மொத்தப் பக்கக்காட்சிகள்

புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகும், பேங்க்பஜார்

பேங்க்பஜார் செயல்பாட்டு வருமானம், 2017-18 -ல் 91% அதிகரிப்பு..!
 இயற்கை பரிவர்த்தனை 135% அதிகரித்ததே வளர்ச்சிக்கு காரணியாகும். 

சென்னை, ஜூன் 14, 2018 : 

இந்தியாவின் முன்னணி நிதிச் சந்தை  இணையதளமான பேங்க்பஜார் (BankBazaar), -ன் செயல்பாட்டு வருமானம், 2017-18 -ல் 91% அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டு வருமானம், 2016-17 -ல் ரூ. 54 கோடியாக இருந்தது. அது 2017-18 -ல் ரூ. 103 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம், 2016-17 -ல் ரூ. 71 கோடியாக இருந்தது. அது 2017-18 -ல் ரூ. 118 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாய் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக, அதன் இணைய தளத்தை இயற்கையாக பார்வையிடுபவர்கள் (organic visits) எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்ததாகும். மொத்த பார்வையாளர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர் இப்படி இயற்கையாக பார்வையிட வந்தவர்கள்  என பேங்க்பஜார் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

பேங்க்பஜார், இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தனிநபர்  நிதி (personal finance) சார்ந்த இணையதளமாக இயங்கி வருகிறது. 2017-18 ஆம் நிதி ஆண்டில் இந்த இணையதளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. அந்த வாடிக்கையாளர்களில் 42 சதவிகிதம் பேர் திரும்ப வரும் பார்வையாளர்களாக (returning visitors)இருக்கிறார்கள். மொத்தம் 5.7 கோடி பேர் ( 57 mn)  கடன் அட்டைகள் ( credit cards) சார்பான விஷயங்களை தேடியிருக்கும் நிலையில் 6.35 கோடி பேர் (63.5 mn) கடன் சம்பந்தமான விஷயங்களை பேங்க்பஜார் இணையதளத்தில் தேடி இருக்கிறார்கள். அதிக இயற்கை பார்வையாளர்கள் மற்றும் திரும்ப வரும் பார்வையாளர்களால் பேங்க்பஜாரின் செலவுகள் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, பிராண்ட் மார்கெடிங் உள்ளிட்ட மொத்த சந்தைப்படுத்துதல் செலவு முந்தைய ஆண்டை விட 30 சதவிகிதம் குறைந்துள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, வருமானத்தில் சம்பளச் செலவு 43 சதவிகிதம் குறைந்துள்ளது. ஒட்டு மொத்த செலவை பேங்க்பஜார் குறைத்ததால் எபிட்டா இழப்பு (EBITDA losses) வருமானத்தில் 34% குறைந்துள்ளது. மேலே குறிப்பிட்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத புள்ளி விவரங்கள், தணிக்கைக்கு உட்படும்போது சிறிது மாறுபடக்கூடும்

அதில் ஷெட்டி,
துணை - நிறுவனர்
மற்றும்
தலைமை செயல் அதிகாரி,
பேங்க்பஜார்

அதில் ஷெட்டி, துணை - நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, பேங்க்பஜார் (Adhil Shetty, Co-founder and CEO, BankBazaar), கூறும் போது, ''நாங்கள் பிரமாண்ட முன்னேற்றத்தை அடைந்து முன்னணிக்கு வந்துள்ளோம். அதற்கு தெளிவான குறிக்கோள் மற்றும் குழுவாக சிறப்பாக செயல்பட்டதாகும். தனிநபர்  நிதிச் சார்ந்த விஷயங்களை காகிதமற்றதாக மாற்றி உள்ளதோடு,  நிறுவனங்களுக்கு நேரில் செல்லத் தேவையில்லாத நிலையை உருவாக்கி இருக்கிறோம். எங்களின் இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க விரும்புகிறார்கள். எக்ஸ்பிரியன் (Experian) போன்ற முதலீட்டாளர்களை கவர்ந்திருக்கிறோம். ஏற்கெனவே, அமேசான், செக்கோயா கேப்பிட்டல், வால்டென் இன்டர்நேஷனல், ஃபிடிலிட்டி குரோத் பார்ட்னர்ஸ் மற்றும் மவுஸ் குரோத் பார்ட்னர்ஸ் (Amazon, Seqouia Capital, Walden International, Fidelity Growth Partners, and Mousse Partners)போன்ற நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. அதேநேரத்தில், இந்தியா முழுக்க குறிப்பாக மெட்ரோ நகரங்கள், மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் எங்களின் ஆன்லைன் சேவையை பெற விரும்புவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டில் இதனை விட அதிக வளர்ச்சியை பெறுவோம் என்று நம்புகிறோம். 

பேங்க்பஜார், இந்தியாவில் தனிநபர் நிதி என்பது எதிர்காலத்தில் காகிதமற்ற, நேரில் செல்லத் தேவையில்லாத டிஜிட்டல் ஃபைனான்ஸ் (digital finance) ஆக இருக்கும் என நம்புகிறது. 15 மாதங்களுக்கு முன் பேங்க்பஜார் காகிதம் இல்லா நிதி பரிவர்த்தையை அறிமுகம் செய்தது. அது இப்போது பேங்க்பஜாரின் மொத்த பரிவர்த்தனையில் 18 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. 2018-19 ஆம் ஆண்டின் இறுதியில், பேங்க்பஜாரின் மொத்த பரிவர்த்தனையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக காகிதம் இல்லா நிதி பரிவர்த்தனையாக இருக்கும். 2018-19 ஆம் ஆண்டுக்கான பேங்க்பஜாரின் இலக்கு, காகிதம் இல்லா நிதி பரிவர்த்தனைக்குள் புதிய பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பல மடங்கு கொண்டு வருவதாக இருக்கிறது.

