ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய
பிரமாண்ட அலுவலகம் சென்னையில் திறப்பு
• 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான பிரமாண்ட இடத்துடன் திறக்கப்பட்டுள்ளது
• வங்கி துறையில் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் செயல்பாட்டு மையமாக இந்தியாவை முன்னிலைப்படுத்த திட்டம்
சென்னை, அக். 9-ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் இந்தியா நிறுவனம், சென்னை தரமணியில் உள்ள டிஎல்எப் டவுன்டவுனில் தனது புதிய பிரமாண்ட அலுவலகத்தைத் திறந்துள்ளது. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனமானது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் பல்துறை உலகளாவிய திறன் அமைப்பாகும், இது வங்கித் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்குதல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் உலகளவில் மிகப்பெரிய அலுவலகமாகும். மேலும் இந்த அலுவலகம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, தொழில்நுட்பம் சார்ந்த உலகளாவிய வங்கியாக அதன் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது.
சென்னையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள நுழைவாயிலில்
துவக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அலுவலகம், இந்தியாவின் திறமை சுற்றுச்சூழல்
அமைப்பில் நீண்டகால முதலீடாகும், மேலும் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பணியாளர்
நல்வாழ்வில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை இது
எடுத்துக்காட்டுகிறது.
இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
சென்னையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியின் நுழைவாயிலில்,
தரமணியில் உள்ள டிஎல்எப் டவுன்டவுனில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. சுற்றுச்சூழலை
பாதுகாக்கும் வகையில் இங்கு பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் அதிநவீன
வசதியைக் கொண்டுள்ளது. இந்த அலுவலகமானது இயற்கையான முறையில் அதிக வெளிச்சம்
வரும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஊழியர்கள் அமைதியான சூழலில் நிம்மதியாக
பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டு உள்ளது. ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
வடிவமைப்பில் தலைமைத்துவம் மற்றும் சுகாதார-பாதுகாப்பு தரநிலைகளின்படி
கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்
மருத்துவ மையம், உடற்பயிற்சி மையங்கள் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
புதிய வளாகம் குறித்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் தொழில்நுட்பம் மற்றும்
செயல்பாடுகள் குழுத் தலைவர் நோயல் எடர் கூறுகையில், எங்கள் சென்னை அலுவலகம்
உலகளவில் எங்களின் மிகப்பெரிய அலுவலகம் மட்டுமல்லாமல் திறமை, புதுமை மற்றும்
வாய்ப்பு ஆகியவற்றில் வங்கியின் நம்பிக்கையின் பிரதிபலிக்கிறது. இந்த இடத்தில்
எங்கள் ஊழியர்களை ஒன்றிணைப்பதன் மூலம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக
சேவை செய்வதற்கும் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கும் டிஜிட்டல் மாற்றம்
மற்றும் எளிமைப்படுத்தல் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும்
உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் மற்றும் சேவைகள் பிரிவு
உலகளாவிய தலைவர் ஷெல்லி போலண்ட் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை எங்கள்
தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பணியிடம் என்பது மிகுந்த
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில் டிஎல்எப் டவுன்டவுனுக்கு நாங்கள்
சென்றது எங்கள் வளர்ச்சியை மட்டுமல்ல, புதுமை மற்றும் ஊழியர்களுக்கான நல்வாழ்வை
ஆதரிக்கும் ஒரு முழுமையான சூழலை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும்
பிரதிபலிக்கிறது. புதிய அலுவலகம், அதிநவீன வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த
கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுள்ளது.