விகடன் தீபாவளி சிறப்பு மலர் 2025:
உங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 நிதி மேலாண்மை விதிமுறைகள்!
சி.சரவணன்
வாழ்க்கையில் திருப்தியையும் மனநிறைவையும் ஒருவர் அடைய, 8 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்:
1. ஆரோக்கியமான உடல்
2. அழகான குடும்பம்
3. போதும் என்ற மனப்பான்மை
4. தேவையான வசதிகள்
5. வசிக்க வீடு
6. உடுத்த உடை
7. நல்ல உணவு
8. நல்ல நண்பர்கள்
இதில் 4-வதாக இடம் பெற்றிருக்கும் `தேவையான வசதி'களை ஏற்படுத்திக்கொள்ள உதவும் விஷயங்களை ஒருவர் பின்பற்ற வேண்டும். அவை பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்...

பணத்தைப் பொருட்டாகக் கருதாத அந்தக் காலம்!
நம் முன்னோர்கள், அதாவது நம் தாத்தா பாட்டி, பூட்டன் பூட்டிகள் பணத்தை ஒரு போதும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
காரணம், அந்தக் காலத்தில் தேவைகள் என்பது பெரிதாக இருக்கவில்லை; விலைவாசி உயர்வு என்கிற பணவீக்கம் (Inflation) குறைவாக இருந்தது. மேலும், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர்.
அதனால், தேவைகளை நிறைவேற்றுவது சுலபமாக இருந்தது. கல்விச் செலவு, கல்யாணச் செலவுகூட அப்போது பெரிதாக இல்லை. பெரும்பாலும் அரசுக் கல்லூரியில் படித்தார்கள்; கல்யாணத்தைக்கூட வீட்டிலேயே எளிமையாக நடத்தினார்கள்.
தனித் தீவாகக் குடும்பங்கள்!
ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழ்; தனிக் குடித்தனத்தால் குடும்பங்கள் தனித் தீவாக மாறிவிட்டன. கணவன், மனைவி, பிள்ளைகள் என்றுகூட சொல்ல முடியாது; கணவன், மனைவி, பிள்ளை என மூன்று பேர் கொண்டது ஒரு குடும்பமாக உள்ளது.
மேலும், தேவைகள் ஸ்மார்ட்போன் தொடங்கி சொகுசு ஆடம்பர வீடு வரை இருக்கின்றன. இவற்றை சரியாக நிறைவேற்றிக்கொள்ள, தனிநபர் நிதி மேலாண்மை (Personal Finance Management) மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
அதன் முக்கிய பத்து தூண்கள் (Pillars) பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. வரவுக்குள் செலவுகள்..:
எப்போதும் சம்பாத்தியத்துக்குள் செலவுகளை வைத்துக் கொண்டால் நிதிச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.
எதிர்காலத்தில் வரப்போகிற வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, நிகழ்காலத்தில் கடன் வாங்குவதுதான் பல பணப் பிரச்னைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது.
எத்தனையோ பேரின் வாகனங்கள் தொடங்கி வீடுகள் வரைக்கும் ஏலத்துக்கு வரக்காரணம், எதிர்கால வருமானத்தை நம்பி வாங்கிய கடன்தான்.
விரிவாக படிக்க
https://www.vikatan.com/personal-finance/money/ten-financial-management-rules-for-rich-man