ரமேஷ் ஶ்ரீனிவாசன்,
தலைமை நிதி அதிகாரி,
பேங்க்பஜார்

புதிய எங்களின் இணையதள  காகிதம் இல்லா பரிவர்த்தனை (online paperless model) பாதி செலவில், ஆஃப்லைன் பரிவர்த்தனையுடன் ஒப்பிடும் போது, மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது எங்களின் வருமானத்தை மிகவும் அதிகரிப்பதோடு, தேவையில்லா செலவையும் குறைக்கிறது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில்  எபிட்டா லாபம் (EBITDA profitable) அடைவோம், என்றார், ரமேஷ் ஶ்ரீனிவாசன், தலைமை நிதி அதிகாரி, பேங்க்பஜார் (Ramesh Srinivasan, CFO, BankBazaar)

பேங்க்பஜார், 2018-19 ஆம் நிதி ஆண்டில் அதன் இணையதளத்தை 40 கோடிக்கும் (400mn) மேலானவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கிறது. இந்த வளர்ச்சியை அடைய அதன் பணியாளர் எண்ணிக்கையை 1800-க்கும் அதிகமாக உயர்த்தி உள்ளது. வரும் 2020-22 ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் (IPO) இறங்க இந்த நிறுவனம் தயராகி வருகிறது.

பேங்க்பஜார் பற்றி

பேங்க்பஜார.காம் (2B0vUU8"BankBazaar.com), இந்திய இணையம் மற்றும் மொபைல் போன் சங்கத்தின்  (Internet And Mobile Association of India - IAMAI) சிறந்த நிதிச் சார்ந்த இணைய தளம் என தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசிய பகுதியில் சிறந்த வளர்ந்து வரும் பிராண்ட் என சிஎம்ஓ ஏசியா  (CMO Asia) அமைப்பால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பேங்க்பஜார், இந்தியாவின் முதல் நடுநிலை ஆன்லைன் சந்தையாக உள்ளதோடு, கடன்கள், கடன் அட்டைகள் மற்றும் இதர நிதித் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை முதலீட்டாளர் மற்றும் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப உடனடியாக அளித்து வருகிறது. இது கடன் விண்ணப்ப நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ளது. யார் ஒருவரும் அவரின் / அவளின் தேவை மற்றும் தகுதிக்கு ஏற்ப,  உடனடியாக  அவருக்கு ஏற்ற பிரத்யேக ஆஃபர்கள் (tailor-made offers), ஒப்பீடு ஆகியவற்றை அவர்களின் நிதித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியை பேங்க்பஜார்.காம் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் தொழில்நுட்ப திறன்களை வடிவமைத்துள்ளது. மேலும், 85க்கும் மேற்பட்ட இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் நிதித் திட்டங்களை ஒரே இடத்தில் இணைத்துள்ளது. இணையதள வாடிக்கையாளருக்கு இணையம் மூலம் வங்கிச் சார்ந்த சேவை அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. அதுவும் பேங்க்பஜார்.காம்-ல் அனைத்து சேவைகளும் இலவசமாகவே கிடைக்கிறது.

பேங்க்பஜார் நிறுவனத்தின் சேவைகள், இணையதளம் (web-portal), மொபைல் இணைய சேவை அல்லது பேங்க்பஜார் ஆப் (ஆன்ட்ராய்ட் பிளே ஸ்டோர் அல்லது ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் பதவிறக்கம்) மூலம் கிடைக்கிறது. மேலும், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களின் (NBFCs) சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்ய இது உதவுகிறது. இவை தவிர, வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை தொடர்பான சமீபத்திய செய்திகள் / போக்குகள் போன்றவற்றை அளித்து வருகிறது. மேலும், நிதித் திட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்ய உதவியும் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள், அவர்களின் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது? பிரச்னைகளுக்கான தீர்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பேங்க்பஜார் ஆப், வாட்ஸ்அப்,  இமெயில், குரல் வழிச் சேவை உள்ளிட்டவை மூலம் கண்காணிக்க முடியும்.

இந்தியா தவிர, பேங்க்பஜார்.காம் நிறுவனத்துக்கு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஓர் அலுவலகம் உள்ளது. இது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் முறையை BankBazaar.sg (2016 முதல்) மற்றும் bbazar.my (2017 முதல்) ஆகிய இணையதள முகவரியுடன் இயங்கி வருகிறது. இது முழுமையான ஒருங்கிணைந்த ஆன்லைன் சேனல் பார்டனர்களாக வங்கிகளுடன் நல்ல நிலையில் உள்ளது.

Media Contacts:
       Parul Shrivastava | BankBazaar.com | parul.shrivastava@bankbazaar.com

       Vidya Nadiminti | Adfactors PR | vidya.nadiminti@adfactorspr.com


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...