60 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீட்டாளர்களுக்கு கடிதங்கள் எழுதி வந்த வாரன் பப்பட் Warren Buffett, தனது கடைசி கடிதத்தில் மார்க்கெட், லாபம், மதிப்பீடு போன்ற எண்களை விட வாழ்க்கையின் அர்த்தத்தைப் பகிர்ந்தார்.
அந்தக் கடிதத்தை முழுவதும் படிக்கும் போது எனக்கு மனதில் பதிந்த ஒரு வரி:
"முந்தைய தவறுகளுக்காக உங்களைத் தண்டிக்காதீர்கள். அந்தத் தவறுகளிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு முன்னேறுங்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், வயதும் காலமும் ஒருபோதும் தடையாகாது."
Buffett-ன் பார்வையில் முன்னேற்றம் சாதனைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை; தொடர்ந்து கற்றுக்கொள்வதில் தான் உள்ளது. நம்முடைய ஒவ்வொரு தவறும், இழப்பும், தோல்வியும்—வாழ்க்கை என்ற பள்ளியில் நம்மை வடிவமைக்கும் அவசியமான பாடங்களே.
தவறுகளைத் தவிர்ப்பதில் பெருமை இல்லை; அவற்றை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து வளர கற்றுக்கொண்டால், எந்த வயதிலும் எந்த நிலையிலும் நம்முடைய பயணம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கும்.
இதுவே Buffet-ன் கடைசி கடிதத்தில் இருந்து நான் எடுத்துக் கொண்ட ஆழமான செய்தி.
க. முரளிதரன்,
நிதி ஆலோசகர்,
கடலூர்