ராம்ராஜ் காட்டன் சார்பில் சில்லறை
விற்பனையில் மாற்றங்கள் குறித்த கல்ச்சர் கனெக்ட் கருத்தரங்கு
சென்னை:
டிசம்பர் 20, 2025: பாரம்பரிய
இந்திய ஆடைகளில் நம்பிக்கைக்குரிய பெயரான ராம்ராஜ் காட்டன், ‘கல்ச்சர் கனெக்ட் –
சில்லறை விற்பனையின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைத்தல்’ என்ற முதல் மாநாட்டை
மகாபலிபுரத்தில் உள்ள ரேடிசன் புளூ ரிசார்ட்டில் நடத்தியது.
இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சில்லறை வணிக உரிமையாளர்கள் மற்றும் துறை
சார்ந்தநிபுணர்கள் கலந்து கொண்டனர். மாறிவரும் நுகர்வோர் நடத்தை, தொழில்நுட்ப
வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தை இழக்காமல் நவீனமடைவது எப்படி என்பது குறித்து இந்த
மாநாட்டில் பேசப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கவின்கேர் சி.கே. ரங்கநாதன்,
ஜோஹோ கார்ப்பரேஷன் குமார் வேம்பு, ஜி.ஆர்.டி குரூப் ஜி.ஆர். அனந்த பத்மநாபன்,
லைப்ஸ்டைல் இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குனர் வசந்த் குமார் மற்றும் டாடா குரோமா வி.கே. ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் இதனை வழி நடத்தினார், பாவனா பாலகிருஷ்ணன்
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நுகர்வோர் வளர்ச்சி, சில்லறை வணிகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும்
தொழில்நுட்பத்தின் பங்குமற்றும் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்வது குறித்து
விவாதங்கள் நடைபெற்றன. எப்.எம்.சி.ஜி, ஜுவல்லரி, ஆடை மற்றும் தொழில்நுட்பத்
துறைகளில் உள்ள தலைவர்கள், வணிகத்தின் வளர்ச்சி என்பது செயல்திறன் மற்றும் மனிதத்
தொடர்புகளுக்கு இடையிலான சமநிலையைப் பொறுத்தது என்று தங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்து கொண்டனர்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறுகையில்:
"இந்திய சில்லறை வணிகம் வேகமாக மாறி வருகிறது, ஆனால் அதன் அடிப்படை
நம்பிக்கை மற்றும் உறவுகளில் உள்ளது. பாரம்பரிய வணிகங்களும் நவீன சில்லறை
விற்பனையும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் தளமாக & #39;கல்ச்சர்
கனெக்ட்' உருவாக்கப்பட்டது; என்றார்.
அவர் மேலும் அவர் கூறுகையில், நெசவாளர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை
உருவாக்குவதற்கும், அன்றாட வாழ்வில் பாரம்பரிய இந்திய ஆடைகளை நிலைநிறுத்துவதற்கும்
ராம்ராஜ் காட்டன் தொடங்கப்பட்டது. இளைஞர்களிடையே பாரம்பரிய ஆடைகளுக்கான வரவேற்பு
அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கலாச்சாரத்தை மறக்காமல்
எதிர்காலத்திற்குத்தயாராவதே இதன் நோக்கம் என்றார்.
இந்திய சில்லறை விற்பனையின் அடுத்த கட்டம் என்பது தொழில்நுட்ப வசதி, சரியான
முடிவெடுத்தல் மற்றும் புதிய தலைமுறை நுகர்வோருக்கு ஏற்ப கலாச்சார ரீதியாகத்
தொடர்பில் இருப்பது ஆகியவற்றால் அமையும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்தியது.
Photo Caption:
Right to Left: Mr V.K.Srikanth, Chief Digital Officer, Tata Croma; Mr C.K. Ranganathan, Founder & Chairman, CavinKare; Mr K.R Nagarajan, Founder and Chairman, Ramraj Cotton; Mr. G.R. Ananthapadmanaban, Managing Director, GRT Group; Mr Kumar Vembu, Co-founder, Zoho Corporation and Mr. Vasanth Kumar, Former Managing Director, Lifestyle International