குறைந்தபட்ச முதலீடு ரூ.500: க்ரோ ஸ்மால் கேப் ஃபண்ட் Small Cap Fund..!
க்ரோ
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நீண்டகால மூலதன வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு க்ரோ
ஸ்மால் கேப் ஃபண்ட் என்ற புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம்
செய்துள்ளது.
இந்தத்
திட்டத்தின் நோக்கம், சிறிய அளவிலான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதாகும்.
இந்தத் திட்டத்தின்
புதிய ஃபண்ட் வெளியீடு 2026 ஜனவரி 22 -ம் தேதி வரை நடைபெறுகிறது; குறைந்தபட்ச முதலீடு
ரூ.500 ஆகும். யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள்
யூனிட்களை விற்று பணமாக்கினால் 1% வெளியேறும் கட்டணம் விதிக்கப்படும்.
சிறிய அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்தத் திட்டம். அதிக வருமான வாய்ப்பை வழங்கினாலும், பங்குச் சந்தை ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருப்பதால் அதிக ரிஸ்க்கை கொண்டவை.
எனவே, நீண்டகால முதலீட்டு நோக்கமும், சந்தை மாற்றங்களை பொறுமையுடன்
ஏற்றுக்கொள்ளும் திறனும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக
இருக்கும்.