மொத்தப் பக்கக்காட்சிகள்

மழை வெள்ளத்தில் மூழ்கிய கார் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி..? Car Insurance

மழை வெள்ளத்தில் மூழ்கிய கார்-க்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி..?

 மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது, மழை வெள்ளமாகச் செல்லும் வீடியோ பயமுறுத்துகிறது.

அதிலும் குறிப்பாக ஒரு வீடியோவில் மழை வெள்ளம் சாலையில் நிற்கவைக்கப்பட்ட கார்களை அடித்துச் செல்லும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கார், பைக் முதல் பல்வேறு சொத்துக்களுக்கு அதிகப்படியான சேதம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய அல்லது இன்ஜின் வரையில் தண்ணீர் இருக்கும் வாகனங்கள், மழை வெள்ளத்தால் டேமேஜ் ஆன கார், பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

பருவமழை காரணமாக ஒரு நபரின் கார் தண்ணீரில் மூழ்கியிருந்தால், இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது ஒரு முக்கியமான பணி. அனைத்து கார்களும், பைக்குகளுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருக்கும் காரணத்தால் மழை வெள்ளத்தால் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளுக்குக் கட்டாயம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு இருக்கும். இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய இதைப் பாலோ பண்ணுங்க.

நீரில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்: முதலும் முக்கியமான பணி, உங்கள் நீரில் மூழ்கிய காரை பதட்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.

 காரின் இன்ஜினில் மழைநீர் சென்று இருந்தால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது காரின் எஞ்சினை சேதப்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும்.

அப்படி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து இன்ஜின் சேதம் அடைந்தால் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது.

 அத்தகைய நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, நீரில் மூழ்கிய காரின் புகைப்படங்களைக் கிளிக் செய்வது.

தண்ணீரில் மூழ்கியிருக்கும் காரை புகைப்படம், காரில் சேதமடைந்த பகுதியை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். புகைப்படம் எடுப்பது கட்டாயமில்லை என்றாலும், இந்த நேரத்தில் ஆதாரங்களைச் சேகரிப்பு பலனளிக்கும், ஏனெனில் அவை பின்னர் ஆதாரமாகக் காட்ட உதவும்.

காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்: பொதுவாக மழை வெள்ளம் இருந்தால் கார், பைக் அதிகப்படியான சேதத்தை எதிர்கொள்ளும். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு நிறையக் கிளைம் கோரிக்கை வரும், 

எனவே, உங்கள் காப்பீட்டாளருக்கு விரைவாகத் தகவல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வாகனத்தைச் சேவை மையத்திற்கு அனுப்புவது சிறந்தது. காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்க, நீங்கள் அவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்களை அழைக்கலாம் அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கார் இன்சூரன்ஸ் க்ளைம் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிக்கலாம் அல்லது மொபைல் வாயிலாகவும் கார் இன்சூரன்ஸ் கிளைம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். 

ஈமெயில் கார் இன்சூரன்ஸ் கிளைம் அனுப்பும் போது புகைப்படங்களை இணைக்கலாம், நீங்கள் காப்பிட்டு நிறுவனத்திற்குத் தெரிவித்த பிறகு, கிளைம் டிக்கெட் எண்ணை மறக்காமல் பெறவும்.

காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிப்பதில் தாமதம், காரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பும் செயல்முறை தாமதம் ஆகியவை தண்ணீரில் மிதக்கும் உங்கள் காருக்கு பாதிப்பை அதிகரிக்கும். இதன் விளைவாகக் கார் அல்லது பைக் நீண்ட காலச் சேதம் ஏற்படுகிறது. 

பாலிசி ஆவணங்கள் :

 வெள்ளத்தில் உங்கள் ஆவணங்களை இழந்தாலோ அல்லது இன்சூரன்ஸ் ஆவணங்களைத் தொலைத்துவிட்டாலோ கவலைப்பட வேண்டாம்.

 ஏனென்றால் மின்னஞ்சலில் பாலிசியின் ஆவணம் கட்டாயம் இருக்கும். ஈமெயிலில் இல்லை என்றாலும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, உங்கள் பாலிசி விவரங்களைப் பெறுவதற்கு உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் பிற தேவையான தகவல்களைக் கொடுத்து விவரங்களைக் பெறலாம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம்..! பட்டியல் இதோ...!

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன! ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் ...