ஜி ஸ்கொயர் "வீட்டு மனை உங்களுடையது; இஎம்ஐ எங்களுடையது" திட்டம் Plot EMI
சென்னை, 25 ஜூலை 2025- தென்னிந்தியாவின் மிகப்பெரிய
மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி
ஸ்கொயர் நிறுவனத்தின், தனித்துவமான "ப்ளாட் இஸ் யுவர்ஸ்; இஎம்ஐ இஸ் அவர்ஸ்" என்னும் தவணை முறையில் வீட்டு மனைகளை வாங்கும்
திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன் அடைந்துவுள்ளர்கள்.வாடிக்கையாளர்களின் வீட்டு மனை வாங்கும் கனவை
நனவாக்கும் விதமாக மாநிலத்தில் முதல் முறையாக தவணை முறையில் வீட்டு மனை வாங்கும்
திட்டத்தை அறிமுகம் செய்து ரியல் எஸ்டேட் துறையில் புதியதொரு சாதனையை ஜி ஸ்கொயர் படைத்துள்ளது.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு
விருப்பமான வீட்டு மனைகளை வட்டியில்லா தவணை முறையில் வரும் 2026 ஆங்கிலப்
புத்தாண்டு வரை வாங்கலாம். இடைக் காலத்திற்கான தவணைகளுக்கு ஜி ஸ்கொயர்
பொறுப்பேற்பதால், வாடிக்கையாளர்கள் பணத்தை உடனடியாக திருப்பிச்
செலுத்தும் கவலை இல்லாமல் தங்களுக்கு விருப்பமான வீடுகளை கட்டுவதிலும் கவனம்
செலுத்தலாம்.
இந்த சலுகை தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மைசூர் மற்றும் பல முக்கிய
நகரங்களில் உள்ள அனைத்து ஜி ஸ்கொயர் வீட்டு மனை திட்டங்களுக்கும் பொருந்தும். இதன்
மூலம் நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜி ஸ்கொயர் எளிமையாக்கி உள்ளது. இந்த வாய்ப்பைப் பெறுவதற்கான கடைசி
தேதி வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி ஆகும்.
இது குறித்து ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனத்தின்
நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் ஒரு வீட்டை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்
என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் நடுத்தர மக்களின் நிதி சுமையை
குறைத்து அவர்கள் தாங்கள் விரும்பிய வீட்டு மனையை வாங்குவதற்காக எங்களின் தவணை
முறை வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எங்களின் வீட்டு மனை
திட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம்
இருந்து கிடைத்த அமோகமான வரவேற்பு, இதுபோன்ற புதுமை திட்டங்களை அறிமுகம் செய்ய
தூண்டுகிறது என்று தெரிவித்தார்.
நீங்கள் முதல் முறையாக வீட்டு மனை வாங்குபவராக இருந்தாலும் சரி அல்லது
முதலீட்டாளராக இருந்தாலும் சரி, ஜி ஸ்கொயரின் தவணை முறை
திட்டம் அதை உங்களுக்கு எளிதாக்குகிறது.