மொத்தப் பக்கக்காட்சிகள்

பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்? ABSLMF

பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்? ABSLMF


நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்  (ABSLMF) இணைந்து 'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!' என்ற முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2023 அக்டோபர் 28-ம் தேதி திருவாரூரிலும், அக்டோபர் 29-ம் தேதி மயிலாடுதுறையிலும் நடத்தின.

இந்தக் கூட்டங்களில், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் தலைவர் திரு. எஸ்.குருராஜ் பேசும்போதுதான் ஏன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும், மற்ற நிதி நிறுவனங்களிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்தும் விளக்கமாக அவர் எடுத்துச் சொன்னார்.

ஈக்விட்டி ஃபண்டுகள்..!

''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட  நிதி, எந்தெந்த நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன என மாதந்தோறும் வெளிப்படை யாக அறிவிக்கின்றன.  பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் (ஈக்விட்டி ஃபண்டுகள்) என்பவை, முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிற ஒரு திட்டமாகும். இதில் அதிக ரிஸ்க் என்பதால் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்குதான் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.


தங்கத்தின் தேவைக்கு..!


அதிக ரிஸ்க் வேண்டாம் என்பவர்கள் நீண்ட கால தேவைக்கு பங்குச் சந்தை குறியீடுகளின் அடிப்படையில் இண்டெக்ஸ் ஃபண்டுகளிலும், குறுகிய கால பணத் தேவைக்குக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்; தங்கத்தின் தேவைக்கு கோல்டு இ.டி.எஃப்கள், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்" என்றார் குருராஜ்.

பணவீக்க விகிதத்தைவிட நல்ல வருமானம்..!


நிதி நிபுணர் திரு. வ.நாகப்பன், ''பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு அன்றாடம் மாறக்கூடியது. கூடவோ, குறையவோ செய்யலாம். ஆனால், ஐந்து ஆண்டு களுக்கு மேற்பட்ட காலத்தில் அவை பணவீக்க விகிதத்தை (Inflation Rate) விட நல்ல வருமானம் கொடுக்கக் கூடியவை ஆகும்.

பங்குச் சந்தை வீழ்ச்சியில் தரமான நிறுவனங்களின் பங்குகளைக்கூட குறைந்த விலையில் வாங்கலாம். எனவே, நல்ல நிறுவனப் பங்குகளின் விலை குறையும் போது வாங்கினால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தங்கத்திலும் அதிக ரிஸ்க் உண்டு. பல ஆண்டுகளாகத் தங்கத்தின் விலை ஏறாமல்கூட இருந்திருக்கிறது. தங்கத்தில் நகையாக முதலீடு செய்யும்போது செய்கூலி, சேதாரம் என சுமார் 15% தொகை போய்விடும். இதனால், விலை உயர்ந்தாலும் பெரிய லாபம் இல்லை.

தங்கத்தை டிஜிட்டல் வடிவில் கோல்டு .டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு பாண்டு என முதலீடு செய்தால் லாபத்தை முழுமையாக அறுவடை செய்ய முடியும். ரிசர்வ் வங்கி வெளியிடும் சாவரின் பாண்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 2.5% வட்டி தரப்படுகிறது. விலை உயர்வு தவிர, இது கூடுதல் லாபம் ஆகும். முதலீடு செய்து 8 ஆண்டுகள் கழித்து பணத்தை முதிர்வின் போது பெற்றால் லாபத்துக்கு வருமான வரி இல்லை'' என்றார்.

ஹைபிரிட் ஃபண்ட்..!


'
ஹைபிரிட் ஃபண்ட் என்றால் என்ன?'' என வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் திரு. க.சுவாமிநாதன், ''முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படுபவை ஹைபிரிட் ஃபண்டுகளாகும். இதில் ஈக்விட்டி ஃபண்டுகளைவிட ரிஸ்க் குறைவாக இருக்கும்" என்று விளக்கம் அளித்தார்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...