மொத்தப் பக்கக்காட்சிகள்

ஷோபா அதி நவீன வில்லா திட்டம் - ஷோபா கார்டெனியா சென்னையில் அறிமுகம்

ஷோபா வின் அதி நவீன வில்லா திட்டம் - ஷோபா 
கார்டெனியா சென்னையில் அறிமுகம்


ஷோபா லிமிடெட், தனது புதிய வில்லா திட்டமான, ஷோபா கார்டெனியா வை சென்னையில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், சென்னை புறநகர் பகுதியான பசுமை சோலையான வேங்கைவாசலில் அமைந்துள்ளது. தற்கால வடிவமைப்புடன், பாரம்பரிய தமிழ் சார் கட்டிடக் கலை நயத்துடன் உருவாகும் ஷோபா கார்டெனியா, ஷோபா நிறுவனத்தின் கட்டிடக்கலை குழுவால் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டம், சென்னை யில் ஷோபா நிறுவனத்தின் ஐந்தாவது திட்டமாகும்.
ஷோபா கார்டெனியா வானது 2, 2.5, 3, 3.5, மற்றும் 4 பிஎச்கே கூறுபாடுகளுடன் 79 வில்லாக்கள் கொண்டதாக திகழ்கிறது. இது 6.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த விற்பனை பகுதி 180275 சதுர அடி (16748 சதுர மீ) ஆகும். ஒவ்வொரு வில்லாவும் 1334.75 சதுர அடி முதல் 3365.21 சதுர அடி வரை (124 சதுர மீ முதல் 312.64 சதுர மீ வரை) கொண்டதாக அமைந்துள்ளது. இது உன்னதமான இயற்கை எழில் சூழ்ந்த வாழ்க்கை அனுபவத்தினை நமக்கு அளிக்கிறது.
இது குறித்து பேசிய திரு. ஜெ. சி. சர்மா, துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ஷோபா லிமிடெட், "கடந்த பல ஆண்டுகளாக, சென்னை நகரமானது இந்தியாவின் முக்கிய தொழில் மற்றும் வணிக சந்தை நகரமாக திகழ்ந்து வருகிறது. சுகாதாரம், ஆட்டோமொபைல் மற்றும் தொழில் துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில் நுட்ப துறை (ஐடி) மற்றும் பிபிஒ துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நகரத்தில் வீடுகளுக்கான தேவைகள் பெருகியுள்ளன. இது கட்டிடம் கட்டுபவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் முக்கிய இடமாக திகழ்கிறது. எங்கள் புதிய வில்லா திட்டமானது, சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட தல அமைப்பு (layout) மற்றும் சரியான வாழும் பகுதிகளை கொண்டு சர்வதேச உயர் தர பாணியில் வசதியான வாழ்க்கைக்கான எங்கள் உறுதிமொழியினை பிரதிபலிக்கிறது. 
இயற்கை எழில் மற்றும் அமைதியான வாழ்க்கை சூழலை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஷோபா கார்டெனியா தனக்கே உரிய தனிப்பட்ட வடிவமைப்பில், தரம் உணர்வு மற்றும் மதிப்பினை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதாக திகழ்கிறது. இது குறித்து விரிவாக எடுத்துரைத்த திரு. டி. பி. சஞ்சய சாரதி, மண்டல இயக்குனர், சென்னை, ஷோபா லிமிடெட், "சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் கொண்ட நன்மங்கலம் ரிசர்வ் காடுகள் மற்றும் பல ஏரிகள் அருகே அமைந்துள்ள ஷோபா கார்டெனியா, தூய்மையான, பச்சை பசுமை சூழலில் அமைந்துள்ளதால், தரமான வாழ்க்கை பாணியை சந்தோஷமாக அனுபவிக்கும் வகையில் இது விளங்குகிறது. சிறந்ததில் சிறந்ததையே விரும்புவோர்க்கு ஏற்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் உறுதியான கட்டுமான வீடுகளாக, நகரத்தை விட்டு தொலைவில் அமைந்துள்ளது. நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளை கொண்டுள்ளதுடன் நகரத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. 
ஷோபா கார்டெனியாவில் குடியிருப்பவர்களுக்கு ஓய்வெடுக்க பிரத்தியேக கிளப் ஹவுஸ், புத்துணர்ச்சியூட்டும் வகையில் பல்நோக்கு ஹால், உள்ளரங்க விளையாட்டுக்கள், டிடி ரூம், சிறந்த உபகரணங்கள் கொண்ட உடற்பயிற்சியகம், நீராவி குளியல் வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் கொண்டதாக திகழ்கிறது. மேலும் டென்னிஸ் கோர்ட், சிறுவர்கள் விளையாட்டு பகுதி மற்றும் ஜாகிங் ட்ராக் என பல வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இயற்கைக்காட்சி வனப்புடைய சுழ்நிலம், மரங்கள் நிறைந்த சாலைகள் மற்றும் கால் பாதங்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட பாதை மற்றும் சென்சரி தோட்டமும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வில்லாவிலும் இயற்கை வேளாண் செடிகள் வளர்க்க பிரத்தியேக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இவை ‘ப்ஃரீ ஹோல்டு’ இடத்தில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுழல் மேம்படுத்தும் பொருட்டு கரிய கழிவு மாற்றி, மழை நீர் சேகரிப்பு, சூரியப்பலகம் மற்றும் 24 மணி நேர தட்டுப்பாடற்ற மின்சாரம் என பல்வேறு வசதிகள் கொண்டுள்ளதாக திகழ்கிறது.Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...