மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னை ரியல் எஸ்டேட்: எந்த திசையில் வளர்ச்சி அதிகம்? கிரெடாய் சென்னை ‘ரா’ அறிக்கையில் தகவல் Chennai real estate

நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில்

ஏற்ற இறக்கத்துடன் இருந்த சென்னை ரியல் எஸ்டேட் துறை: கிரெடாய் சென்னை 'ரா' அறிக்கையில் தகவல்

 

சென்னை, செப். 2- 2024: நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கான 2வது காலாண்டில் சென்னை ரியல் எஸ்டேட் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை கிரெடாய் தனது 'ரா' அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதன் வளர்ச்சி மற்றும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வு அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.


 

இது குறித்து விவரம் வருமாறு:-

 

இந்த ஆய்வறிக்கையின் படி, 2வது காலாண்டில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் 65 புதிய திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 65 சதவீத திட்டங்கள் கிரெடாய் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் ஆகும். இருப்பினும், கடந்த நிதி ஆண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 34 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இந்தக் காலத்தில் 98 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. தற்போது குறைந்துள்ளதன் காரணமாக அது இந்த துறையின் மந்த நிலையை காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, நகரில் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக
உள்ளது.

 

கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 6,435 வீடுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது 8,793 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட யூனிட்களில் 90 யூனிட்கள் கிரெடாய் உறுப்பினர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இது சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் அவர்களின் குறிப்பிடத்தக்க செல்வாக்கை காட்டுகிறது


மொத்தத் திட்டங்களில் 29 சதவீதம் மத்திய சென்னையிலும், தெற்கு புறநகர்ப் பகுதிகள் 28 சதவீத திட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் புதிய வீடுகளை அதாவது 45 சதவீதம் வாங்கி உள்ளனர். இந்தப் போக்கு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் மத்தியில் தெற்கு புறநகர்ப் பகுதிகளின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மேற்கு புறநகர் பகுதியைப் பொறுத்தவரை இது 19 சதவீதமாக உள்ளது.

 

இருப்பினும், இந்த துறை சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் குறித்தும் இந்த அறிக்கை தெளிவாக கூறியுள்ளது. ஜூன் 2024 நிலவரப்படி, முடிக்கப்பட்ட திட்டங்களில் விற்கப்படாத குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கையானது 7,989ஆக உள்ளது. இது இந்த துறையின் மந்தமான வளர்ச்சியை காட்டுகிறது. இந்த காலக்கட்டத்தில் 2,597 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 5,498  யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 53 சதவீதம் குறைவாகும்விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவானது, புதிய திட்டங்களை துவக்க கட்டுமான நிறுவனங்களை சிந்திக்க வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீட்டு மனை திட்டங்களின் மொத்த எண்ணிக்கையை பார்க்கும்போது அது மிகுந்த கவலை அளிக்கிறது. குடியிருப்புப் பதிவுகளின் அதிகரிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், திட்டத் துவக்கங்கள் மற்றும் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதுள்ள சவால்களை சமாளிக்க கவனம் செலுத்துவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒழுங்குமுறை இடையூறுகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், அரசாங்கம் மற்றும் தொழில்துறையினரிடையே சிறப்பான ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும் மட்டுமே இந்த துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்தார்.

 

இது குறித்து கிரெடாய் சென்னை செயலாளர் அஸ்லம் முகமது கூறுகையில், கட்டுமான நிறுவனங்கள் பெரிய திட்டங்களுடன் முன்னேறும் போது, விற்பனையாகாத யூனிட்களை பார்க்கையில் அது மிகுந்த கவலை அளிக்கிறது. வாங்குபவர்களின் வளர்ந்து வரும் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் புதிய முன்னேற்றங்களை நாம் உருவாக்குவது அவசியம் ஆகும் என்று தெரிவித்தார்.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...