மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் துவக்கத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15.80% வருமானம்


யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் துவக்கத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15.80% வருமானம்

பங்குச் சந்தையின் செயல்பாட்டை பொறுத்து முதலீட்டாளர்கள் சொத்துப் பிரிவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்தும் மாறுகிறது. சில நேரங்களில், பங்குச் சந்தை கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும்போது, முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட சொத்து வகைகளில் அதிகமான அல்லது குறைவான முதலீட்டை அவர்களின் முதலீட்டுக் கலவையில் (portfolio) வைத்திருப்பார்கள்.

எனவே, கடன் சார்ந்த திட்டங்கள் , பங்குச் சார்ந்த திட்டங்கள் மற்றும் பிற சொத்து வகுப்புகளில் ஒருவரின் போர்ட்ஃபோலியோவை சமநிலையில் (balance) ஆக வைத்துக்கொள்வது அவசியம்.  இங்கேதான் பேலன்ஸ்ட் ஃபண்ட்கள் (Balanced Funds) முக்கியத்துவம் பெறுகின்றன.

முதலீட்டாளர்கள், பாதுகாப்பு மற்றும் மூலதன அதிகரிப்புக்கு இடையே ஒரு சமநிலையை எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் கடன் சார்ந்த திட்டங்கள் / பங்குச்  சந்தையின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் நிறுவனப் பங்குகள் கலந்த சரியான முதலீட்டு தேர்வை விரும்புவார்கள்.

யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட்-ன் முதலீட்டு தத்துவம் (Fund’s Investment philosophy)

யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட்து. இந்த ஃபண்ட் பேலன்ஸ்ட் ஃபண்ட் பிரிவில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த ஃபண்ட், சொத்து ஒதுக்கீட்டு ஒழுங்குமுறை  (asset allocation) மற்றும் சீரான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் தொடர்ந்து வருமானம் தருவதோடு, மூலதன அதிகரிப்போடு செயல்பட்டு வருகிறது. 

இந்த ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட்-ன் சாயலில் ஆல்பாவின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஃபண்டின் கடன் சார்ந்த முதலீடுகள்  பழமைவாத அடிப்படையில்(conservative basis) நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பாக, பெரும்பாலும் நீண்ட கால கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்பதை தவிர்த்து மற்ற சமயங்களில், இந்த ஃபண்டின் ஃபண்ட் மேனேஜர் பங்குகள் மற்றும் கடன் சார்ந்த திட்ட முதலீடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதை தவிர்த்துவிடுகிறார்.

வரலாற்று ரீதியாக பார்த்தால், பங்குகளில் அதிகபட்சமாக 75% முதலீடு செய்யப்பட்டிருக்கும். கடன் பிரிவில் இரண்டு முதல் மூன்று ஆண்டு கால முதிர்வு கொண்ட கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்ய அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கொள்கை அடிப்படையில் பார்த்தால், இந்த ஃபண்ட், கடன் சார்ந்த முதலீடுகளில் அரசு கடன் பத்திரங்கள் (G-Sec) அதிக லாபம் தரும் நிலையில், 20 முதல் 30% அளவுக்கு முதலீடு செய்கிறது. 

தற்போது இந்த ஃபண்டில் சுமார் 60 சதவிகிதம் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீதி மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃபண்டின் முதலீட்டுக் கலவை சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ஆல்பா-ஐ சரியாக இந்த ஃபண்ட் பராமரித்து வருகிறது. மிட் கேப் நிறுவனப் பங்குகளை எடுத்துக் கொண்டால்  தகவல் தொழில்நுட்பம் (IT), பயன்பாடுகள் (Utilities)ரசாயனங்கள் (Chemicals) சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

ஏன் யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் (Why UTI Balanced Fund)

· 23 ஆண்டு கால வரலாறு -  

இந்த ஃபண்ட் 23 ஆண்டுகளில் பலவேறு சந்தை சுழற்சிகளில் (market cycles) செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்திருக்கிறது.  கடந்த 1 / 3 /5 ஆண்டு காலங்களில், அதன் தரவரிசையை (கிரிசில் சமநிலை நிதி குறியீட்டு எண் - Crisil Balanced Fund Index) விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் அதன் துவக்கத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15.80% (சி.ஜி.ஆர்.ஏ. அடிப்படையில் டிசம்பர் 29, 2017 அன்று) வருமானம் கொடுத்துள்ளது.

 · உயர் தர முதலீட்டுக் கலவை  

இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில்  நல்ல வருவாய் திறன், நல்ல வருவாய் விகிதம் மற்றும் பெருநிறுவன ஆளுமை (corporate governance) கொண்ட வலுவான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனப் பங்குகள் இடம் பிடித்துள்ளன.ஃபண்டின் கடன் பிரிவானது, AAA / AA + தரக்குறியீடு பெற்ற கடன் பத்திரங்களில் கவனம் செலுத்துகிறது, இது கடன் அபாயத்தை குறைப்பதில் உதவுகிறது.

· வருமான வரி அனுகூலம்  - இந்த ஃபண்டில் 65% மற்றும் அதற்கு மேலாக  நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், அது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்குரிய (equity scheme)  வரி நன்மைகளை அளிக்கிறது. விநியோகிக்கப்படும் டிவிடெண்ட்க்கு வரி இல்லை மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி இல்லை.

·டிவிடெண்ட் விநியோக வரலாறு- இந்த ஃபண்ட் சிறப்பான டிவிடெண்ட் விநியோக வரலாற்றை கொண்டுள்ளது. இந்த ஃபண்ட் 2003 ஆம் ஆண்டிலிருந்து (2013 தவிர்த்து) தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடந்த மார்ச் 2017லிருந்து இந்த ஃபண்ட் தொடர்ந்து மாதம் தோறும் டிவிடெண்ட் அறிவித்து வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டுக்கு தொடர்ந்து வருமானம் பெற்று வருகிறார்கள்.

யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் யாருக்கு ஏற்றது? (Funds Suitability)

தங்கள் முதலீட்டுக் கலவை பரவாலாக்கவும் (diversify), நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்கவும் முயல்கிறவர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றது. வரையறுக்கப்பட்ட இறக்க ஆபத்தோடு (limited downside risk) பங்குச் சந்தை  முதலீடு மூலமான  அதிக வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் சரியானதாக இருக்கும்.
*** 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...