பங்குச்சந்தை குறியீடு 7-வது நாளாக உயர்வு
இந்தியாமீதான அமெரிக்க வரி விதிப்பால் வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச்சந்தை கள், படிப்படியாக உயர்வை கண்டு வரு கின்றன.
அந்தவகையில் தேசிய பங்குச் சந்தை குறியீடு நிப்டி 7-வது நாளாக நேற்றும் உயர்வுடன் முடிந்தது. அதாவது 32.40 புள்ளிகள் அதிகரித்து 3 வாரத்தில் மிக அதிக அளவாக 25,005.50 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதைப்போல மும்பை பங்குச்சந்தை குறியீடான சென் செக்சும், தொடர்ந்து 4-வது நாளாக உயர்வுடன் காணப்பட் டது. 123.58 புள்ளிகள் அதிகரித்து 81,548.73 புள்ளிகளாக நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் என்.டி.பி.சி., ஆக்சிஸ் வங்கி, பவர்கிரிட, பாரதி ஏர்டெல், சன் பார்மா போன்ற பங்குகள் மிகப்பெரும் லாபம் அடைந்தன.
அதேநேரம் இன்போசிஸ், டைட்டன், அல்ட்ராடெக் சிமெண்ட், இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் பின்தங்கிய