மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி பொது பங்கு வெளியீடு - பங்கு விலைப் பட்டை ரூ. 651- ரூ.661

ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - பொது பங்கு வெளியீடு - 2017 செப்டம்பர் 15, வெள்ளிக் கிழமை ஆரம்பம், 2017 செப்டம்பர் 19, செவ்வாய்க் கிழமை நிறைவு. பங்கு விலைப் பட்டை ரூ. 651- ரூ.661

ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட், பொது பங்கு வெளியீட்டை (Initial Public Offer) 2017 செப்டம்பர் 15 ம் தேதி ஆரம்பிக்கிறது. ரூ. 10 முக மதிப்பு கொண்ட 86,247,187 பங்குகளைவிற்பனை செய்கிறது

இதில், 31,761,478 பங்குகளை ஐசிஐசிஐபேங்க், 54,485,709 பங்குகளை எஃப்ஏஎல்கார்ப்பரேஷன் (FAL Corporation) விற்பனை செய்கிறது. இவை இரண்டும் சேர்ந்துநிறுவனர் பங்குமூலதனம் என்கிறபெயரில் விற்பனைசெய்யப்படுகிறது. 4,312,359 பங்குகள் ஐசிஐசிஐ பேங்க் பங்குமுதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்படுகிறது.                     

பங்கு விலைப் பட்டை (Price Band) ரூ. 651 முதல் ரூ. 661 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 22 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் தேவைப்பட்டால் 22-களின் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். 2017 செப்டம்பர் 19, செவ்வாய்க் கிழமை பங்கு விற்பனை நிறைவு பெறுகிறது.

ஏலம் ஆரம்பிக்கும்  நாளுக்கு, ஒரு நாள் முன்னதாக ஆங்கர் முதலீட்டாளர்கள் (Anchor Investors), ஏலம் கேட்க ஆரம்பிக்கலாம்.

இந்த நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) பட்டியலிடப்பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers  -QIBs) 50 சதவிகிதத்துக்கு அதிகம்இல்லாமல் பங்குகள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இதில் சுமார் 33 சதவிகிதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  நிகரபங்கு விற்பனையில் நிறுவனம்சாராத முதலீட்டாளர்களுக்கு (Non-Institutional Investors), 15 சதவிகித்திற்குகுறையாமல் பங்குகள்ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. நிகர பங்கு விற்பனையில்நிறுவனம்  சிறுமுதலீட்டாளர்களுக்கு (Retail Individual Bidders), 35 சதவிகிதத்திற்கு குறையாமல் பங்குகள்ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.  

அஸ்பா(ASBA - Applications Supported by Blocked Amount) முறைகள்பங்குகள் விற்பனைசெய்யப்படும்.  

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...