ஓய்வூதியர்களுக்கு எச்சரிக்கை
இப்போது சைபர் கிரைம் குற்றவாளிகள் - இணையவழி திருடர்கள் ஒரு புதிய வழியை கண்டுபிடுத்து *ஓய்வூதியர்களை குறி வைத்துள்ளனர்*.
Life Certificate
இப்போது சைபர் கிரைம் குற்றவாளிகள் - இணையவழி திருடர்கள் ஒரு புதிய வழியை கண்டுபிடுத்து *ஓய்வூதியர்களை குறி வைத்துள்ளனர்*.
அதாவது ஒரு ஓய்வூதியரின் விவரங்கள் (PPO No., ஆதார் எண், பான் எண், பெற்ற ஓய்வூதிய பலன்கள், மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் வீட்டு முகவரி) அனைத்தையும் போன் செய்து சொல்லி, தான் ஓய்வூதியர் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி நம்ப வைக்கின்றனர்.
அவர் அனைத்து விவரங்களையும் சரியாக சொன்னதால் முழுமையாக நாம் நம்பி விடுவோம்.
வாழ்நாள் சான்று - Life Certificate
வாழ்நாள் சான்று - Life Certificate
பிறகு அவர்கள், தாங்கள் *வாழ்நாள் சான்று - Life Certificate* சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி உங்கள் போனுக்கு ஒரு OTP எண் வரும் அதை சொல்லுங்கள் என்று கூறுவார்கள்.
நாம் அவ்வாறு அந்த OTP எண்ணை சொன்ன அடுத்த நிமிடம் நம் வங்கி கணக்கிலிருந்து பணம் முழுவதும் திருடப்பட்டு அவர்களின் கணக்கிற்கு சென்றுவிடும்.
அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் முழுவதும் எடுக்கப்பட்டு விட்டதாக மெசேஜ் வரும். அப்போது தான் நாம் ஏமாற்றப்பட்டதாக அறிவோம்.
அதன் பிறகு அவர்களின் எண்ணிற்கு போன் செய்தாலும் சுவிட்ச் ஆப் என்று தான் பதில் வரும். தொடர்பு கொள்ள முடியாது. ஓய்வூதியர் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து போன் செய்து வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று *ஒருபோதும் சொல்வது கிடையாது.*
அதனால் ஓய்வூதியர்கள் அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து போன் செய்து தகவல்களை கேட்டால் பதில் ஏதும் சொல்லாமல் போன் தொடர்பை உடனே துண்டித்துவிடுவது அவசியம்.
அதனால் ஓய்வூதியர்கள் அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து போன் செய்து தகவல்களை கேட்டால் பதில் ஏதும் சொல்லாமல் போன் தொடர்பை உடனே துண்டித்துவிடுவது அவசியம்.