக பெற்றவர்கள் (New to Bank -NTB) காரணமாக இருப்பது தெரிய வந்தது.  எம்எஸ்எம்இ  கடன்கள்  வளர்ச்சியில்இவர்களின் பங்களிப்பு 32% ஆக உள்ளது.

ü  அதிகவெளியேற்றத்தால் பொதுதுறைவங்கிகளில் கடன்வளர்ச்சி குறைவு(Lower portfolio growth in PSBs is largely due to high attrition): தனியார் வங்கிகள் 18% மேம்பாடுகள் மூலம், தொடர்ந்து கடன் வாங்குபவர்கள் பிரிவில் 4% வளர்ச்சியை கண்டுள்ளது. அதேநேரத்தில், 14% நிறுவனங்கள் வெளியே வருகின்றன். வங்கிக்கு புதியவர்கள் மூலம் தனியார் வங்கிகளில் 30% கடன் வாங்கப்படுவதால், அவற்றின் கடன் வளர்ச்சி 34% ஆக உள்ளது.  பொதுத்துறைவங்களில் கடன் வாங்கிய நிறுவனங்கள் வெளியேறுவது  12% பின்னடைவையும், தொடர்ந்து கடன்வாங்குவதில் 3% பின்னடைவையும் சந்தித்துள்ளன. வங்கிக்கு புதியவர்கள் மூலம், தனியார் நிறுவனங்களை விட குறைவாக அதாவது 24% கடன்தாரர்களை பொதுத்துறை வங்கிகள் பெற்றுள்ளன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, எம்எஸ்எம்இ பிரிவில் 9% வளர்ச்சியை கண்டுள்ளன. வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் அதிக வெளியேற்றம் மற்றும் அதிக என்டிபி (NTB) சேர்க்கை இருக்கின்றன. இதற்கு காரணம், இவை வழங்கும் கடன்களில் அதிகமானவை குறித்தக்  காலகடன்களாக (term loans) இருப்பதாகும்.

சிட்பி பற்றி….:

இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) [Small Industries Development Bank of India (SIDBI)], குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு [Micro, Small and Medium Enterprise (MSME) sector] நிதி அளிப்பது, அவற்றை ஊக்குவிப்பது, அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவது போன்ற பணிகளைச் செய்து வருகிறது. இந்தத் துறையில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி போன்றவற்றை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. எம்எஸ்எம்இ துறை துடிப்புடனும் உலக அளவில் போட்டி இடக் கூடிய வகையிலும் செயல்படுமாறு சிட்பி கடன் நடைமுறைகளை செயல்படுத்தி அந்த நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. மேலும் விவரங்களுக்கு www.sidbi.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

டிரான்ஸ்யூனியன் சிபில் பற்றி….:

சிபில், கடன் குறித்ததகவல்களை அளிக்கும் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாகும். மேலும் வாடிக்கையாளர்களின் கடன்நிலை மற்றும் அவர்களது கடன் மதிப்பீட்டு அளவுமற்றும் அறிக்கைகளை முழுமையாக கொண்டிருக்கும் சர்வதேச அளவில் மாபெரும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் முன்னணி வங்கிகள், வீட்டு வசதிக்கடன் நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தனி நபர்கள்மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான கடன் தகவல்கள் தற்போது இந்த நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது.

இதன் நோக்கம் என்பது  வணிகம் விரைவாகவும், குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக இருக்கிறது. இந்த அமைப்பு  அதன் உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்பாட்டை  நிர்வகிக்க  உதவுவதன் மூலம், செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை  கூட்டவும் சரியான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது.  நுகர்வோர் மற்றும் வணிக கடனாளர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன்  வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது. தகவல்களின் சக்தி (Power of Information) மூலம்  டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை மூலம் வலிமையான  பொருளாதாரத்தை உருவாக்க உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.transunioncibil.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
தகவல்கள் என்பது நன்மைக்கேஎன நாங்கள் நம்புகிறோம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...