இதயம் காக்கும் சிவப்பு நிற பழங்கள்..!
பழங்கள் சாப்பிடுவது.
அதற்கு துணை புரியும் உறுப்பான இதயத்திற்கும் பலம் சேர்க்கும். இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். உலகளவில் அதிகமான மரணங்களுக்கு இதய செயலிழப்புதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனை தடுத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக் கும் சிவப்பு பழங்கள் பற்றி பார்ப்போம்.
செர்ரி
செர்ரி ஜூஸ், உலர்ந்த செர்ரி, புளிப்பு செர்ரி மற்றும் இனிப்பு செர்ரி என அனைத்து செர்ரிகளும் சுவையானவை. அவற்றில் ஆந்தோசயின்கள் நிறைந்துள்ளன.
அவை ரத்த நாளங்களை பாதுகாக்க உதவிடும். செர்ரி பழங்களை சாலட்டுகளில் சேர்த்தோ, பிற உணவு பதார்த்தங்களில் கலந்தோ உட்கொள்ளலாம்.
ராஸ்பெர்ரி
இந்த பழமும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இயற்கையின் இனிப்புகள் என்று அழைக்கப்படும் இவை ரத்த அழுத் தத்தை கட்டுக்குள் வைக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் துணை புரியும். செயக்திற்கு இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
தக்காளி
தக்காளி இதயத்திற்கு நலம் சேர்க்குமா என்று ஆச்சரியப் படலாம். வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் தக்காளி போன்ற லைகோபீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, இதய நோய் அபாயத்தை 26 சதவீதம் குறைக்கும் என்பது அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந் துள்ளது.
சமைத்த தக்காளி சிறந்தது. அதனை சூடாக்கி சாப்பிடுவது லைகோபீன் உறிஞ்சுதலை மேம்படுத்தும்.
ஆப்பிள்
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பை 40 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. ஆப்பிள் சாப்பிடுவது இதய நோயால் இறக்கும் அபாயத்தை குறைப்பதோடு தொடர்புடை யது என்று அமெரிக்காவின் லோவா மகளிர் சுகாதார ஆய்வகம் தெரிவிக்கிறது. 18 ஆண்டுகளாக, மாதவிடாய் நின்ற 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
ஆப்பிள் பழத்தின் தோலில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. எனவே சாறாக குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுங்கள்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பழத்தை தினமும் சாப்பி டுவது இதயத்தை பலப்படுத்தும். அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பெக்டின் நொதி போன்றவை கெட்ட கொழுப்பை குறைக்கும்.
நன்றி தினத்தந்தி