ஃபண்ட்ஸ் இந்தியா நிர்வகிக்கும் தொகை ₹20,000 கோடி..! Funds India
ஃபண்ட்ஸ் இந்தியாவின் மேலாண்மையின்
கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு ₹20,000 கோடியை விஞ்சியது;
இந்தியாவின் நம்பகமான சொத்து மேலாண்மை
தளமாக உருவெடுக்கும் இலக்குடன் முன்னேறுகிறது
சென்னை, செப்டம்பர் 8, 2025 –
இந்தியாவில் நீண்ட காலமாக செயல்படும் டிஜிட்டல் வெல்த் மேலாண்மை
தளங்களில் ஒன்றான ஃபண்ட்ஸ் இந்தியா (Funds India), தனது மேலாண்மையில் கீழ் உள்ள சொத்துகள் (AUM)₹20,000 கோடி மதிப்பை எட்டி சாதனை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இச்சாதனை, முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை
வழங்கும் நம்பகமான ஃபின்டெக் முன்னணி நிறுவனத்தின் வலுவான சந்தை நிலையை
அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சிறுமுதலீட்டாளர்கள், பங்காளர் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தனியார் வெல்த்
மேலாண்மை வாடிக்கையாளர்கள் என ஃபண்ட்ஸ்இந்தியாவின் நிலையான விரிவாக்கம மற்றும்
வளர்ச்சிப் பாதையை பிரதிபலிப்பதோடு வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் அதன் நிலையை
வலுப்படுத்துகிறது. தொழில்நுட்பம் சார்ந்த வசதிகள், தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், விரிவான ஆராய்ச்சித் திறமை மற்றும் நீடித்த முதலீட்டாளர்
நம்பிக்கை இவற்றின் ஆதரவோடுஒரு முழுமையான வெல்த் மேனேஜ்மென்ட் தளமாக
உருவெடுத்துள்ள ஃபண்ட்ஸ்இந்தியா, விரிவான வெல்த் மேனேஜ்மென்ட்
தீர்வுகளை நாடும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் உகந்த தளம் எனும் நிலைப்பாட்டைத்
தக்கவைக்க உறுதிபூண்டுள்ளது.
![]() |
| ஃபண்ட்ஸ் இந்தியாவின் குழும தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் சப்ரு |
இச் சாதனையை எட்டியதைக் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஃபண்ட்ஸ் இந்தியாவின் குழும தலைமை நிர்வாக
அதிகாரி அக்ஷய் சப்ரு, “இது எங்களுக்கு ஒரு பெருமைமிக்க சாதனை
மட்டுமின்றி முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமையான மற்றும் எளிதில்
அணுகக் கூடிய வெல்த் சொல்யூஷன்களை வழங்குவதன் மூலம் இந்தியாவை வளப்படுத்துவதற்கான
எங்கள் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் எங்கள் மீது
கொண்டுள்ள நம்பிக்கை, இந்தியா முழுவதும் உலகத்தரம் வாய்ந்த
டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மென்ட் தீர்வுகளை வழங்குவதில் எங்களைத் தொடர்ந்து
ஊக்குவிக்கிறது. வலுவான நிறுவனங்களின் வலுவான ஆதரவு, தொழில்நுட்பம் சார்ந்த நேரடி
சேவை இவற்றின் உதவியோடு, எங்கள் டிஜிட்டல் சேவைகளைமேம்படுத்தி,நாடு
முழுவதும் முதலீட்டாளர்களுக்கு வலு சேர்க்கும் ஒருங்கிணைந்த வெல்த் மேனேஜ்மென்ட் உத்திகளை
வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.” என்றார்.
ஃபண்ட்ஸ்இந்தியா தனது சேவையை இந்தியா முழுவதும்
விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும
சேவையாற்றும் வகையில் சர்வதேச அளவில் விரிவாக்கம் பெறவும் தயாராகி வருகிறது.
இந்தியாவின் நிதி வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முன்னணி
வெல்த் மேனேஜ்மென்ட் தளமாகத் திகழும் நோக்கத்துடன், டிஜிட்டல் மற்றும் நேரடி சேவைகள் என பரஸ்பர நிதிகள் மற்றும்
மேம்பட்ட வெல்த் சொல்யூஷங்களில் முதலீட்டை எளிதாக்குவதைப் பாதியாகக் கொண்டு
இந்நிறுவனம செயலாற்றுகிறது.
முன்னணி உலகளாவிய முதலீட்டு நிறுவனமான WestBridge Capital-இன் ஆதரவு, இந்நிறுவனம் டிஜிட்டல் மாடலை முன்னெடுத்துச் செல்லவும், ஒருங்கிணைந்த வெல்த் மேனேஜ்மென்ட்
தீர்வுகளை வழங்கவும் வலுவான துணையாகச் செயல்படுகிறது.

