மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிதி நிலை செயல்பாடுகள் மொத்த வணிகம் ரூ 3,68,128 கோடி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிதி நிலை செயல்பாடுகள்  மொத்த வணிகம்  3,68,128

நிதி நிலை செயல்பாடுகள்  - 31.12.2017

வணிகம் - மைல்கற்கள் (ரூ. கோடியில்)

Ø திரட்டப்பட்ட டெபாசிட்கள்  2,16,592
Ø வழங்கப்பட்ட கடன்  1,51,536
  Ø மொத்த வணிகம்  3,68,128
Ø காசா  76,526
Ø காசா  விகிதம் 35.33%

நிதி நிலை செயல்பாடுகள் (ரூ. கோடியில்)

Øசெயல்பாட்டு லாபம்  685 (3 மாதம் )
Ø நிகர இழப்பு  971 (3 மாதம்)
Ø ஒதுக்கீடு  1656 (3 மாதம்)
Ø ஒதுக்கீடு  5193 ( 9 மாதம் )
Ø செயல்பாட்டு லாபம் 2,500 (9 மாதம்)
Ø நிகர இழப்பு  2,693 (9 மாதம்)
Ø மொத்த வாராக் கடன்  33,267 (21.95%)
Ø நிகர வாராக் கடன்  17,761 (13.08%)

முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (உள்நாடு)

காசா விகிதம் 36% 
நிகர வட்டி விகிதம் 1.96%
டெபாசிட் திரட்டும் செலவு 5.51%
செலவு, வருமான விகிதம் 67.16%

முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (வெளிநாடு)
காசா விகிதம் 35.33% 
நிகர வட்டி விகிதம் 1.92%
டெபாசிட் திரட்டும் செலவு 5.39%
செலவு, வருமான விகிதம் 65.71%

வங்கியின் இழப்பு என்பது செயல்பாடுகள் மூலம் வந்தது அல்ல. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மூலம் வந்தது.

டிசம்பர் 31, 2017 உடன் முடிந்த காலாண்டின் நிதி நிலை செயல்பாடுகள்..!


* வங்கியின் மொத்த வணிகம், டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ.  3,68,128  கோடியாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி ரூ. 3,64,736  கோடியாக இருந்தது.

* மொத்த டெபாசிட்கள் டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ.  2,16,592 கோடியாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி ரூ. 2,10,861  கோடியாக இருந்தது.

* வங்கியின் காசா டிசம்பர் 31, 2017 நிலவரப்படி 36.00% ஆக உள்ளது.  இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி 36.19% ஆக இருந்தது.  அதேநேரத்தில் மொத்த காசா டெபாசிட் இதே காலக் கட்டத்தில் ரூ. 76,304 கோடியிலிருந்து ரூ. 76,526 கோடியாக அதிகரித்துள்ளது.

* மொத்தம் வழங்கப்பட்ட கடன்கள் , டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ.1,51,536 கோடியாக உள்ளது. இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி ரூ. 1,53,875 கோடியாக இருந்தது  இந்த வங்கி சிறு கடன், விவசாயக் கடன்,  சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்  (Retail, Agri and MSME) கடன்களில் கூடுதல் கவனம் செலுத்தியதால், இவற்றின் பங்களிப்பு 54.18% லிருந்து 64.75% ஆக அதிகரித்துள்ளது. 

* எம்எஸ்எம்இ பிரிவு கடன்  வளர்ச்சி, 2017 டிசம்பர் காலாண்டில் முந்தையை 2016 டிசம்பர் காலாண்டை விட  14.14% அதிகரித்துள்ளது. 

* சிறு கடன் பிரிவு கடன்  வளர்ச்சி  டிசம்பர் காலாண்டில் முந்தையை டிசம்பர் காலாண்டை விட 31.86% அதிகரித்துள்ளது.

*  2017, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ. 684.77 கோடியாக உள்ளது.

2017, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் நிகர இழப்பு ரூ. 971.17 கோடியாக உள்ளது.

வங்கியின் மொத்த வணிகம்  2017, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ. 5,062.38 கோடியாக உள்ளது. இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி ரூ. 5,599.50  கோடியாக இருந்தது. கரூவூல வருமானம் குறைந்து போனதே இதற்கு காரணம்.

வட்டி வருமானம், 2017 டிசம்பர்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ.  4254.69  கோடியாக உள்ளது.  இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி ரூ.  4878.40  கோடியாக இருந்தது 

நிகர வட்டி வருமானம்,  2017 டிசம்பர்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ.  807.70  கோடியாக உள்ளது.  இது, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி ரூ.  721.11  கோடியாக இருந்தது 

மொத்தச் செலவு, 2017 டிசம்பர் காலாண்டில் முந்தையை 2016 டிசம்பர் காலாண்டை விட 7.74% குறைந்துள்ளது.

வாராக் கடன் மேலாண்மை :  மொத்த வாராக் கடன்  2017 டிசம்பர்  31 நிலவரப்படி   ரூ.  33,266.88 கோடியாக  (21.95%) உள்ளது.  2016 டிசம்பர்  31 நிலவரப்படி   ரூ. 34,502.13 கோடியாக  (22.42%) இருந்தது. மொத்த வாராக் கடன் 0.47%  அதாவது ரூ. 1235.25 கோடி குறைந்துளளது.

2017 டிசம்பர்  31 உடன் முடிந்த காலாண்டில் வாராக் கடன் வசூல் 3,020.53  கோடியாக உள்ளது. இது, 2016 டிசம்பர்  31 உடன் முடிந்த காலாண்டில்  ரூ. 2,446 கோடியாக இருந்தது. அதேநேரத்தில் புதிதாக வாராக் கடன் உருவாவது 2017 டிசம்பர்  31 உடன் முடிந்த காலாண்டில் ரூ.1,431.77 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

நிகர வாராக் கடன்,  2017 டிசம்பர்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ 17,761.22 (13.08%) கோடியாக உள்ளது. 2016 டிசம்பர்  31 நிலவரப்படி  ரூ. 19,900.75 கோடியாக  (14.32%) இருந்தது நிகர வாராக் கடன் சதவிகிதம் 1.24% குறைந்துள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...