பொதுத்துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் கட்டாயமில்லை; அபராத கட்டணம் கிடையாது!'
இந்தியாவின் டாப் 5 பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு (AMB - Average Monthly Balance) பராமரிக்க வேண்டிய கட்டாயத்தை நீக்கி, இதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களையும் முற்றிலும் அகற்றியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி,
கனரா வங்கி
ஆகியவை இந்த முடிவை அறிவித்துள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 2020 முதல் இதை அமல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் இருக்கும் மக்கள் அதிகளவில் பலன் பெற உள்ளனர். காரணம் பொதுத்துறை வங்கிகளில் அதிகம் கணக்கு வைத்துள்ளவர்கள் இப்பிரிவினர் தான்.